உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / தேர்தல் வெற்றிக்காக தரப்படும் இலவசங்கள்: யோசித்து செயல்பட நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் அறிவுரை

தேர்தல் வெற்றிக்காக தரப்படும் இலவசங்கள்: யோசித்து செயல்பட நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் அறிவுரை

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: 'என்னை தேர்தலில் வெற்றி பெற வைப்பதற்காக, உங்களுக்கு இலவசமாக ஏதாவது கொடுப்பேன் என்று சொன்னால், கொஞ்சம் யோசிக்க வேண்டும். இலவசத்தை காட்டி நம்மை ஆளுபவர்கள் கூடுதல் உரிமை எடுக்க விடாதீங்க' என்று சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் வலியுறுத்தியுள்ளார். தனியார் கல்லூரியில் நடந்த அரசியலமைப்பு தினம் நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது; நமது அரசியலமைப்பு சட்டத்தின் முக்கிய விஷயம் என்னவென்றால், ஓட்டுரிமை. இது தொடர்பாக மிகப்பெரிய விவாதமே நடத்தப்பட்டது. ஏனெனில், வெளிநாடுகளில் பெண்களினால் தேர்தலில் ஓட்டு கூட போட முடியாது. ஆனால், நமது அரசியலமைப்பு சட்டம் அனைவருக்கும் ஓட்டு போடும் உரிமையை கொடுத்துள்ளது. இது மிகவும் சிறப்பானது. நம் நாடு மக்களாட்சி முறையை கொண்டுள்ளது. ஆனால், நாம் மக்களாட்சி உரிமையை கொடுத்திருந்தாலும், சரியான ஆட்களை தேர்வு செய்கிறோமா? நாம் சரியான ஆட்களைத் தான் ஆள வைக்கிறோமா? என்பதை நாம் யோசித்து பார்க்க வேண்டும். ஆனால், தேர்தல் நாளான்று லீவு போட்டு விட்டு ஊருக்கு போய் விடுகிறோம். சினிமாவுக்கு போய்விடுகிறோம். ஓட்டு போடுவதில்லை. ஆனால், ஏதாவது நடந்தால் வாய் கிழிய பேசுகிறோம். ஒவ்வொரு முறையும் எவ்வளவு சதவீதம் ஓட்டு போடுகிறார்கள். 50 சதவீதம் கூட இல்லை. 45 சதவீத ஆட்கள் பூத் பக்கமே போகிறதே இல்லை. அப்போ, ஓட்டுரிமை கொடுப்பதில் எந்த அர்த்தமும் இல்லை. அப்படிபட்டவர்கள் ஆட்சி செய்பவர்களைப் பற்றி விமர்சிக்கும் உரிமையை இழக்கின்றனர். இது உரிமை அல்ல, கடமை. கடமைகளை செய்தால் தான் உரிமைகளை தட்டிக் கேட்க முடியும். தியேட்டர்களிலும், இசை நிகழ்ச்சிகளிலும் பெரிய வரிசையில் நின்று டிக்கெட் வாங்கிடுறாங்க. ஆனால், தேர்தலின் போது ஒருநாள் வரிசையில் நின்று ஓட்டு போட என்ன கஷ்டம். 18 வயதானவர்கள் ஓட்டு போடலாம். இந்த நாட்டை ஆட்சி செய்ய யார் சரியான ஆள் என்பதை யோசித்து முடிவு செய்ய வேண்டும். அரசியலமைப்பு சட்டத்தில் 3 பிரிவுகள் உள்ளன. சட்டத்தை இயற்றுபவர்கள், செயல்படுத்துபவர்கள், நீதியரசர்கள் என 3 வகையில் உள்ளனர். இவர்களில் சட்டத்தை இயற்றுபவர்களைத் தான் மக்கள் தேர்தலில் தேர்வு செய்து அனுப்புகிறார்கள். அரசியலமைப்பு சட்டம் தான் மிகவும் அதிகாரம் கொண்டது. பார்லிமென்ட்டோ, நீதிமன்றமோ கிடையாது. இலவசம் கொடுத்து கொடுத்து நம்மை ஏமாற்றுகிறார்கள். எதனால், அதனை பண்ணுகிறார்கள் என்று தெரியுமா? பல ஆண்டுகள் நாம் ஆளப்பட்டவர்கள். எனவே, ஒரு அடிமைத்தனம் இருந்து கொண்டு தான் இருக்கும். அடிப்படையில் நம்மிடம் ஒரு பிரச்னை இருப்பதை அறிந்து கொண்டவர்கள் தான், இலவசமாக லேப்டாப் கொடுப்பேன். குக்கர் கொடுப்பேன். சைக்கிள் கொடுப்பேன் என்று சொல்வார்கள். இலவசம் என்ற சொன்னால் நாம் எவ்வளவு வசதி இருந்தாலும், வெட்கமே இல்லாமல் போய் நிற்பார்கள். இல்லாதவர்கள் போய் நிற்பதில்லை தவறில்லை. இல்லாதவனுக்கு, கஷ்டப்படுபவனுக்கு எதையாவது கொடுக்கும் போது பரவாயில்லை. ஆனால், என்னை தேர்தலில் வெற்றி பெற வைப்பதற்காக, உங்களுக்கு இலவசமாக ஏதாவது கொடுப்பேன் என்று சொன்னால், கொஞ்சம் யோசிங்க. இலவசத்தை காட்டி நம்மை ஆளுபவர்கள் கூடுதல் உரிமை எடுக்க விடாதீங்கள். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 33 )

suresh Sridharan
ஆக 10, 2025 09:36

மக்களை பிச்சைக்காரராக ஆக்கும் அரசியல் கட்சிகள் குடிகாரர்கள் உதவாக்கரை இப்படி ஆகிவிட்டால் அவர்கள் இஷ்டத்திற்கு ஏதாவது சில்லறை வீசி ஓட்டை பெற்று விடலாம்


aaruthirumalai
ஆக 10, 2025 08:59

உங்கள் ஊதியம் எவ்வளவு அதை முதல்ல கூறுங்கள் பிறகு ஆலோசனை தாருங்கள்


ஜெய்ஹிந்த்புரம்
ஆக 10, 2025 00:30

மூன்று மாதங்கள் மட்டும் தான் என்று ஆரம்பித்து விட்டு அப்புறம் 12 லட்சம் கோடிசெலவில் 82 ரெண்டு கோடி பேரின் வறுமை நீக்கப்பட்டதுன்னு பெருமையடித்துக் கொண்டு வோட்டுக்காக ஐந்தாண்டுகளுக்கும் மேலாக மாதாமாதம் தரப்படும் வீட்டு தானியங்கள், எந்த வகையில சேர்த்தி? பி.எம்.ஜி்கே.ஒய் திட்டம் என்று நடத்துறாங்களே, உபி, பீகார், மாநிலங்களில் இவைகளை மட்டும் நம்பி, வேலைக்கே வாய்ப்பில்லாமல், டிவியிலும், பேப்பரிலும், மண்கீபாத்திலும் மட்டும் வளர்ச்சியை காணும் அந்த 82 கோடி பேர், அவர்களை ஏமாற்றி வெறும் 18% வோட்டுக்களில் நாட்டை கடத்திய கட்சி, இது பற்றி ஜட்ஜியோ இல்லை முரட்டு சங்கிகளோ விளக்கம் கொடுங்களேன்


ஜெய்ஹிந்த்புரம்
ஆக 10, 2025 00:18

மூன்று மாதங்கள் தான் என்று ஆரம்பித்து 12 லட்சம் கோடி செலவில் 82 கோடி பேருக்குன்னு மாதாமாதம் இலவச தானியங்கள்


ஆரூர் ரங்
ஆக 10, 2025 14:44

முன்பு காங்கிரஸ் ஆட்சியில் FCI கொள்முதல் கிட்டங்கிகளில் யாருக்கும் வழங்காமல் மக்கி வீணாகிய கோதுமையை பின்னர்( ஆளும் கட்சித்தலைவர்களின்)சாராய ஆலைகளுக்கு கிலோ ஒரு ரூபாய் விலையில் விற்பார்கள். இப்போது நல்ல நிலையில் உள்ளபோதே மத்திய அரசு ஏழைகளுக்கு அளிக்கிறது . எது சரி?.


சித்தநாத பூபதி Siddhanatha Boobathi
ஆக 10, 2025 00:01

அண்ணாச்சி நீதிபதி துணை வேந்தர்கள் கவர்னர் ஆகியோர் எதைப் பற்றி வேண்டுமானாலும் கருத்து சொல்லிக் கொண்டே இருக்கலாம். கூடிய விரைவில் தீர்ப்பு வருவதற்கு என்ன செய்ய வேண்டுமோ அதை செய்து கொண்டு பேசாமல் இருங்கள்


சித்தநாத பூபதி Siddhanatha Boobathi
ஆக 10, 2025 00:01

அண்ணாச்சி நீதிபதி துணை வேந்தர்கள் கவர்னர் ஆகியோர் எதைப் பற்றி வேண்டுமானாலும் கருத்து சொல்லிக் கொண்டே இருக்கலாம்


உண்மை
ஆக 09, 2025 22:56

நல்ல கருத்தை அருமையாக கூறியுள்ளீர்கள் ஐயா.இதைப் படிப்பவர்கள் ரோஷமாக செயல்பட வேண்டிய முக்கியமான தருணம்.வாக்காளர்கள் சிந்தித்து தேசநலனுக்காக தங்களுக்கான மற்றும் வருங்கால சந்ததிகளுக்கு நல்லது நடக்க விரும்பினால் இலவசங்களை நிராகரிக்க வேண்டும்.


Jagan (Proud Sangi )
ஆக 09, 2025 22:50

கருணாநிதி இருந்தால் நல்லாட்சி இருக்கும்.IAS அதிகாரிகள் ஆட்டம் இருக்காது என்று திமுக ஜால்ரா அடித்தவர் தான் இவர். உதை நிதிக்கு உதவும் விதமாக சீனியர்கள் முடிந்த வழக்குகளை சுயமோட்டோ எடுத்தவர். அரசியல் சாசனப்படி வழங்கப்பட்ட பேச்சுரிமை மதிக்காமல் திமுகவை குளிர்விக்க கஸ்தூரியை ஜெயிலுக்கு அனுப்பியவர் கஸ்தூரி பேசியது வீடியோவில் பார்த்த எல்லாருக்கும் தெரியும் ஒன்றும் விவகாரம பேசவில்லை என்று


ஜெய்ஹிந்த்புரம்
ஆக 09, 2025 22:39

கோவில் வாசலிலே தட்டு ஏந்துறவனுக்கு போட்டா அது பிச்சைம்பேள், ஆனா கோவில் சன்னதியில் தட்டை ஏந்துறவனுக்கு போட்டா அது புண்ணியம், தட்சிணைம்பேள் கோவில்லே போட்டா அன்னதானம், அதை பசியோட பள்ளிக்குப் போன பச்சைக்குழந்தைக்கு கொடுத்தால் இலவசம், தரக்கூடாதும்பேள். உங்களவாவுக்கு படிக்க பணவுதவி வந்தால் அது ‘ஸ்காலர்ஷிப்’, ஆன ஒங்களாலே ஆயிரமாண்டு ஒடுக்கப்பட்டவன் வீட்டில் முதல் பட்டதாரிக்கு கொடுத்தால் இலவசம்ம்பேள் பள்ளிக்கு போக குழந்தைகளுக்கு பேருந்து, விளிம்புநிலை குடும்பத்து பெண்கள்வேலைக்கு போகவென்று தரப்படும் கட்டண சலுகை, இவையெல்லாம் கூட உங்கள் பார்வையில் இலவசம், மோசம். “வரப்புயர” என்ற ஔவையின் ஒற்றை அவர் தான் விளிம்புநிலை மக்களுக்கு தரப்படும் சலுகைகள். மேல்சாதீய சனாதன பார்வையில் பார்தால்அவை தேவையில்லாத இலவசங்களாக தெரியும். கோளாறு சமூகநீதி சலுகைகளில் இல்லை, குதர்க்கமான பார்வையில் தான்


ஆரூர் ரங்
ஆக 10, 2025 12:57

நாங்க தாழ்த்தப்பட்டவர்களா என்று கேட்ட தயாநிதி, நீ SC தானே என பொது வெளியில் கேட்ட மந்திரி, SC பெண்களும் ஜாக்கெட் அணிவதால் தான் துணி விலை ஏறியது என்ற ஈவேரா வும் உங்க வழிகாட்டிகள்? ஆனால் காக்கை குருவி எங்கள் ஜாதி என்ற பாரதி?


naranam
ஆக 09, 2025 22:34

திமுக காங்கிரசுக்கு சரியான சம்மட்டியடி!


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை