உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / கனவுகளை குழந்தைகள் மேல் ஏற்றாதீங்க: முதல்வர் அறிவுரை

கனவுகளை குழந்தைகள் மேல் ஏற்றாதீங்க: முதல்வர் அறிவுரை

சென்னை:'நமது கனவுகளை குழந்தைகள் மேல் ஏற்றாமல், அவர்களது கனவுகள் ஈடேற துணை நிற்போம்' என, முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.குழந்தைகள் தினத்தையொட்டி, அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:மழலை மாறாத சிரிப்புடன், கற்பிதங்கள் இல்லா உள்ளத்துடன், உலகையும், சக மனிதர்களையும் எதிர்கொள்ளும் குழந்தைகளுக்கு, முன்மாதிரியாக நம்மை வடிவமைத்து கொள்வது, ஒவ்வொரு பொறுப்புள்ள மனிதரின் கடமை. நமது கனவுகளை, குழந்தைகள் மேல் ஏற்றாமல், அவர்களது கனவுகள் ஈடேற, துணை நிற்போம். வளமான, நலமான, பசுமையான உலகில் குழந்தைகளை வளர்ப்போம் என்ற உறுதியை, குழந்தைகள் தின வாழ்த்தாக தெரிவிப்போம். நமது உலகையும், வாழ்வையும் ஒளி பெற செய்யும் குழந்தைகளுக்கு, எனது அன்பும் வாழ்த்துகளும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை