உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / டெய்லி பேப்பரை திறந்தாலே இதுதான்... முதல்வர் ஸ்டாலினுக்கு இ.பி.எஸ்., கண்டனம்!

டெய்லி பேப்பரை திறந்தாலே இதுதான்... முதல்வர் ஸ்டாலினுக்கு இ.பி.எஸ்., கண்டனம்!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: தினமும் தலைப்புச் செய்திகளை அலங்கரிக்கும் அளவு தமிழகத்தில் கொலைகள் நடப்பதாக எதிர்க்கட்சித் தலைவர் இ.பி.எஸ்., விமர்சித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவின் விவரம் வருமாறு; தமிழ்நாட்டில் நேற்று ஒரே நாளில் 6 பேர் படுகொலை செய்யப்பட்டு இருப்பதாக வரும் செய்திகள் அதிர்ச்சியளிக்கிறது. தினமும் தலைப்புச் செய்திகளை அலங்கரிக்கும் அளவிற்கு கொலைகளை மிக இயல்பாக்கியதே இந்த விடியா தி.மு.க., அரசின் மூன்றாண்டு சாதனை.வெளிநாட்டில் அமர்ந்தபடி கோப்புகளில் கையெழுத்து இடுவது போல் போட்டோஷூட் நடத்திய முதல்வர், தனது கட்டுப்பாட்டில் உள்ள சட்டம் ஒழுங்கு எப்படி இருக்கிறது என்று ஒருமுறையாவது கேட்டறிந்தாரா?தனது பிரதானப் பணிகளையே மறந்துவிட்டு, வாக்களித்த மக்களின் பாதுகாப்பு குறித்து எந்த அக்கறையும் இன்றி, தமிழ்நாட்டின் சட்டம் ஒழுங்கை கடந்த மூன்று ஆண்டுகளாக பின்நோக்கி தள்ளிக் கொண்டிருக்கும் முதல்வருக்கு எனது கடும் கண்டனம்.தி.மு.க., ஆட்சி பொறுப்பேற்ற நாள் முதலே சீரழியும் சட்டம் ஒழுங்கை இனியாவது பேணிக் காக்க கடுமையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு முதல்வரை வலியுறுத்துகிறேன்.இவ்வாறு இ.பி.எஸ்., தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 8 )

Durai Kuppusami
செப் 10, 2024 08:24

முதல்வரை வலியுறுத்துகிறேன்.... அம்மா இப்படி சொல்வார்களா. உனக்கேன் பயம் உன் பதவியை காப்பாற்ற உன் உன் கட்சிக்காரனை பார்த்து பயப்படு.... மொத்தமா நீ ஒரு அரசியல் கோழை


karutthu kandhasamy
அக் 17, 2024 10:33

ஈ பி எஸ் ஐ பார்த்து கேள்வி கேட்பது அபத்தம் அவர் கோழை அல்ல அவர் யாரையும் பார்த்து பயப்பட வேண்டியதில்லை


T.sthivinayagam
செப் 09, 2024 21:54

டிவி பார்த்து துப்பாக்கி சூடு தெரிந்து கொண்டவர் இப்போது பேப்பர் பார்க்க ஆரம்பித்துவிட்டாரா


அப்பாவி
செப் 09, 2024 21:10

பேப்பரை ஏன் படிக்குறீங்க? அரசின் சாதனை வேணும்னா சன் டி.வி பாருங்க. உங்களை துதி பாடி கேக்கணும்னா அம்மு டி.வி பாருங்க.


என்றும் இந்தியன்
செப் 09, 2024 18:05

இந்தியாவில் வருடத்தில் 7.3 /ஒவ்வொரு 1000 மக்களுக்கும் இறக்கின்றார்கள் அப்படியென்றால் டாஸ்மாக்கினாட்டில் 8.2 கோடி ஜனத்தொகை 82000 7.3 = 5,70,000 லட்சம் மக்கள் இறக்கின்றார்கள்???அதில் கொலை????


Srinivasan Krishnamoorthi
செப் 09, 2024 16:54

EPS OPS எதிர்ப்பால் ADMK கட்சியை படு குழியில் தள்ளுகிறார். திமுகவை விமரிசிக்க என்ன ஆர்வம். முதலில் உள்கட்சி பலமான நிலைக்கு வர முன்னெடுக்கும் நிலையை சிந்திக்கட்டும். கூஜா தூக்க ஜெயக்குமாரை தயார் செய்துள்ளது தான் இவர் சாதனை


Subramanian Srinivasan
செப் 09, 2024 16:42

செய்திதாளே அதற்குத்தானே.உன் ஆட்சிகாலத்தில் படிப்பதே இல்லை. தூத்துக்குடி மக்கள் 14 பேர்களை உன் காவல்துறை சுட்டுக் கொன்றதை டி.வி யில்படம்பார்க்கும் போதுதானே தெரிந்து கொண்டாய்?


karutthu kandhasamy
அக் 17, 2024 10:37

அதே மாதிரி அவர்கள் ஆட்சியில் கள்ளக்குறிச்சி சம்பவம் . எல்லாம் ஒரு குட்டையில் ஊறிய மட்டைகள் தான்


சமீபத்திய செய்தி