உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / அண்ணாமலையை கண்டுகொள்ளாதீங்க!

அண்ணாமலையை கண்டுகொள்ளாதீங்க!

சென்னை:திருவாரூர் மாவட்டம், மன்னார்குடியில் தொழில் துறை அமைச்சர் ராஜா அளித்த பேட்டி:எதிர் அணியில், கதவு, ஜன்னல் என அனைத்தும் திறந்து வைத்துள்ளனர். யாரும் போகவில்லை; காற்று மட்டும் தான் வருகிறது. ஓட்டுப்பதிவு இயந்திரத்தில் என்ன கோளாறு செய்தாலும், தமிழகம், புதுச்சேரியில் உள்ள, 40 தொகுதிகளிலும் தி.மு.க., கூட்டணி வெற்றிபெறும்.சாலையில் சிறு குழந்தை விளையாடிக் கொண்டிருக்கும் போது, நாம் அதை கடந்து செல்வோம். சிலர் நம் கவனத்தை ஈர்க்க சீண்டிக்கொண்டே இருப்பர். அந்த மாதிரி சிலர் செய்து கொண்டிருப்பர். தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலையை கண்டுகொள்ளாமல் கடந்து செல்ல வேண்டும். நமக்கு மக்கள் பணி இருக்கிறது. தமிழகம், இந்தியாவின் வளர்ச்சி பற்றி யோசித்து கொண்டிருக்கிறோம்.இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









புதிய வீடியோ