உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / ராகுல் குற்றச்சாட்டு குறித்து விசாரிக்கப்பட்டிருக்க வேண்டும்: சொல்கிறார் முன்னாள் தேர்தல் கமிஷனர்

ராகுல் குற்றச்சாட்டு குறித்து விசாரிக்கப்பட்டிருக்க வேண்டும்: சொல்கிறார் முன்னாள் தேர்தல் கமிஷனர்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: ''ஓட்டுத் திருட்டு குறித்து காங்கிரஸ் எம்பி ராகுல் தெரிவிக்கும் குற்றச்சாட்டு குறித்து தேர்தல் கமிஷன் விசாரணை நடத்தியிருக்க வேண்டும் ,'' என முன்னாள் தலைமை தேர்தல் கமிஷனர் எஸ்ஓய் குரேஷி கூறியுள்ளார்.மஹாராஷ்டிரா சட்டசபை தேர்தலில் எதிர்க்கட்சிகளின் ஓட்டு திருடப்பட்டதாக காங்கிரஸ் எம்பி ராகுல் குற்றம்சாட்டி வருகிறார். இதனை தேர்தல் கமிஷன் மறுத்துள்ளது. தனது குற்றச்சாட்டை வலியுறுத்தி பீஹாரில் ராகுல் பேரணி நடத்தி வருகிறார்.இந்நிலையில், 2010 முதல் 2012ம் ஆண்டு வரை தலைமை தேர்தல் கமிஷனராக இருந்த எஸ்ஓய் குரேஷி பிடிஐ செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது: தேர்தல் கமிஷன் மீது விமர்சனம் வரும் போது எனக்கு வேதனையாக இருக்கும். குடிமகனாக மட்டும் அல்லாமல், தலைமை தேர்தல் கமிஷனராக இருந்த காரணத்தினாலும் வேதனை ஏற்படும். அந்த அமைப்பை கட்டமைக்க நானும் பணியாற்றி உள்ளேன்.அமைப்பு தாக்குதலுக்கு உள்ளாவதையும், பலவீனப்படுத்தப்படுவதையும் பார்க்கும் போது எனக்கு கவலை ஏற்படும். தேர்தல் கமிஷனும் தன்னை மறுபரிசோதனை செய்து கொண்டு கவலைப்பட வேண்டும். தங்கள் முடிவுகள் மீது வரும் அழுத்தத்தை கண்டுகொள்ளாமல் உறுதியாக நிற்க வேண்டியது அவர்களின் கடமையாகும்.தேர்தல் கமிஷன் மக்களின் நம்பிக்கையை வெல்ல வேண்டும். எதிர்க்கட்சிகளின் நம்பிக்கையை பெற வேண்டும். என்னை பொறுத்தவரை, கண்காணிப்பாளர்களாக இருப்பதால், எதிர்க்கட்சிகளுக்கு அதிக முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என்பேன். ஆளுங்கட்சி அதிகாரத்தில் இருப்பதால், அதற்கு கவனம் தேவையிருக்காது. ஆனால், அதிகாரத்தில் இல்லாத எதிர்க்கட்சிக்கு கவனம் தேவைப்படுகிறது.நான் பதவியில் இருக்கும் போது, தேர்தல் கமிஷனின் கதவுகளை திறந்துவைப்பதுடன், எதிர்க்கட்சிகள் நேரம் கேட்டால் உடனடியாக ஒதுக்கி தர வேண்டும் எனவும், அதன் மீது கவனம் செலுத்த வேண்டும் எனவும் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டு இருந்தேன்.ராகுல், எதிர்க்கட்சி தலைவர். தேர்தல் கமிஷன் அவரை அணுகும் விதத்தை மாற்றிக் கொள்ள வேண்டும். எதிர்க்கட்சி தலைவர் என்பவர் தனி நபர் அல்ல. லட்சக்கணக்கான மக்களின் குரலாக இருக்கிறார். அவரிடம் ஒரு பிரமாணப் பத்திரத்தை கொடுங்கள் இல்லையென்றால் நாங்கள் இதை செய்வோம் அல்லது அதை செய்வோம் என்று கூறுவது ஆட்சேபனைக்குரியது.ஓட்டுத் திருட்டு குற்றச்சாட்டு குறித்து தேர்தல் கமிஷன் விசாரணைக்கு உத்தரவு பிறப்பித்திருக்க வேண்டும். எதிர்க்கட்சி தலைவர் மட்டும் அல்ல. வேறு யாராவது புகார் அளித்து இருந்தால் உடனடியாக விசாரணைக்கு உத்தரவிடுவது வழக்கமான நடைமுறை. தேர்தல் கமிஷன் நியாயமாக இருப்பது போல் தோன்ற வேண்டும். விசாரணை மட்டுமே உண்மைகளை வெளிக்கொண்டு வரும். எனவே அவர்கள் ஒரு வாய்ப்பை தவற விட்டுவிட்டனர். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 42 )

Natarajan Ramanathan
செப் 16, 2025 08:54

வேறு எப்படி பேசுவார்?


Natarajan Ramanathan
செப் 15, 2025 21:53

இவரது பதவி காலத்தில் தேர்தல் கமிஷன் செயல்பாடு மிகவும் கேவலமாக இருந்தது உண்மை.


c.mohanraj raj
செப் 15, 2025 11:34

திருடர்கள் திருடர்களுக்கு ஆதரவு கொடுப்பதில் சரியாகத்தான் இருக்கின்றார்கள்


பேசும் தமிழன்
செப் 15, 2025 07:48

இனம்... இனத்தோடு தானே சேரும்.


சூரியா
செப் 15, 2025 06:37

இவரது மிகுந்த வெளிப்படைத் தன்மையின் காரணமாக, நமது நாட்டின் மொத்த வாக்காளர் பட்டியலையும் அமெரிக்காவிற்கு அளித்தவர். ராகுலுடன் கூட்டு சேர்ந்து ஜார்ஜ் சோரசிற்கு உதவியவர்.


சாமானியன்
செப் 15, 2025 06:35

முன்னால் தேர்தல் கமிஷனர் இவ்வளவு அப்பாவியாகவா இருப்பார் ? ராகுல் பொத்தம் பொதுவாக போற போக்கில் ஆதாரமே இல்லாமல் குற்றம் சாட்டுவார். எழுத்து பூர்வமா எதையுமே தரமாட்டார். அப்புறம் அவர் மேல் நடவடிக்கை எடுப்பது ? திமுக போன்ற கட்சிகள் எப்படியெல்லாம் கெட்ட விமர்சனங்களை தேர்தல் கமிஷன் வைக்கலாம் என்று ரூம் போட்டு யோசிக்கறாங்க. மக்களிடம் விழிப்புணர்வு இருந்தால் அந்நிய பிரஜைகளை சீக்கிரத்தில் அடையாளம் கண்டுவிடலாம். தேர்தல் கமிஷன் செய்யும் இந்த ஒழுங்கு நடவடிக்கை சரிதான். நாடு பூரா குறிப்பாக எல்லை மாநிலங்களில் இது மிக மிக அவசியம் என்றே தோன்றுகின்றது.


Anantharaman
செப் 15, 2025 06:16

முன்னாள் தேர்தல் ஆணைய அதிகாரிகள், சேஷன் அவர்கள் நீங்கலாக, எல்லாரும் காங்கிரஸ் கட்சியின் ஜால்ராக்களும் கைக்கூலிகள் ஆவர். இவன் மட்டும் என்ன விலக்கா?


Iyer
செப் 15, 2025 03:54

எது வோட்டு திருட்டு? 14 ஓட்டுகள் பெற்றும் சர்தார் படேலை பிரதம ராக்காமல் - ஒரு வோட்டு கூட பெறாத ஊழல் நேருவை பிரதமராக்கினானே காந்தி - அதுதான் வோட்டு திருட்டு. நாட்டின் பிரஜை ஆகும் முன்னரே வோட்டு போட்டாளே BAR DANCER . அதுதான் வோட்டு திருட்டு. தேர்தல் பிரச்சாரத்தின் பொது விதிகளை மீறி ஜெயித்தாளே = இந்திரா . அதுதான் வோட்டு திருட்டு.


C.SRIRAM
செப் 15, 2025 00:17

பதவி போன பிறகு வேதாளம் முருங்கை மரம் . ஏனென்றால் டிசைன் அப்படி


M Rajkumar
செப் 14, 2025 23:48

ராகுல் காந்தி பிரமாண பத்திரம் தாக்கல் செய்து நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் குறை கூறலாம் ஆனால் ஒன்றும் செய்யாமல் atom bomb hydrogen bomb என்று கூறினால் யாரும் ஒன்றும் செய்ய முடியாது


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை