உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / தேசிய மாடலை காப்பியடிக்கும் திராவிட மாடல்: பா.ஜ., புகார்

தேசிய மாடலை காப்பியடிக்கும் திராவிட மாடல்: பா.ஜ., புகார்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: 'மீண்டும் மீண்டும் தேசிய மாடலை கண்மூடித்தனமாக காப்பியடிக்கிறது திராவிட மாடல்' என, தமிழக பா.ஜ., தெரிவித்துள்ளது.அக்கட்சி அறிக்கை: பிரதமர் நரேந்திர மோடியின் மக்கள் நலத் திட்டங்களை அப்படியே, 'காப்பி' அடிப்பது, முதல்வர் ஸ்டாலினுக்கு கைவந்த கலை. அந்த வரிசையில், மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் கீழ் தமிழகத்தில், 12 உட்பட நாடு முழுதும், 124 'கோ ஒர்க்கிங் ஸ்பேசஸ்' வெற்றிகரமாக இயங்கி வருகின்றன. இதை கண்டு, சென்னை கொளத்துாரிலும் அதே போன்றொரு கோ ஒர்க்கிங் ஸ்பேசை உருவாக்கி, தாங்கள் பிரதமர் மோடியின் அதிதீவிர ரசிகர் பட்டாளம் என்பதை மீண்டும் பதிவு செய்துள்ளது தி.மு.க., அரசு.பிரதமரால் தேசிய கல்வி கொள்கையின், ஒரு பகுதியாக அறிமுகம் செய்யப்பட்ட காலை உணவு திட்டத்தில் துவங்கி, ஜல்ஜீவன், ஆவாஸ் யோஜனா போன்ற பல திட்டங்களை, தமிழகத்தில் அறிமுகப்படுத்திய தி.மு.க., அரசு, மாற்றான் பிள்ளைக்கு தன் பெயரை சூட்டி குதுாகலிக்கிறது.மீண்டும் மீண்டும் தேசிய மாடலை கண்மூடித்தனமாக காப்பியடிக்கிறது, திராவிட மாடல். மத்திய அரசின் திட்டங்களுக்கு தி.மு.க.,வின், 'ஸ்டிக்கர்' ஒட்டுவதை தவிர்ப்பது நல்லது. மற்றபடி, பிரதமரின் திட்டங்களை தவறாமல் பின்தொடரும் தி.மு.க., அரசின் அளப்பறிய அன்பை கண்டு பா.ஜ., மகிழ்கிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 17 )

Lion Drsekar
நவ 07, 2024 15:13

நாங்கள் எலலா மாடல்களை பார்த்துவிட்டோம் எல்லோருமே அரசியலுக்கு வருவது அவரவரது குடுமபத்துக்காக மட்டுமே, ஆகவே தயவு செய்துமக்களுக்காக வாழுங்கள், சுதந்திர போராட்ட வீரர்களின் தியாக வாழ்வு மாடலுக்கு வாருங்கள் . நடித்தது போதும், ஏமாற்றியது போதும், வந்தே மாதரம்


INDIAN
நவ 07, 2024 14:20

மத்திய அரசின் திட்டங்களை காப்பி அடித்தால் என்ன தவறு, மாநில அரசுகளின் திட்டத்தை கடுமையாக விமர்சித்த மத்திய அரசு, அத்தகைய திட்டங்களால் நாட்டின் பொருளாதாரம் சீரழிந்துவிடும் என்று கூறிய பாஜக, மோடி அரசு பின் அதையே காப்பியடிப்பதுதான் மோசமானது தரம் தாழ்ந்தது ,


vkpuram madhavan
நவ 07, 2024 11:01

நூறாண்டுக்கு மேலாக மக்கள் நல முன்னோடி திட்டங்களை செயல்படுத்தி வருகிறது திராவிட அரசுகள். அதன் பின் வந்தவர்கள் இதிலிருந்து காப்பி அடித்து சற்று மாற்றி புதியதாக அறிவித்து மற்ற மக்களுக்கு வழங்குகிறார்கள். கோ வொர்க்கிங் ஸ்பேஸ் என்று மக்கள் படைப்பகம் என்பது டைடல் பார்க்கின் ஷேர்ட் இன்பிராஸ்டர்க்சர் மாடலின் நுண்ணிய வடிவம் மற்றும் அரசின் சீரிய முன்னெடுப்பு. மேலும் பல ஆண்டுகளுக்கு முன்பே சென்னை ஜெமினி பார்சன் காப்ளெக்ஸ் ல் இந்த கோ வொர்க்கிங் ஸ்பேஸ் மாடல் தனியார் துறையினரால் நடைமுறையில் இருந்தது தான். அதை அரசு புரிந்து கொண்டு அரசே தருவது மிக சிறப்பு. மேலும் இணையத்தில் ஏகப்பட்ட யோசனைகள் ஏற்கெனவே இருக்கிறது. யார் வேண்டுமானாலும் படித்து புரிந்து தனது மக்களுக்கு நன்மை பயக்கும் திட்டமாக மாற்றி செயல்படுத்தலாம். பேப்பரில் திட்டம் அதிக பயன் தராது, அதை மக்கள் பயன்பெறும் திட்டமாக மாற்ற வேண்டும். உதாரணத்திற்கு சமீபத்தில் 70 + வயது முதியோருக்கு இலவச காப்பீடு திட்டம் ஆயுஷ்மான் அதில் பயன்பெறும் மருத்துவமனைகள் ஒன்றும் நன்றாக சேவையளிப்பவை இல்லை என்றே சொல்லலாம். எனவே பேப்பர் திட்டம் வேண்டாம், உண்மையான பயனளிக்கும் திட்டம் தான் வேண்டும். இபிஎப்ஒ ஓய்வூதிய திட்டமும் செயல்படுத்தப்படவில்லை. யோசிங்க , பேசுவதை விட்டு ஏதாவது உருப்படியா செய்யுங்க. நன்றி


Sampath Kumar
நவ 07, 2024 09:21

இந்த தேசிய மாடல் என்கிற வார்த்தையே திராவிட மாடலின் கோப்பி தான் போவியா


Mario
நவ 07, 2024 09:15

ஓடும் ரயில் மீது சரமாரியாக துப்பாக்கி சூடு: அதிர்ச்சியில் பயணிகள்.. ஒடிசாவில் பதட்டம்..|


S Regurathi Pandian
நவ 07, 2024 09:04

மத்திய பாஜக அரசாங்கத்தின் திட்டங்களை மாநில அரசாங்கம் அமல்படுத்தினால் மகிழ்ச்சிதானே அடையவேண்டும். ஆனால் விமர்சிக்கிறார்கள் பாஜகவை எதிர்ப்பதாக கூறும் திமுக எதற்காக அவர்கள் கொண்டு வரும் திட்டங்களை அமல்படுத்துகிறது. தமிழ்நாட்டில் கொண்டுவரப்பட்ட திட்டங்களை மற்ற மாநிலங்களை பாஜகவும், காங்கிரசும் வாக்குறுதிகளாக தருகின்றன. எல்லோரும் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள்.


Dharmavaan
நவ 07, 2024 13:06

அதற்கு இவன் பேரை போட்டு விளம்பரம் தேடினால்அது மக்களை ஏமாற்றும் வேலை திருட்டு


Gnana Sekar
நவ 07, 2024 09:02

தேசிய மாடல் கிரேட்


S Regurathi Pandian
நவ 07, 2024 09:01

திமுக, காங்கிரஸ், பாஜக, அதிமுக, சிபிஐஎம் என எல்லா கட்சிகளும் ஆட்சியில் இருக்கும்போது ஒரே கொள்கையைத்தான் பின்பற்றுகின்றன. மக்களை ஏமாற்ற இவர்கள் எல்லோரும் சண்டையிடுவதுபோல் நடிக்கின்றனர். இவர்களுக்கு வக்காலத்து வாங்க ஒரு கூட்டம்


Gnana Sekar
நவ 07, 2024 08:59

தேசிய மாடல் கிரேட் ? டீம் க மாடல் waste?


தர்மராஜ் தங்கரத்தினம்
நவ 07, 2024 08:54

உண்மையே .... பிராடுத்தனமான திராவிட மாடலை தேசியம் பின்பற்றுகிறது .....