உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / இலங்கைக்கு போதைப்பொருள் கடத்தல்; நாகை தி.மு.க., புள்ளி குறித்து விசாரணை

இலங்கைக்கு போதைப்பொருள் கடத்தல்; நாகை தி.மு.க., புள்ளி குறித்து விசாரணை

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: நாகையில் இருந்து இலங்கைக்கு போதைப்பொருள் கடத்தல் நடப்பதாக புகார்கள் சென்றதால், தி.மு.க., முக்கிய புள்ளியின் பின்னணி குறித்து, என்.சி.பி., அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.என்.சி.பி., எனப்படும் மத்திய போதைப்பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு அதிகாரிகள், கடந்த 2023ல் டில்லியில் சோதனை செய்தனர். அப்போது, வேன் ஒன்றில், மெத்ஆம்பெட்டமைன் கடத்தப்பட்டது தெரியவந்தது. தொடர் விசாரணையில், இந்த போதைப்பொருள், நாகப்பட்டினம் மாவட்டம் வேளாங்கண்ணி அருகே உள்ள விழுந்தமாவடி கிராமத்தைச் சேர்ந்த மகாலிங்கம் என்பவருக்கு கடத்தப்படுவது தெரியவந்தது.தி.மு.க., முக்கிய புள்ளிஅவர், தி.மு.க., முக்கிய புள்ளி என்பதும், ஊராட்சி மன்ற தலைவராக இருப்பதும் தெரியவந்தது. இதையடுத்து, டில்லியைச் சேர்ந்த என்.சி.பி., அதிகாரிகள் விழுந்தமாவடி சென்று, மகாலிங்கம் வீட்டில் சோதனை நடத்தினர். கஞ்சா கடத்தல் வழக்கில், விழுந்தமாவடி ஊராட்சி மன்ற தலைவர் மகாலிங்கத்தை நாகப்பட்டினம் மாவட்டம் கீழையூர் போலீசார் கடந்தாண்டு கைது செய்தனர்.அவரது மகனும், ஊராட்சி ஒன்றிய கவுன்சிலருமான அலெக்சை தேடி வந்தனர். இருவரும் சுயேச்சையாக போட்டியிட்டு வெற்றி பெற்றவர்கள் என்பதால், சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை பல்வேறு நிபந்தனைகளுடன் மகாலிங்கத்திற்கு ஜாமினும், அலெக்சுக்கு முன்ஜாமினும் வழங்கி உத்தரவிட்டது.மெத்ஆம்பெட்டமைன்இந்நிலையில், இந்த ஆண்டு ஏப்ரலில், நாகப்பட்டினத்தில் இருந்து தஞ்சாவூர், புதுக்கோட்டை வழியாக இலங்கைக்கு, 8 கோடி ரூபாய் மதிப்புள்ள மெத்ஆம்பெட்டமைன் கடத்தப்பட்டது தொடர்பாக, என்.சி.பி., அதிகாரிகளால் அலெக்ஸ் கைது செய்யப்பட்டார்.மகாலிங்கம், அலெக்ஸ் துாண்டுதலில், அவர்களின் கூட்டாளிகள் இலங்கைக்கு போதைப்பொருள் கடத்துவதாக என்.சி.பி., அதிகாரிகளுக்கு தொடர்ந்து புகார்கள் சென்றன.தி.மு.க., முக்கிய புள்ளியான மகாலிங்கம், அலெக்ஸ் ஆகியோரை இயக்குவது யார்; இவர்களின் பின்னணி குறித்து என்.சி.பி., அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.சர்வதேச கும்பலுடன் தொடர்புஅவர்கள் கூறியதாவது: மகாலிங்கம், அலெக்ஸ் ஆகியோர், மக்கள் பிரதிநிதிகள் என்ற போர்வையில், இலங்கைக்கு போதைப்பொருள் கடத்தி வருகின்றனர். இவர்களுக்கு சர்வதேச கடத்தல் கும்பலுடன் தொடர்பு உள்ளதாக புகார்கள் வந்தன. அதன் அடிப்படையில் விசாரணை நடக்கிறது.இவர்களின் பின்னணி குறித்தும், மகாலிங்கம், அலெக்ஸ் கூட்டாளிகள் குறித்தும் விசாரணை நடக்கிறது. மகாலிங்கத்தை போதைப்பொருள் கடத்தல் மன்னன் என்றே, விழுந்தமாவடி மக்கள் தெரிவிக்கின்றனர். இவ்வாறு அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 9 )

Velayutham rajeswaran
ஜூன் 20, 2025 15:20

அட போங்கப்பா ஏற்கெனவே ஒரு மெத்தாபெட்டமின் வழக்கு எங்கே போனது என்றே தெரியவில்லை இதில் இது வேறு ஒன்றும் நடக்காது


வீச்சு பரோட்டா பக்கிரி
ஜூன் 20, 2025 15:19

தமிழ்நாட்டில் நடந்த வியாபாரம் இப்போது இலங்கைக்கும் ஏற்றுமதி..


Anantharaman Srinivasan
ஜூன் 20, 2025 14:55

திமுக காரன் எல்லோருமே ஏதேனும் ஒருவகையில் பிசினஸ் மேக்னட்கள் தான்.


Kumar Kumzi
ஜூன் 20, 2025 14:48

திராவிஷ திமுக தேர்தல் நிதிக்காக தங்களின் கொத்தடிமைகளை வைத்து குலத்தொழிலில் ஈடுபடுகின்றனர்


தமிழ் நிலன்
ஜூன் 20, 2025 14:46

கொசுவை அடித்து துவம்சம் செய்து விட்டார்கள். இனி உலகம் எங்கும் போதையை ஒழிக்க வழிகாட்டி என்று தமிழ் நாடு புகழப்படும்.


theruvasagan
ஜூன் 20, 2025 14:33

பின்புலத்தில் யார் யார். இது என்ன கேள்வி. எல்லாத்திலேயும் கண்டுபுடிக்க முடியாத சார்கள்தான் பின்னாடி இருப்பார்கள்.


ராமகிருஷ்ணன்
ஜூன் 20, 2025 14:24

தலமைக்குடும்பத்துக்கு கமிஷன் சரியா போவல்லியா. போயிருந்தா இந்த சிக்கல் வராது.


c.mohanraj raj
ஜூன் 20, 2025 14:22

ஒன்றும் நடக்காது நம் நாட்டின் நீதி பரிபாலனம் அப்படி


Amar Akbar Antony
ஜூன் 20, 2025 13:45

இவர்களெல்லாம் சைலன்ட் ஏஜெண்டுகள் ஆக இருப்பார்கள். எல்லாம் சாதிக்குக்கே வெளிச்சம்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை