சட்டவிரோத பண பரிமாற்றம் மூவருக்கு ஈ.டி., சம்மன்
சென்னை:சட்டவிரோத பணப் பரிமாற்றம் தொடர்பாக, தோல் தொழிற்சாலை முன்னாள் ஊழியர் உட்பட மூன்று பேருக்கு, அமலாக்கத்துறை சார்பில் 'சம்மன்' அனுப்பப்பட்டுள்ளது. சென்னை நொளம்பூரைச் சேர்ந்த தொழிலதிபர் வைத்தீஸ்வரன், முகப்பேர் ஜெ.ஜெ., நகரைச் சேர்ந்த சதீஷ்குமார், திருப்பத்துார் மாவட்டம், ஆம்பூர் பகுதியைச் சேர்ந்த சபீர் அகமது ஆகியோர் வீடுகளில், சட்டவிரோத பணப் பரிமாற்றம் தொடர்பாக அமலாக்கத்துறை அதிகாரிகள் நேற்று முன்தினம் சோதனை நடத்தினர். அப்போது, ஏராளமான ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. அவை குறித்து விசாரிக்க வேண்டி இருப்பதால், மூன்று பேரும் ஏழு நாட்களுக்குள் விசாரணைக்கு நேரில் ஆஜராக வேண்டும் என, அமலாக்கத்துறை அதிகாரிகள் 'சம்மன்' அனுப்பி உள்ளனர்.