உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / 12 மணி நேரம் கைதிகள் போல் அடைக்கப்பட்ட விமான பயணிகள்: எமிரேட்ஸ் விமான தாமதத்தால் அவதி

12 மணி நேரம் கைதிகள் போல் அடைக்கப்பட்ட விமான பயணிகள்: எமிரேட்ஸ் விமான தாமதத்தால் அவதி

சென்னை: சென்னையில் இருந்து துபாய்க்கு அதிகாலை 4 மணிக்கு கிளம்ப வேண்டிய எமிரேட்ஸ் விமானம், 12 மணி நேரம் கடந்தும் கிளம்பாமல் இருந்தது. விமான நிலையத்தில் பயணிகள் வெளியே விடாமல், கைதிகள் போல் அடைத்து வைக்கப்பட்டதால், அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.சென்னையில் இருந்து இன்று ( ஜூன் 18) காலை 4 மணிக்கு துபாய்க்கு எமிரேட்ஸ் விமானம் கிளம்ப இருந்தது. இதில் பயணிக்க வேண்டிய பயணிகள் இரவு 12 மணிக்கே விமான நிலையம் வந்து விட்டனர். அவர்கள் கொண்டு வந்த உடைமைகள் அனைத்தும் சோதனை செய்யப்பட்டன. சரியாக 4 மணிக்கு விமானம் கிளம்பி விடும் என நம்பிக்கையுடன் காத்திருந்த பயணிகளுக்கு ஏமாற்றமே மிஞ்சியது.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=ajib9kp0&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0நண்பகல் 12 மணியை தாண்டியும் விமானம் கிளம்பவில்லை. அதற்கான அறிகுறி ஏதும் தென்படவில்லை. தாமதத்திற்கான சரியான பதிலையும் அவர்கள் கூறவில்லை. நேரம் ஆக ஆக, பயணிகள் பொறுமை இழந்தனர். அவர்கள், விமான நிலையத்தில் கைதிகள் போல் அடைத்து வைக்கப்பட்டு இருந்ததாலும் அவர்களின் கோபம் அதிகரித்தது.இதனால், பயணிகள் டிக்கெட் ரத்து செய்ய முடிவு செய்தாலும் அதற்கும் அனுமதி வழங்கப்படவில்லை. அவர்களின் உடைமைகள் திருப்பியும் தரப்படவில்லை. வெளியே செல்லவும் அனுமதி வழங்கவில்லை.இதனால், விமானத்தில் பயணிக்க இருந்த குழந்தைகள், முதியவர்கள் என அனைவரும் கடும் அவதிப்பட்டனர். ஒரு கட்டத்தில் வேறுவழியின்றி, விமான நிலையத்தில் பயணிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால், அங்கு பரபரப்பு நிலவியது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

DUBAI- Kovai Kalyana Raman
ஜூன் 18, 2024 15:58

அப்புறம் எப்போ விமானம் வந்தது , பயணிகள் எப்போ போனாங்க


Lion Drsekar
ஜூன் 18, 2024 14:28

இதுவாவது பரவாயில்லை . இதே எமிரேட்ஸ் விமானத்தில் சென்னையில் இருந்து கடந்த 6 மாதத்திற்கு முன் பயணித்த இரு பெண் சகோதரிகள் சொந்தமாக சம்பாதித்து அவர்கள் வருமானத்தில் உலகம் முழுவதும் சென்றுவரும் பயணிகள் வெளிநாட்டுக்கு சென்றுள்ளனர். சென்னையில் இருந்து விமானம் கிளம்புவதற்கு தாமதனானது , ஆகையால் இவரகளது விமானம் மற்றொரு நாட்டில் இந்த விமானத்துக்காக காத்திராமல் இவர்களது கம்பெனி விமானமே நேரத்துக்கு சென்றுவிட்டது . ஆகவே இந்த விமான பணியாளர்கள் மொழி தெரியாத அந்த நாட்டில் செய்வது அறியாமல் திகைத்து நிற்க பல மணிநேரம் சென்றபிறகு ஆங்கில மொழியில் ஏதோ பேசிய ஒருவர் இவர்கள் இருவருக்கும் வேறு ஒரு பெண்ணுக்கும் விமானத்தில் இவர்களது விமான கம்பெனி வாயிலாக ஏர் ஈரோப்பா விமானத்தில் டிக்கட் மாறுதல் செய்து அனுப்பிவிட்டார்கள் காரணம் இவர்கள் மறுநாள் அதிகாலை அங்கு சென்று , அங்கிருந்து ட்ராவல் டூர் செல்ல அங்குள்ள குழுமத்துடன் செல்வதற்கு ஏற்பாடு செய்துள்ளார்கள் . இந்த மூவரும் அந்த நாட்டுக்கும் சென்றுவிட்டார்கள், இவர்கள் இறங்கிய நாட்டில் குளிர் மைனஸில் இருப்பதால் அதற்காக இவர்கள் கால் அணி , அதற்க்கேற்ற உடைகள் எல்லாம் வாங்கி எடுத்துச் சென்றுள்ளனர் . முடிவு இவர்களது உடமைகள் இவர்களது விமானத்தில் ஏற்றப்படவே இல்லை. இவர்கள் தங்கியது 10 நாட்கள் . அந்த 10 நாளும் இவர்களுக்கு மாற்று உடை இல்லாமல் , குளிரில் நடுங்கியபடி வெளியிலும் தலைகாட்ட முடியாமல் ஒவ்வொரு இடத்திலும் தங்குமிடத்தில் அறைக்குள் இருந்தபடியே வெளிப்புறத்தை பார்த்து மீண்டும் டூர் கூட்டத்துடன் இப்படியே 10 நாளும் கடந்து விட்டன . இந்த 10 நாட்களிலும் இவர்கள் இந்த எமிரேட்ஸ் கம்பெனியுடன் தொடர்பு கொண்டதற்கு அவர்கள் தொடர்பு கொள்வதே மிகவும் கடினம் அப்படியே தொடர்பு உண்டாலும் மொழிப்பிரச்னையால் சரியான பதில் இல்லாமல் ஒவ்வொரு நாளும் குறைந்தது 10 மணிநேரம் அவர்களுடன் கைபேசியில் தொடர்பு கொண்டு உடமைகள் என்ன ஆச்சு கேட்டவண்ணம் இருந்துள்ளனர் . முடிவில் இவர்கள் விமானத்தில் கிளம்பி சென்னை வருவதற்கு இவர்களது விமானத்தில் ஏறும்போது இவர்களது உடமைகள் இதுதானே என்று கேட்டு ஒப்படைத்துள்ளார் ?? நீதிமன்றத்தில் வழக்கும் தொடுத்துள்ளார் இந்த இரு பெண்மணிகளும் . பெயரைக்கேட்டால் மிகவும் அருமையாக இருக்கும் என்று எரிய பயணிகளுக்கு ஏமாற்றமே என்பதை பலர் புகார் கூறியவண்ணம் இருக்கிறார்கள் . வந்தே மாதரம்


மேலும் செய்திகள்





முக்கிய வீடியோ