வாசகர்கள் கருத்துகள் ( 2 )
Naa iT padikanum
Science
மேலும் செய்திகள்
பள்ளிகளில் கலைத்திருவிழா போட்டி
24-Oct-2024
சென்னை: 'அரசு பள்ளிகளில், ஒன்பதாம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை படிக்கும் மாணவர்களுக்கு, அடுத்த மாதத்துக்குள், 'இ - மெயில்' எனப்படும், மின்னஞ்சல் முகவரியை உருவாக்க வேண்டும்' என, பள்ளிக்கல்வி துறை உத்தரவிட்டுள்ளது. தமிழக ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி துறை இயக்குனர் ஆர்த்தி, பள்ளிக்கல்வி இயக்குனர் வழியாக, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு அனுப்பிஉள்ள சுற்றறிக்கை:உயர்கல்வி வழிகாட்டி திட்டத்தின் கீழ், அனைத்து அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில், ஒன்பதாம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை படிக்கும் மாணவர்கள் கல்வி தரத்தை உயர்த்த, பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன. உயர் கல்வி நிறுவனங்களின் பாடத்திட்டங்கள், சேர்க்கை குறித்த தகவல்கள், விண்ணப்பங்கள் என, அனைத்து தகவல்களும் மின்னஞ்சல் வாயிலாகவே பகிரப்படுகின்றன. ஆனால், பெரும்பாலான அரசு பள்ளி மாணவர்களுக்கு, அதுகுறித்த புரிதல் இல்லை. எனவே, தலைமை ஆசிரியர் மற்றும் உயர் கல்வி வழிகாட்டி பயிற்சி பெற்ற ஆசிரியர்கள், தங்களின் பள்ளிகளில், ஒன்பதாம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை படிக்கும் மாணவர்களுக்கு, அவர்களாகவே மின்னஞ்சல் முகவரி உருவாக்க பயிற்சி அளிக்க வேண்டும். புதிய மின்னஞ்சல் முகவரியை, 'எமிஸ்' இணையதளத்தில் பதிய வேண்டும். மேலும், மின்னஞ்சலை எவ்வாறு நிர்வகிப்பது, கடவுச்சொல்லை ரகசியமாக பாதுகாப்பது, உயர் கல்வியில் மாணவர்களின் இலக்கு குறித்து, gmail.comஎன்ற முகவரிக்கு அனுப்புவது குறித்து பயிற்சி அளிக்க வேண்டும். இதற்காக, அடுத்த மாதம், 31ம் தேதி வரை, பள்ளிகளில் உள்ள உயர் தொழில்நுட்ப ஆய்வகத்தை பயன்படுத்திக் கொள்ளலாம். மின்னஞ்சல் உருவாக்குவது குறித்த வீடியோவை, https://youtu.be/elGOCADPmsA?si=VbDFyDXfhMUm016X என்ற இணைப்பில் காணலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Naa iT padikanum
Science
24-Oct-2024