உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / கொள்ளையடிக்கும் கூட்டம் பின்னால் போய்விடாதீர்கள்! நயினார் நாகேந்திரன்

கொள்ளையடிக்கும் கூட்டம் பின்னால் போய்விடாதீர்கள்! நயினார் நாகேந்திரன்

பல்லடம்: ''கொள்ளையடிக்கும் கூட்டத்தின் பின்னால் போய்விடாதீர்கள்'' என, செஞ்சேரிமலையில் நடந்த விவசாயிகள் சந்திப்பு கூட்டத்தில், பா.ஜ. மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் பேசினார். 'தமிழகம் தலை நிமிர' என்ற தலைப்பில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வரும் பா.ஜ. மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரனின், விவசாயிகளுடனான சந்திப்பு கூட்டம், கோவை மாவட்டம், சுல்தான்பேட்டை ஒன்றியத்துக்கு உட்பட்ட, செஞ்சேரிமலையில் நேற்று நடந்தது.

அதில், அவர் பேசியதாவது:

தமிழகம் முழுவதும் உள்ள விவசாயிகள், தொழில் துறையினர், பொதுமக்களை சந்தித்து, அவர்களது நிறை குறைகளை கேட்டறிந்து, அதன்படி, மாநில அளவிலான பொதுக்கூட்டத்தில், அவற்றுக்கான தீர்வு காண்பது குறித்து ஆலோசிக்கவே, 'தமிழகம் தலை நிமிர' என்ற சுற்றுப்பயணம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. விவசாயிகளுக்கு ஏற்படும் பல்வேறு பிரச்னைகள் குறித்து, ஏற்கனவே சட்டசபை கூட்டத்தில் பேசப்பட்டது. ஆனால், தி.மு.க. அரசு அதைப் பற்றியெல்லாம் கவலை கொள்வதாக தெரியவில்லை. கொள்ளையடிக்கும் கூட்டத்தின் பின்னாலேயே தமிழக மக்கள் போய்விடக்கூடாது. விவசாயிகளின் அனைத்து பிரச்னைகளுக்கும் தீர்வு காணும் வகையில், மத்திய வேளாண் துறை அமைச்சரை இங்கு அழைத்து வரவோ; அல்லது நீங்கள் விரும்பினால், டெல்லிக்கு உங்களை அழைத்துச் செல்லவோ நடவடிக்கை எடுக்கப்படும். மத்திய அரசு சார்ந்த விஷயங்களை செய்து தர உறுதியாக நடவடிக்கை எடுக்கப்படும். ஆளும் தி.மு.க. அரசு மக்கள் மீது அக்கறையுடன் செயல்பட்டிருந்தால், நிச்சயமாக ஆனைமலையாறு- நல்லாறு திட்டத்தை செயல்படுத்தி இருக்க முடியும். ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பின், நிச்சயமாக, ஆனைமலையாறு- நல்லாறு திட்டத்தை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 20 )

திகழ்ஓவியன்
நவ 07, 2025 12:05

4 கோடி சார் கண்ணாடி பார்த்து பேசுகிறீர்கள்


Ramesh Aravamudhan
நவ 07, 2025 10:29

BJP MUST EMERGE THIS 2026 ELECTION THEY SHOULD WORK HARD AND GET THE FRUIT. BECAUSE TVK will play important role. So we must be careful


Rajkumar
நவ 07, 2025 09:14

நீங்க யாரு சார்...புல்லரிக்குது சார்..


திகழ்ஓவியன்
நவ 07, 2025 13:00

அதாங்க எழும்பூர் RLY ஸ்டேஷன் 4 கோடி புகழ் , இவர் தலைவர் CAG சொன்ன 7650000000000000000 புகழ்


Mario
நவ 07, 2025 09:13

பிஜேபி பின்னால் போய்விடாதீர்கள் தமிழக மக்கள்


Raja k
நவ 07, 2025 09:02

உத்தமர்கள் சொல்கிறார்கள் கேட்டுக்கோங்க


VENKATASUBRAMANIAN
நவ 07, 2025 08:06

எல்லாம் சரி. இதை மக்களிடம் சென்று கூறுங்கள். உங்கள் தொண்டர்கள் வீடு வீடாக சென்று புரிய வையுங்கள். சும்மா மேடையில் பேசினால் மட்டுமே போதாது.


D Natarajan
நவ 07, 2025 08:02

தமிழக மக்கள் 200, பிரியாணி, சரக்கு இதற்க்கு விலை போகக்கூடாது . 2026 ஒன்று தான் தீர்வு.


baala
நவ 07, 2025 09:35

200 ரூபாய் அப்ளை செய்வது எப்படி என்று சொல்லவும்.


எவர்கிங்
நவ 07, 2025 07:24

நைனார் தலைமை பாஜாக வை இருண்ட காலத்துக்கு அழைத்துச்செல்லும்


தங்கராஜ்
நவ 07, 2025 07:07

ஒன்னா? ரெண்டா? பரம்பரை பரம்பரையாக கொள்ளை? அப்பா மகன் மகள் பேரன் மாமன் மச்சான் என்று ரவுண்ட் கட்டி கொள்ளை. பார்த்து நடக்கணும் மக்களே.


திகழ்ஓவியன்
நவ 07, 2025 12:07

பருவத்தே பயிர் செய் இல்லை என்றால் இப்படி அடுத்தவன் குடுமபம் பார்த்து வயிறு எரிய வேண்டியது தான்


ஜெய்ஹிந்த்புரம்
நவ 07, 2025 07:03

அஜித் பவார் மகனால் மஹா., முதல்வர் பட்னவிசுக்கு சிக்கல் பல கோடி மதிப்புள்ள நிலத்துக்கு சொற்ப விலை முத்திரைத்தாள் கட்டணத்தால் அம்பலமான உண்மை


vivek
நவ 07, 2025 07:29

திராவிட சொம்புகள் இங்கு உள்ள பிரச்சினைகளை சொன்னால் உபி பீகார் ஓடுதுங்க ...மக்கள் ஒரே அடியா விரட்ட போறாங்க


முக்கிய வீடியோ