உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / டவுட் தனபாலு: வரலாறு தெரியாமல் பேசுகிறார் அண்ணாமலை

டவுட் தனபாலு: வரலாறு தெரியாமல் பேசுகிறார் அண்ணாமலை

அ.தி.மு.க., துணை பொதுச்செயலர் கே.பி.முனுசாமி:

தேசிய ஜனநாயக கூட்டணியை அமைத்தவர் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா. அவர், வடக்கில் மட்டும் இருந்த பா.ஜ.,வை தமிழகத்திற்கு அழைத்து வந்தார். கடந்த, 1998 லோக்சபா தேர்தலில், வாஜ்பாய், அத்வானி யுடன் இணைந்து, தேசியம் எனும் வார்த்தைக்கான கூட்டணியை உருவாக்கினார். இந்த வரலாறு தெரியாமல் அண்ணாமலை பேசுகிறார்.

டவுட் தனபாலு:

வாஜ்பாயுடன் கூட்டணி அமைத்தாலும், 2014 லோக்சபா தேர்தலில், 'மோடியா, இந்த லேடியா'ன்னு சவால் விட்டு, ஜெயலலிதா தேர்தல் களத்தில் சாதித்தார்... இப்ப பா.ஜ.,வை கழற்றி விட்டுள்ள பழனிசாமி தலைமையிலான அ.தி.மு.க.,வும் அப்படி சாதிக்கும் என, எந்த 'டவுட்'டுக்கும் இடம் தராமல் இவரால் உறுதியா சொல்ல முடியுமா?அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் கருப்பணன்: கடந்த சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க.,வை விட, 1.50 லட்சம் ஓட்டுகள் மட்டுமே தி.மு.க., அதிகம் பெற்றது. அதை நாம் பெற்றிருந்தால் ஆட்சியில் இருந்திருப்போம். பன்னீர் என்ற நாக பாம்பால் தோற்றோம். அந்த பாம்புக்கு ஆண்டவனே தண்டனை கொடுத்து, அரசியலில் செல்லா காசாக்கி விட்டான். ஆண்டவன் தந்த தண்டனையை பன்னீர் அனுபவித்து தான் ஆக வேண்டும்.டவுட் தனபாலு: இப்படி பழைய தேர்தல் கதையை பேசி, முடிஞ்சி போன கல்யாணத்துக்கு மேளம் அடிக்கறதையும், பன்னீரை உசுப்பேத்துறதையும் விட்டுட்டு, கூட்டணிக்கு கட்சிகளை பிடிச்சி, தேர்தல் பணியில் கவனம் செலுத்தினாலாவது, லோக்சபாவுக்கு உங்க கட்சியில் இருந்து ஒன்றிரண்டு எம்.பி.,க் களை அனுப்பலாம் என்பதில், 'டவுட்'டே இல்லை!பத்திரிகை செய்தி: கடந்த 2019 லோக்சபா தேர்தலில், காங்கிரஸ் கட்சிக்கு, புதுச்சேரி உட்பட, 10 தொகுதிகளை தி.மு.க., ஒதுக்கியது. இம்முறை அந்த எண்ணிக்கையை குறைக்க தி.மு.க., திட்டமிடுகிறது. அதனால் பழைய எண்ணிக்கையை தக்க வைக்கும் எண்ணத்துடன் தி.மு.க.,விடம் பேச, தமிழக காங்கிரஸ் தயாராகி வருகிறது.டவுட் தனபாலு: என்ன தான் ரூம் போட்டு பேசி, பரிட்சைக்கு தயாராகுற மாதிரி காங்கிரஸ்காரங்க ரெடியானாலும், தி.மு.க.,விடம் நினைத்த தொகுதிகளை வாங்கணும்னா காங்., தொகுதி பங்கீடு குழு செருப்பு தேய அறிவாலயத்துக்கு நடையாய் நடக்கணும் என்பதில் 'டவுட்'டே இல்லை!


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 12 )

K.Ramakrishnan
ஜன 29, 2024 18:52

என்னங்க இது அநியாயமா இருக்கு.. எங்க அண்ணாமலை நாற்பதாயிரம் புத்தகங்கள் படிச்சிருக்காரு. அவரு எவ்வளவு பெரிய அறிவாளி... வரலாறு, புவியியல், அறிவியல், பொறியியல், அரசியல் மேலாண்மை, மருத்துவம்... இப்படி எதைக்கேட்டாலும் பளிச்னு ரின் மாதிரி பதில் சொல்லுவாருங்க... அவரு அறிவாற்றலுக்கு மிஞ்சியவர் யாருமே கிடையாது. இந்த உலகத்தில் அண்ணாமலை போன்ற அறிவாளிகள், நூறு ஆண்டுகளுக்கு ஒரு முறை தான் பிறப்பார்களாம்.. என்று வேதம் சொல்லுது...இந்த நூற்றாண்டின் இணையில்லா அறிவாளி அண்ணாமலை தான். அவரை குறை சொல்லாதீர்கள். வருங்கால தமிழ்நாட்டின் முதல்வராக வரப்போகிறவர்.. கொஞ்சம் பார்த்து பேசுங்கள்... நீங்களோ மாஜி மந்திரி. பிறகு அமலாக்கத்துறையை ஏவி விடப் போறாரு...


Sampath Kumar
ஜன 29, 2024 14:35

வரலாறு மட்டும் இல்லை அறிவியல் புவியில் அரசியில் என்று எந்த விஷயமும் தெரியாது இந்த ஆளு போலீஸ் வேலைக்கும் லாயக்கு இல்லை


எல்லாம் தெரிந்த ஏகாம்பரம்
ஜன 29, 2024 11:45

கருப்பணன் சொல்றது கொஞ்சம் சீரியஸ் மேட்டர் தான். ஒரு வேளை அந்த ஒன்றை லட்சம் வாக்குகளை பெற்று admk இன்று ஆட்சியில் இருந்திருந்தால், dmk முக்கால்வாசி காணாமல் போயிருக்கும். ஆக dmk பன்னீர்செல்வத்திற்கு நன்றி சொல்ல கடமை பட்டுள்ளது.


veeramani
ஜன 29, 2024 10:26

ஒரே ஒரு கேள்வி..திரு முனுசாமி எழுபத்திரெண்டு களங்களில் கட்சிக்கு என்ன செய்தார். ஆ தி மு க வரலாறு செங்கோட்டையன், செங்கம்மாளை போன்றவர்கள் பேசலாம். மற்ற எவருக்கும் தகுதி இல்லை. இவர்கள் என்ன எம் ஜி ஆர் காலத்து ஆட்களோ????


Balasubramanian
ஜன 29, 2024 09:52

மக்களை ஏமாற்ற கண்டா கடசிகளுடன் கூட்டு சேர்ந்து ஆட்ச்சியை பிடித்து பின் மக்களுக்கு நல்லது செய்கிறோம் என்று பொய் சொல்லி மக்களின் வரிப்பணத்தை சகட்டு மேனிக்கு கொள்ளை அடிப்பது..இதுதான் இரண்டு திராவிடங்களின் மொத்த சரித்திரம்...இந்த சரித்திரம் அண்ணாமலைக்கு நன்கு தெரிந்ததால்தான் அரசியலில் மும்முரமாக ஈடுபட்டுள்ளார் .


குமரி குருவி
ஜன 29, 2024 07:57

அ.தி.மு.க.வரலாறு அன்றும் இன்றும் நாறுது


Godyes
ஜன 29, 2024 07:21

பழைய படி அதிமுக தமிழகத்தில் வேரூன்றி பொன்மன செம்மலின் ஆட்சியை தரவேண்டும்.


Paraman
ஜன 29, 2024 11:49

.அணைத்து 21.ம் பக்க திராவிடியா அரசியல்வியாதிகளும் ஒரே குட்டையில் ஊறிய ஊழல் மட்டைகள் தான் திறமையாற்ற தீயசக்திகள் தான் ....


Ramesh Sargam
ஜன 29, 2024 07:11

அரைகுறை வரலாறு தெரிந்தவர்கள் அரசியலில் அதிகம். அவர்களுக்கு டவுட் தனபாலுதான் சரியான நபர் - வரலாறு பாடம் எடுக்க.


Ramesh Sargam
ஜன 29, 2024 07:10

அரைகுறை வரலாறு தெரிந்தவர்கள் அரசியலில் அதிகம்.


ramani
ஜன 29, 2024 06:43

அதேபோல் தமிழகத்தில் மட்டுமே இருந்த அதிமுகவை டெல்லியில் மத்தியில் ஆட்சியில் பங்கு தந்தது பாஜகதானே


மேலும் செய்திகள்











அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை