குடை கொண்டு போக மறந்துடாதீங்க! 14 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு; உங்க ஊர் இருக்குதா பாருங்க!
சென்னை: தமிழகத்தில் இன்று (அக்.,25) 14 மாவட்டங்களிலும், நாளை (அக்.,26) 9 மாவட்டங்களிலும் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.இது குறித்து சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: திண்டுக்கல், தேனி, தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, திருப்பூர், கரூர், திருச்சி, நாமக்கல், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகை,மயிலாடுதுறை ஆகிய 14 மாவட்டங்களில் இன்று (அக்.,25) கனமழைக்கு வாய்ப்புள்ளது.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=58nbnatf&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0நாளை (அக்.,26)
* தேனி* தென்காசி* திருநெல்வேலி* கன்னியாகுமரி* தூத்துக்குடி* மதுரை* சிவகங்கை* ராமநாதபுரம்* விருதுநகர் ஆகிய 9 மாவட்டங்களில் நாளை கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.இன்று முதல் அக்டோபர் 29ம் தேதி வரை தமிழகத்தில் ஒருசில இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு உண்டு. சென்னையை பொறுத்த வரை அடுத்த 48 மணி நேரத்துக்கு இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும். இன்று காலை 6.30 மணி வரை பதிவான மழை விவரம், மில்லி மீட்டரில் வருமாறு:சேலம் மாவட்டம்
ஆனைமடுவு அணை 153 வீரகனூர் 29 ஏத்தாப்பூர் 22 சேலம் 16.6 கெங்கவல்லி 14 தலைவாசல் 13 சிவகங்கை மாவட்டம்
திருப்புவனம் 76.2 காரைக்குடி 58 சிங்கம்புணரி 32.4 திருப்பத்தூர் 32 தேவகோட்டை 31.6 சிவகங்கை 29அரியலூர் மாவட்டம்
சுத்தமல்லி அணை 102 குருவாடி 78 அரியலூர் 70 கோவை மாவட்டம்
மேட்டுப்பாளையம் 55.4 தொண்டாமுத்தூர் 22 சின்னக்கல்லார் 18 தர்மபுரி மாவட்டம்
பாப்பிரெட்டிபட்டி 40 ஒகேனக்கல் வனப்பகுதி 18.4 திண்டுக்கல் மாவட்டம்
நத்தம் 66.5 நிலக்கோட்டை 22.2 ஈரோடு மாவட்டம்
எலந்த குட்டை மேடு 33.4 கன்னியாகுமரி மாவட்டம்
கோழிப்போர்விளை 110.6 தக்கலை 106.4இரணியல் 98.6 குளச்சல் 76 குருந்தன்கோடு 72.6 மயிலாடி 65.6 கரூர் மாவட்டம்
கிருஷ்ணராயபுரம் 33 மாயனூர் 24.4 தோகைமலை 20 குளித்தலை 10.6கிருஷ்ணகிரி மாவட்டம்
ராயக்கோட்டை 28 நெடுங்கல் 26 பெரம்பலூர் மாவட்டம்
செட்டிக்குளம் 53 வேப்பந்தட்டை 53 பெரம்பலூர் 46 பாடாலூர் 45இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.