கேரவனை விட்டு கீழே இறங்காதவர் கேள்வி கேட்பதா?
புதிதாக கட்சி துவங்கிய நடிகர் விஜய், அடுத்து வந்த தேர்தல்களில் போட்டியிடாமல் ஒதுங்கி நின்று வேடிக்கை பார்த்தவர். ஆனால், நேரடியாக முதல்வராக ஆசைப்பட்டு, ஏதேதோ பேசி வருகிறார். பரந்துார் விமான நிலையத்துக்காக நிலம் எடுக்கும் பிரச்னையில், முதல்வர் ஏன் நேரடியாகச் சென்று மக்களை பார்க்கவில்லை என கேட்டிருக்கிறார். ஆனால், அவர் பரந்துாருக்கு சென்ற போது, கேரவனில் இருந்து கீழே இறங்கவும் இல்லை; மக்களை நேரடியாக சந்திக்கவும் இல்லை. அடுத்தவருக்கு ஆலோசனை சொல்லும் முன், தன் உயரம், நிலை என்ன என்பதை தெரிந்து சொல்ல வேண்டும். கத்துக்குட்டித்தனமாக எதையும் சொல்லக்கூடாது. அவருடைய மதிப்பீடு எல்லாவற்றிலும் தவறாக உள்ளது. -கோவி.செழியன், அமைச்சர், தி.மு.க.,