உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / டிரைவருக்கு மாரடைப்பு; அரசு பஸ் தாறுமாறாக சென்றதில் ஒருவர் பலி

டிரைவருக்கு மாரடைப்பு; அரசு பஸ் தாறுமாறாக சென்றதில் ஒருவர் பலி

சென்னை: சென்னையில் அரசு பஸ் ஓட்டிய டிரைவருக்கு மாரடைப்பு ஏற்பட்டது. அரும்பாக்கம் சாலையில் தாறுமாறாக ஓடிய பஸ் மோதியதில் ஒருவர் பலியானார்.சென்னையில் மாநகர கிளாம்பாக்கத்தில் இருந்து கோயம்பேடு நோக்கி சென்றபஸ் டிரைவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டதால் விபத்தில் சிக்கியது. அரும்பாக்கம் 100 அடி சாலையில் பஸ் கட்டுப்பாட்டை இழந்து கார் மற்றும் பாதசாரிகள் மீது மோதியது. சம்பவ இடத்திலேயே 50 வயது நபர் உயிரிழந்தார். மேலும் ஒருவர் பலத்த காயம் அடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். மாரடைப்பு ஏற்பட்ட பஸ் டிரைவரை போலீசார் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தற்போது அவர் மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 4 )

chennai sivakumar
ஜூலை 13, 2025 12:36

குறிப்பாக ஓய்வு பெறும் நிலையில் உள்ள ஓட்டுநர்கள் செட்டில்மென்ட் பணம் வருமா? வராதா என்ற டென்ஷனில் சதா சர்வ காலமும்.இருக்கிறார்கள் அவரவர் எதிர்காலத்தை பற்றி. இரண்டாவது எல்லோருக்கும் ஓவர் டூட்டி . 3 வது அபரிதமான வெய்யில். இவனெல்லாம் திடீர் மாரடைப்பு வர காரணம். சில ஓட்டுநர்கள் அது போன்று நேரத்தில் சமாளித்து விடுகிறார்கள். முடியாதவர்கள் விபத்து ஏற்படுத்துகிறார்கள் வேண்டும் என்றில்லாமல்


Padmasridharan
ஜூலை 13, 2025 12:03

சாமியோவ், கொரோனா தடுப்பூசி எடுத்தவரா பேருந்து ஓட்டுனர்? இறந்தவர் காரிலிருந்தாரா அல்லது பாதசாரியா. எவ்வளவு பண இழப்பீடு கொடுக்கபடும் இவருக்கு.


நிக்கோல்தாம்சன்
ஜூலை 13, 2025 13:23

அவரு என்ன கள்ளசாராயமா குடித்திருந்தார் கவர்ன்மென்ட் அல்லி கொடுக்க ? சாராய அதிபர்கள் ஆட்சி செய்தால் சாராய சாவுக்கு தான் முக்கியத்துவம் கொடுப்பாங்க , பாதையில் நடப்பவர்கள் எல்லாம் அவர்களுக்கு இரண்டாம் பொருட்டு தான்


நிக்கோல்தாம்சன்
ஜூலை 13, 2025 11:44

சமீப காலமாக பேருந்து ஓட்டுனர்கள் அதிகளவில் மாரடைப்பு ஏற்படுகிறதே , அரசு என்ன நடவடிக்கை எடுத்துள்ளது


சமீபத்திய செய்தி