மேலும் செய்திகள்
முட்டை விலை தொடர்ந்து ஏறுமுகம்
19-Nov-2025
நாமக்கல்: முட்டை கொள்முதல் விலை, 'ஜெட்' வேகத்தில் உயர்ந்து வருவதால், பண்ணையாளர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். நாமக்கல் மண்டலத்தில் தினமும், 6 கோடி முட்டைகள் உற்பத்தி செய்யப்படுகின்றன. முட்டை கொள்முதல் விலையை தேசிய முட்டை ஒருங்கிணைப்புக்குழு நிர்ணயிக்கிறது. நவ., 21ல், 610 காசாக நிர்ணயித்து, 21 நாள் அதே விலையில் நீடித்த நிலையில், 12ம் தேதி, 5 காசு; நேற்று முன்தினம், 5 காசு; நேற்று மேலும், 5 காசு என, ஜெட் வேகத்தில் முட்டை விலை உயர்ந்து, 625 காசாக நிர்ணயம் செய்யப்பட்டது. தொடர்ந்து, முட்டை கொள்முதல் விலை அதிகரித்து வருவதால், பண்ணையாளர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
19-Nov-2025