உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / திருச்சியில் ரூ.5 கோடி போதைப்பொருள் பறிமுதல்; சுங்கத்துறை அதிரடி நடவடிக்கை

திருச்சியில் ரூ.5 கோடி போதைப்பொருள் பறிமுதல்; சுங்கத்துறை அதிரடி நடவடிக்கை

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

திருச்சி: திருச்சி விமான நிலையத்தில் கோலாலம்பூரில் இருந்து கடத்தி வரப்பட்ட ரூ.5 கோடி மதிப்பிலான போதைப்பொருளை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.கோலாலம்பூரில் இருந்து திருச்சிக்கு பெருமளவு போதைப்பொருட்கள் கடத்தப்படுவதாக தகவல் கிடைத்தது. அதன்படி திருச்சி விமான நிலையத்தில் சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். பயணிகள் சிலரது நடவடிக்கை சந்தேகத்துக்கு இடமாக இருந்தது. சோதனையில், திருச்சி வந்த ஒரு பயணியின் உடமைகளில் மறைத்து கடத்தி வரப்பட்ட ரூ.5 கோடி மதிப்பிலான போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டது. 5 கிலோ உயர்ரக ஹைட்ரோபோனிக் ரக கஞ்சாவை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். கஞ்சாவை கடத்தி வந்த பயணியிடம் அதிகாரிகள் தீவிரமாக விசாரணை நடத்தினர். இவர் போதைப்பொருள் கடத்தல் 'குருவி'யா என விசாரணை நடக்கிறது. கடத்தலுக்கு பின்னணியில் வேறு யாருக்கும் தொடர்பு இருக்கிறதா என்று அதிகாரிகள் பல்வேறு கோணத்தில் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

Kulandai kannan
மார் 24, 2025 16:48

விமான நிலையங்களில் பணியாளர்கள் எண்ணிக்கை பலமடங்கு உயர்த்தி, அனைத்து கடத்தல்களுக்கும் முடிவு கட்ட வேண்டும்.


Ramesh Sargam
மார் 24, 2025 13:05

ஐம்பது அல்லது நூறு கோடிகளுக்கு அதிகமாக போதைப்பொருள் கடத்தல் இந்திய விமான நிலையங்கள் மூலம் தினம்தினம் நடக்கிறது. ஒரு சிலர் பிடிபடுகிறார்கள். பலர் தப்பித்துவிடுகின்றனர். சுங்கத்துறை அதிகாரிகள் மிக மிக எச்சரிக்கையாக இருந்து எல்லா கடத்தல்களையும் தடுக்கவேண்டும்.


புதிய வீடியோ