உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / ஊழல் அழுக்கை வெளுத்தது திராவிட மாடல் வாஷிங் மெஷின்; ராமதாஸ் விமர்சனம்

ஊழல் அழுக்கை வெளுத்தது திராவிட மாடல் வாஷிங் மெஷின்; ராமதாஸ் விமர்சனம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: பல்லாயிரக்கணக்கான இளைஞர்களின் எதிர்காலத்தை சீரழித்த ஒருவரை ஒரு மாநிலத்தின் முதல்வர், இந்த அளவுக்கு இறங்கிச் சென்று பாதுகாக்க முயல்வதும், போற்றுவதும் ஏற்றுக் கொள்ளவே முடியாது என்று பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

ஏற்றுக்க முடியாது

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: செந்தில் பாலாஜியின் தியாகம் பெரிது என்று புகழ்ந்துரைத்தது கடுமையான விமர்சனங்களுக்கு உள்ளான நிலையில், இப்போது அதற்கு பொழிப்புரை எழுதியிருக்கிறார் முதல்வர் ஸ்டாலின். சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் 15 மாத சிறை தண்டனை அனுபவித்தது தான் செந்தில் பாலாஜி செய்த தியாகம் என்று நேற்று வெளியிட்ட அறிக்கையில் முதல்வர் விளக்கமளித்திருக்கிறார். பல்லாயிரக்கணக்கான இளைஞர்களின் எதிர்காலத்தை சீரழித்த ஒருவரை ஒரு மாநிலத்தின் முதல்வர், இந்த அளவுக்கு இறங்கிச் சென்று பாதுகாக்க முயல்வதும், போற்றுவதும் ஏற்றுக் கொள்ளவே முடியாதது.

தியாகம் இல்லை

செந்தில் பாலாஜி பிணையில் விடுதலை செய்யப்பட்டதில் யாருக்கும் வருத்தம் இல்லை. எந்த வழக்கிலும் குற்றஞ்சாட்டப்பட்ட ஒருவர் வழக்கு விசாரணைக் காலம் முழுவதும் சிறையில் இருக்க வேண்டும் என்று நினைப்பதே கொடூர மனநிலை. செந்தில் பாலாஜி மீதான மோசடி வழக்கும், அதனடிப்படையிலான சட்டவிரோதப் பணப்பரிமாற்ற வழக்கும் முடிவடைய நீண்ட காலம் ஆகும் என்பதால், அதுவரை அவரை சிறையில் வைத்திருக்க முடியாது என்பதால் தான் அவருக்கு சுப்ரீம் கோர்ட் பிணை வழங்கியுள்ளது. அதன் பொருள் விடுதலை இல்லை. அதனால் செந்தில் பாலாஜியின் சிறை வாசம் தியாகமும் இல்லை.

வரலாறு

செந்தில் பாலாஜியின் வேலைவாய்ப்பு மோசடிகள் குறித்து ஒட்டுமொத்த தமிழகமும் அறிந்ததை விட முதல்வர் ஸ்டாலின் மிகவும் நன்றாக அறிவார். 2014-ஆம் ஆண்டு நவம்பர் மாதத்தில் அரசுப் போக்குவரத்துக் கழகத்தின் 5 கோட்டங்களில் 1630 பணிகளுக்கான ஆள்தேர்வு அறிவிக்கை வெளியிடப்பட்ட நிலையில், நடத்துனர் பணிக்கு ரூ.1.75 லட்சம் தொடங்கி உதவிப் பொறியாளர் பணிக்கு ரூ.12 லட்சம் வரை செந்தில் பாலாஜி கையூட்டு வாங்கிக் குவித்ததாகத் தான் தமிழக போலீசார் வழக்குத் தொடர்ந்திருக்கிறது. இந்த குற்றச்சாட்டுகள் அனைத்தையும் 2016 தேர்தலில் குளித்தலைத் தொகுதியில் நடந்த பரப்புரைக் கூட்டத்தில் தெரிவித்த ஸ்டாலின், மேலும் சில குற்றச்சாட்டுகளையும் முன்வைத்து, செந்தில் பாலாஜி செய்த ஊழல்கள் “ஒன்றா, இரண்டா எடுத்துச் சொல்ல” என்று பாடல் பாடியதெல்லாம் வரலாறு.

சட்டத்தின் பக்கம்

அந்தக் குற்றச்சாட்டுகளில் அடிப்படையில் தான் தமிழக போலீசார் வழக்குப் பதிவு செய்து நடத்தி வருகிறது. அந்த வழக்கில் கையூட்டாக வாங்கப்பட்ட பணம் ரொக்கமாக செந்தில் பாலாஜி கணக்கில் செலுத்தப்பட்டதன் அடிப்படையில் தான் அவர் மீது சட்டவிரோதப் பணப்பரிமாற்ற வழக்கு தொடரப்பட்டு கைது செய்யப்பட்டு, 471 நாட்களுக்குப் பிறகு பிணையில் வெளிவந்திருக்கிறார். இதில் என்ன தியாகம் இருக்கிறது. உண்மையாகவே முதல்வர் ஸ்டாலின் சட்டத்தின் பக்கமும், நியாயத்தின் பக்கமும் நிற்பவராக இருந்தால் மோசடி வழக்கில் தம்மிடம் உள்ள ஆதாரங்களையெல்லாம் கொடுத்து வழக்கை வலுப்படுத்தியிருக்க வேண்டும். மோசடி வழக்கு விசாரணையை விரைவுபடுத்தி செந்தில் பாலாஜிக்கு தண்டனை பெற்றுத் தந்திருக்க வேண்டும்.

வாஷிங் மெஷின்

ஆனால், முதல்வர்.ஸ்டாலினின் கட்டுப்பாட்டில் உள்ள சென்னை மாநகரக் காவல்துறையின் மத்தியக் குற்றப்பிரிவு மோசடி வழக்கில் செந்தில் பாலாஜியை கைது செய்யக்கூட முன்வரவில்லை. அதுமட்டுமின்றி, அவரை தி.மு.க.,வில் சேர்த்து அமைச்சராக்கி அழகு பார்க்கிறார். அவருக்கு தியாகி பட்டம் சூட்டி உருகுகிறார். திராவிட மாடல் வாஷிங் மெஷின் அந்த அளவுக்கு ஊழல் கறையே தெரியாத அளவுக்கு வெளுத்து எடுத்திருக்கிறது. அரசு வேலை தருவதாக பல்லாயிரக்கணக்கானோரிடமிருந்து லட்சக்கணக்கில் பணம் வாங்கி மோசடி செய்ததாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ள செந்தில் பாலாஜி தியாகி என்றால், அவரிடம் பணத்தைக் கொடுத்து தங்களின் சொத்துகளையும், வாழ்க்கையையும் இழந்து தவிக்கும் பல்லாயிரக்கணக்கான இளைஞர்கள் என்ன துரோகிகளா? என்பதை முதல்வர் தான் விளக்க வேண்டும்.தமிழகத்தின் முதல்வர் என்பவர் ஏழரை கோடி தமிழக மக்களுக்கும் பொதுவானவர். நடுநிலை தவறாத நீதிபதியாக இருந்து பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி வழங்க வேண்டியது தான் அவரது கடமை. ஆனால், அவரோ கடமையை மறந்து விட்டு மோசடி செய்தவருக்கு வழக்கறிஞராக மாறி அவருக்காக வாதாடிக் கொண்டிருக்கிறார். இது அவர் வகிக்கும் பதவிக்கு அழகல்ல.

வேறுமாநிலத்திற்கு

செந்தில் பாலாஜியை முதல்வர் வலிந்து ஆதரிப்பதையும், புகழ்வதையும் பார்க்கும் போது செந்தில் பாலாஜி மீதான மோசடி வழக்கு விசாரணை தமிழகத்தில் நியாயமாக நடக்கும் என்றோ, பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி கிடைக்கும் என்றோ தோன்றவில்லை. எனவே, செந்தில் பாலாஜி மீதான மோசடி வழக்கின் விசாரணையை வேறு மாநில நீதிமன்றத்திற்கும் மாற்றும்படி சுப்ரீம் கோர்ட்டுக்கு தமிழக அரசு பரிந்துரைக்க வேண்டும், எனக் குறிப்பிட்டுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 22 )

venugopal s
செப் 30, 2024 18:23

என்ன இருந்தாலும் பாஜகவின் நவீன ஃபுல்லி ஆட்டோமேட்டிக் வாஷிங் மெஷினை அடித்துக் கொள்ள முடியாது!


தர்மராஜ் தங்கரத்தினம்
செப் 30, 2024 17:21

அன்று ஊழல் திமுகவுடன் ஏற்கனவே உறவு கொண்டிருந்த பாஜக ..... இன்று சந்திரபாபுவின் தெலுங்கு தேசம் கட்சியுடன், உங்களுடைய பாமகவுடன் - மருத்துவக்கல்லூரிகளுக்கு முறைகேடான அனுபதி - உறவு கொண்டுள்ள பாஜக .... ஆக ஆக இந்த பாஜகவும் ஒரு நல்ல வாஷிங் மெஷின் தானுங்கோ டாக்டர் சாஹப் .....


வைகுண்டேஸ்வரன்
செப் 30, 2024 16:41

ராமதாஸ் தாத்தா, இது பற்றி நாளை அறிக்கை விடுவாரா?


அப்பாவி
செப் 30, 2024 15:53

பதினஞ்சு மாசமா தொப்பை வளர்த்ததுதான் மிச்சம். முதல்கே ஆதாரங்களை வெச்சுக்கிட்டு அப்புறமா கைது கருமாதியெல்லாம் பண்ணுங்க. போய் ஓட்டை ஒடசல் கம்பியூட்டர்களை அள்ளிக்கிட்டு வந்து முக்கிய ஆவணங்கள் சிக்கினன்னு நியூஸ் குடுக்காதீங்க. அப்புறம் பாஞ்சி நாளக்கி விசாரிக்கிறோம்னு வாய்தா வாங்காதீங்க.


சீனிச்சாமி
செப் 30, 2024 15:50

வெளுக்கறதுக்கு உங்களுக்கு அந்த சான்ஸ் வரலை. சீக்கிரம் வரும்.


Dharmavaan
செப் 30, 2024 15:22

ஏன் எந்த திராவிட அமைச்சர்களும் கட்டுமரம் முதல் வருமானத்துக்கு அதிகமாக சொத்து வழக்கில் விசாரிக்கப்படவில்லை ஜெயா போல ஏன் தண்டிக்கப்பட இல்லை இதுவே நேர்மையற்ற பாரபட்சமான நீதித்துறையை காட்டுகிறது.மோடி துணிந்து கொலீஜியும் முறையை நீக்க வேண்டும் நீதிகள் தெய்வ பிறவி இல்லை


Dharmavaan
செப் 30, 2024 15:17

கேவலமான நீதித்துறை தன மதிப்பை இழக்கிறது.மோடி நடவடிக்கை எடுக்க வேண்டும் உலகத்தில் எங்குமில்லாத கொலீஜியும் முறை நீக்கப்பட வேண்டும் மக்கள் பாராளுமன்றத்துக்குத்தான் ஆள அதிகாரம் கொடுத்துள்ளார்கள் நீதி மன்றத்துக்கு அல்ல இந்திராதான் இவங்களுக்கு சரியான பிரதமர்


Kumar Kumzi
செப் 30, 2024 15:15

ஊழலுக்கு தலை வணங்கிய மஹாபிரபு எங்க துண்டுசீட்டு உளறுவாய்


krishna
செப் 30, 2024 14:52

NEENGA VERA DRAVIDA MODEL WASHING MACHINE ULAGATHAYE ORU NODIYIL VELUTHU KAAYA POTTU VIDUM.IPPADIKKU THUNDU SEATTU.


sureshpramanathan
செப் 30, 2024 14:46

We blame Modiji for not taking any action against these corrupt DMK fellows It's so viable all DMK fellows show their wrath in Billions Neither Income tax nor ED and CBI doing nothing All these agencies going behind small people I am Very upset with BJP and also the Supreme Court and judges All are wasting the Oporto correct the systems and clean up India What a shame useless Indian systems and politicians All these growth Is meaningless if corruption cannot be removed


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை