உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / வாக்கிங் சென்றவர் கொலையில் அதிரடி திருப்பம் கூலிப்படையினருடன் மனைவி, காதலன் கைது

வாக்கிங் சென்றவர் கொலையில் அதிரடி திருப்பம் கூலிப்படையினருடன் மனைவி, காதலன் கைது

அவிநாசி : அவிநாசியில், வாக்கிங் சென்றவர் கொல்லப்பட்ட சம்பவத்தில், திடீர் திருப்பமாக, அவரது மனைவி, கள்ளக்காதலன், நண்பர் உள்ளிட்டோர் கூலிப்படையினருடன் கைது செய்யப்பட்டனர்.திருப்பூர் மாவட்டம், அவிநாசி அடுத்த வேலாயுதம்பாளையம் ஊராட்சிக்குட்பட்ட காசிக்கவுண்டன் புதுார், தாமரை கார்டன் பகுதியில் வசித்தவர் ரமேஷ், 45. கார் கன்சல்டிங் மற்றும் பைனான்ஸ் தொழில் செய்து வந்தார். இவரது மனைவி விஜயலட்சுமி, 36; இரு மகள்கள் உள்ளனர்.கடந்த 1ம் தேதி இப்பகுதியில் உள்ள சேலம் - கொச்சி பைபாஸ் சர்வீஸ் ரோட்டில் வாக்கிங் சென்ற ரமேைஷ ஐந்துக்கும் மேற்பட்டோர் அரிவாள் மற்றும் கத்தியால் வெட்டி கொலை செய்தனர். எஸ்.பி., அபிஷேக் குப்தா உத்தரவின் பேரில், அவிநாசி டி.எஸ்.பி., சிவகுமார் தலைமையில் நான்கு தனிப்படைகள் அமைக்கப்பட்டு தீவிர விசாரணை நடந்தது.

கூலிப்படையினர் சிக்கினர்

இந்த வழக்கில், போலீசார், கூலிப்படையை சேர்ந்த திருவாரூர் மாவட்டம், அரித்துவாரமங்கலம் கோபாலகிருஷ்ணன், 35, மன்னார்குடி அஜித், 27, சிம்பு, 23, சரண், 24 , தேனி மாவட்டம், சில்லுவார்பட்டி ஜெயபிரகாஷ், 45 ஆகிய ஐந்து பேரை நேற்றுமுன்தினம் கைது செய்தனர். இவர்களிடம் மேற்கொண்ட விசாரணையை தொடர்ந்து, ரமேஷ் மனைவி விஜயலட்சுமி, அவரது கள்ளக்காதலன் அவிநாசி காசிக்கவுண்டன்புதுாரை சேர்ந்த சையது இர்பான், 28, வெள்ளியம்பாளையம் பகுதியை சேர்ந்த அரவிந்த் என்ற ஜானகிராமன், 27 ஆகியோரை நேற்று போலீசார் கைது செய்தனர்.

கணவர் கொடுமைகளை பகிர்ந்த மனைவி

டி.எஸ்.பி., சிவகுமார் கூறியதாவது:ரமேஷின் வீடு இருக்கும் பகுதிக்கு அருகில் சையது இர்பான், சிப்ஸ் கடை நடத்திவந்தார். விஜயலட்சுமியுடன் மூன்று ஆண்டுகள் முன்பு தொடர்பு ஏற்பட்டது. கணவர் ரமேஷூக்கு, சில பெண்களுடன் தொடர்பு இருப்பது விஜயலட்சுமிக்கு தெரியவந்தது. மேலும் ரமேஷ் மது குடித்துவிட்டு 'செக்ஸ்' டார்ச்சர் செய்ததோடு, அடித்து துன்புறுத்தியுள்ளார். இதை இர்பானிடம் கூறி, விஜயலட்சுமி கதறியுள்ளார். இர்பானுடன் சேர்ந்து கணவரை கொல்ல திட்டமிட்டார்.இதற்காக தன்னிடம் இருந்த நகைகளை கொடுத்துள்ளார். நகைகளை இர்பான், நண்பர் அரவிந்த்துடன் சேர்ந்து அடகு வைத்து 9.6 லட்சம் ரூபாய் பணம் பெற்றுள்ளார். இதைக் கொண்டு கூலிப்படையை அமர்த்தியுள்ளனர். வாக்கிங் சென்றபோது வீச்சரிவாள், கத்தியை கொண்டு கூலிப்படையினர் ரமேைஷ சரமாரியாக வெட்டி கொலைசெய்துவிட்டு தப்பியுள்ளனர். கொலை நடந்த அன்று, கணவர் வீட்டில் இருந்து வாக்கிங் புறப்பட்ட தகவலை விஜயலட்சுமி இர்பானிடம் கூறியது தெரியவந்தது.இவ்வாறு, டி.எஸ்.பி.,கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 11 )

sankaran
டிச 07, 2024 20:33

செக்ஸ் துன்புறுத்தல் என்றால் சட்ட ரீதியாக டிவோர்ஸ் செய்து கொள்ளலாமே ... கள்ள காதலுக்கு ஒரு பொய்யான காரணம் ..


JeevaKiran
டிச 06, 2024 17:44

முதலில் இந்த கூலி படையில் சிக்குபவர்களை தூக்கிலிடவேண்டும். எந்த ஒரு தயவு தாட்சண்யமும் இருக்க கூடாது. ஜாமீனும் வழங்கக்கூடாது. அப்போதான் இந்த கூலிப்படை கலாச்சாரம் ஒழியும்


வைகுண்டேஸ்வரன்
டிச 06, 2024 14:36

கட்டிய கணவன் செக்ஸ் டார்ச்சர் செய்திருக்கிறான். பொறுக்க முடியாமல் இருந்த மனைவி, அன்பாகப் பேசிய வேறொரு ஆணிடம் மன அமைதிக்காக பகிர்ந்து கொள்ள, அந்த நபர், தூக்கிருவோம் என்று suggestion குடுத்து தூக்கிட்டார். ஏன் ஜிகாத்அது இது என்று மதவாதம்??? கொலைகாரர்கள், கணவன், மனைவி இந்து. டைரக்ஷன் மட்டும் இஸ்லாம்.


Raj S
டிச 07, 2024 00:40

சரியாய் சொல்றீங்க... டைரக்ஷன் இஸ்லாம்... போதை, கொலை, கொள்ளை, மதவாதம் எல்லாத்துக்கும் அவங்கதான் டைரக்ஷன். இத சொன்னா திருட்டு திராவிடன் ஒத்துக்க மாட்டானே??


shakti
டிச 06, 2024 14:00

இங்கேயும் லவ் ஜிஹாதா ???


Ramesh Sargam
டிச 06, 2024 13:08

36 வயதுக்கு விஜயலக்ஷ்மிக்கு, 28 வயது இர்பானுடன் கள்ளக்காதல். நான் நினைக்கிறேன் இதுபோன்ற தகாத உறவுகளும், தவறான எண்ணங்களும் global warming மாற்றத்தால் வருகிறதோ என்று...


Rasheel
டிச 06, 2024 13:07

ஜிஹாதிகள் பல ஹிந்து குடும்ப பெண்களை தவறான வழியில் கொண்டு செல்வது, குடும்பத்தை அழிப்பது என கேடான செயல்களை செய்வது வாடிக்கையாகி விட்டது. இப்போது அந்த இரண்டு பெண் குழந்தைகளின் வாழ்க்கை கேள்வி குறியாகி விட்டது.


Kanns
டிச 06, 2024 12:25

Its Really Happening Everywhere Mainly Due to SexHungry Women


Barakat Ali
டிச 06, 2024 10:35

இணை வைக்கும் ஒரு பெண், உங்களைக் கவரக்கூடியவளாக இருந்தபோதிலும், அவளைவிட ... ஓர் அடிமைப் பெண் நிச்சயமாக மேலானவள் ஆவாள்.


சம்பா
டிச 06, 2024 08:34

நிறைய இருக்கறாளுக 10 க்கு 7 இப்படிதான்


Sivagiri
டிச 06, 2024 08:17

இதெல்லாம் நம்புறா மாதிரியங்க இருக்கு? தெளிவா எழுதிய கதை வசனம் போல இருக்கு? நாடக காதல்- லவ் ஜிஹாத் போல இருக்கு?


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை