உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / சென்னை விமான நிலையத்தில் பயணியரை துரத்தும் நாய்கள்!

சென்னை விமான நிலையத்தில் பயணியரை துரத்தும் நாய்கள்!

சென்னை: சென்னை விமான நிலைய வளாகத்தில் தெரு நாய்களின் தொல்லை அதிகரித்துள்ளது. குறிப்பாக, சர்வதேச வருகை முனைய 'ஏ-5' நுழைவாயில் பகுதியில் உடைமைகளுடன் வரும் பயணியரை, விடாமல் துரத்துகின்றன. இதனால், பயணியர் முகம் சுளிக்கும் நிலை ஏற்படுகிறது.நாய்கள் நடமாட்டத்தை கட்டுப்படுத்தாமல், சம்பந்தப்பட்ட மாநகராட்சி அதிகாரிகள் அலட்சியம் காட்டுவதாக புகார் எழுந்துள்ளது. இது குறித்து பயணியர் கூறியதாவது: சர்வதேச முனைய வளாகங்கள் மற்றும் விமான நிலைய மெட்ரோ பின்புறத்தில், நாய்கள் அதிகமாக சுற்றித்திரிகின்றன. உடைமைகள் எடுத்து வரும் போது, நாய்கள் தொடர்ந்து துரத்துகின்றன. 'ட்ராலி' தள்ளிக்கொண்டு செல்ல முடியாமல், பதற்றத்தில் தடுமாறி விழுந்து காயம் ஏற்படுகிறது. குறிப்பாக, முதியவர்கள் அதிகம் பயப்படுகின்றனர். ஆக்ரோஷமாக திரியும் நாய்களை பார்க்கவே பயமாக இருக்கிறது. நாய்கள் தொல்லையை, அதிகாரிகள் கட்டுப்படுத்த வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.கடந்தாண்டு, ப்ளூ கிராஸ் மற்றும் விலங்குகள் நல பாதுகாப்பு அமைப்புடன் இணைந்து, விமான நிலையத்தில் சுற்றித்திரியும் 40க்கும் மேற்பட்ட நாய்களுக்கு இனவிருத்தி மற்றும் ரேபிஸ் தடுப்பூசி போடப்பட்டது. அதன் பின் கண்டுகொள்ளாமல் விட்டதால், சமீப நாட்களாக நாய்களின் தொல்லை அதிகரித்துள்ளது.

தனி ஊழியர்கள் இல்லை

நாய்கள் தொல்லை குறித்த புகார்களுக்கு உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படுகிறது. 'எக்ஸ்' தளத்தில் பதிவிடும் புகார் குறித்து, மாநகராட்சி அதிகாரிகளிடம் தெரிவித்து, நாய்கள் அகற்றப்படுகின்றன. ஆனால் அவை மீண்டும் வந்துவிடுகின்றன. நாய்களை விரட்டுவதற்கென, நிர்வாகம் யாரையும் தனியாக நியமிக்கவில்லை.- விமான நிலைய அதிகாரிகள்

நிரந்தரமாக அகற்றலாம்

விமான நிலைய அதிகாரிகள் தகவல் தரும்போது, மாநகராட்சி சார்பில் நாய்களை பிடித்து இனவிருத்தி மற்றும் தடுப்பூசி போடப்படுகிறது. கடந்த வாரத்தில்கூட சுற்றித்திரியும் நாய்கள் பிடிக்கப்பட்டன. பிடித்த இடத்தில் தான் நாய்களை மீண்டும் விடமுடியும். நாங்கள் முனையங்களில் விடுவதில்லை. அவை உள்ளே சென்றுவிடுகின்றன. விமான நிலைய அதிகாரிகள், விலங்கு நல வாரியத்திடம் சிறப்பு அனுமதி பெற்று, நாய்களை நிரந்தரமாக அகற்ற முடியும்.- மாநகராட்சி அதிகாரிகள்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 15 )

dhamo tester
மார் 19, 2025 22:20

இங்கு நாய்க்கு எதிராக பேசுபவர்கள். ஒரு கேள்வி - தினம் தினம் கொள்ளை கொள்ளை பாலியல் பிரச்சனைகளை செய்பவர்கள் யார்? நாய்களா? அப்போ அந்த தவறு செய்த மனிதனை மட்டும் பிடிக்கிறீர்கள்? அதே சில நாய்கள் செய்தால் ஒட்டு மொத்தமாக நாய்களை குறை கூறுகரீகள். எப்போ மனிதன் சுய ஒழுக்கம் போய் விட்டதோ. அங்கே சமூக சீரழிவு, பிற பிராணிகள் மீதான வெறுப்பு கவலை தரும் விசயமாக மாறிவிட்டது


Seekayyes
மார் 18, 2025 12:41

ஆக சென்னை விமான நிலையம் சேவை தரமற்று இயங்குகிறது. நவீன உலகத்தில் திறனற்ற சேவைகள் விரைவில் காணாமல் போய்விடும்.


Ramesh Sargam
மார் 18, 2025 12:10

திமுக நாய்கள் அடிக்கடி சென்னை விமானநிலையத்தில் இருந்து பல இடங்களுக்கு பயணிக்கின்றன. அவர்களுடன் அவர்கள் தெரு நாய்கள் வந்து வழியனுப்பிவிட்டு, விமான நிலையத்திலேயே தங்கி விடுகின்றன.


Oru Indiyan
மார் 18, 2025 11:23

கோயம்பேடு மெட்ரோ நிலையத்தில் வெறி பிடித்த நாய்கள் திரிகின்றன. மாநகராட்சி என்ன செய்கிறது. கோயம்பேடு காவல் நிலையம் அருகில் நூற்றுக்கணக்கான மிக பெரிய எருமை மாடுகள் ஜாலியாக திரிகின்றன. எத்தனை பேர் அடிபட்டாலும் கவலை இல்லை இந்த கேடு கெட்ட மாநகராட்சிக்கு.


RAAJ68
மார் 18, 2025 11:22

நாய்களின் தொல்லை அதிகமாக இருக்கும் என்று பஞ்சாங்கம் சொல்வதாக கூறுவார்கள். தெருவுக்குத் தெரு ஐம்பது நாய்கள் உள்ளன. சுற்றுச்சுவர் ஏரி வீட்டுக்குள் வந்து பார்க்கின் ஏரியாவில் அசிங்கம் செய்கிறது இருசக்கர வாகனங்களின் இருக்கைகளை கடித்து சேதப்படுத்துகிறது. புகார் செய்தால் பிடித்து கொண்டு போகிறார்கள். அவைகளுக்கு குடும்ப கட்டுப்பாடு செய்து மறுபடியும் இங்கே விட்டுவிடுகிறார்கள். இது அரசின் உத்தரவாம். நன்றாக வளர்ந்த நாய்களை மட்டுமே பிடிக்க உத்தரவு ஓரளவு வளர்ந்த நாய்களை பிடிக்கக் கூடாது என்று அரசு ஆணை. நாங்கள் வசிக்கும் தெருவிலேயே எங்களை துரத்துகிறது. பிடித்துக் கொண்டு போய் மறுபடியும் இங்கேயே கொண்டு விடுவதற்கு எதற்கு பிடிக்க வேண்டும். சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு என்று நேரு கூறுகிறார் சுப்ரீம் கோர்ட்டு நீதிபதியை நாய் கடித்தால் அப்போது தெரியும்.


dhamo tester
மார் 19, 2025 22:10

ஆம் அதே போல் தினம் தினம் கொள்ளை கொள்ளை பாலியல் பிரச்சனைகளை கண்டு கொள்ளாமல் இருக்கிறோமோ. இதையும் கண்டு கொள்ள வேண்டாம்


ஆரூர் ரங்
மார் 18, 2025 09:26

எந்த வளர்ந்த நாட்டிலும் தெரு நாய்கள் கிடையாது. முக்கால்வாசி தெரு நாய்கள் நோய்வாய்ப்பட்டவை. காட்டில் விட்டால் அங்கும் நோய்களைப் பரப்பும். நாய்க்கடி தடுப்பூசி கம்பெனிகள் பிழைக்கவே அவை தெருவில் திரிய அனுமதிக்கப்படுகின்றன? கருத்தடை மூலம் அவற்றின் எண்ணிக்கையை கட்டுப்படுத்துதல் இயலாத காரியம். நாய்களின் மீது அளவற்ற கருணை காட்டும் நீதிபதிகள் அதனால் கடிபடும் அப்பாவி மனிதர்களின் மீதும் சற்று இரக்கம் காட்ட வேண்டும்.


dhamo tester
மார் 19, 2025 22:11

ஆம். மனிதர்களுக்கு மட்டும் தான் எல்லாம் உரிமைகளும் உள்ளது எந்த விதமான தவறுகள் செய்வதற்கு..


Svs Yaadum oore
மார் 18, 2025 08:50

விடியல் ஆட்சியில் கடந்த ஆண்டில் 4.80 லட்சம் பேர் நாய்க்கடியால் பாதிக்கப்பட்டு உள்ளனர்....விழிப்புணர்வு இல்லாததால், முறையாக சிகிச்சை பெறாமல், சிலர் ரேபிஸ் நோய் பாதித்து உயிரிழக்கின்றனர் என்று விடியல் .....இது என்னையா அரசாங்கம்?? ....ஊரெங்கும் நாய்கள் பெறுக விட்டு அதில் கொள்ளை ...தெரு நாய்களை கார்பொரேஷன் முனிசிபாலிட்டி கட்டுப்படுத்துவது இல்லை ....நாய் கடித்த பிறகு ஊசி போடவில்லை என்று அடுத்தவனை குறை சொல்றான் ....ஊசி விற்பதில் மருந்து கம்பெனி காரனிடம் கமிஷனா ??....


Svs Yaadum oore
மார் 18, 2025 08:47

நாய்கள் கருத்தடை முறையாக செயல்படுவதில்லை ....இந்த பட்ஜெட்டில் விடியல் 20 கோடிகள் அதற்கு ஒதுக்கீடு .....அந்த பணம் எங்கே போகிறது?? ....இந்த ரேபிஸ் தடுப்பூசி மட்டும் வருஷம் 3000 கோடிகள் விற்பனை ...அதில் மருந்து கம்பெனி காரனிடம் கமிஷன் .... கமிஷன் வாங்க நாய்களை பெருக விட்டு பிறகு தடுப்பூசி போடவில்லை என்று அடுத்தவனை குறை சொல்வது ....எல்லாம் விடியல் லஞ்ச லாவண்யம் கொள்ளை ....ரேபிஸ் நோயால் இறப்பது மிக மிக கொடுமையான விஷயம் .....


Sampath
மார் 18, 2025 08:34

பிடித்த நாய்களை மீண்டும் அங்கேயே விடுவதற்கு பதில், பிடித்த நாய்களை மிருககாட்சி சாலையில் உள்ள மிருகங்களுக்கு உணவாக அளிக்கலாம். நாய்தொல்லையும் தீரும் அரசுக்கு மாமிசம் வாங்கும் செலவும் குறையும்.


ravi subramanian
மார் 18, 2025 08:55

Good idea.


Nellai tamilan
மார் 18, 2025 12:29

மிகவும் நல்ல யோசனை. அரசு செயல்படுத்துமா?


R K Raman
மார் 18, 2025 16:44

இல்லாவிட்டால் பேட்டை அமைப்பின் உறுப்பினர்கள் மற்றும் அனுதாபிகள் வீட்டில் கொண்டு விட்டு விட்டு வந்து விடலாம்


dhamo tester
மார் 19, 2025 22:13

ஒட்டுமொத்தமாக மனிதர்களை பிடித்து நிலவில் விட்டு விடுங்கள் அங்கு எந்த விலங்களும் இல்லை


சமீபத்திய செய்தி