உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / முட்டை விலை தொடர் சரிவு பண்ணையாளர்களுக்கு இழப்பு

முட்டை விலை தொடர் சரிவு பண்ணையாளர்களுக்கு இழப்பு

நாமக்கல்: சபரிமலை சீசன், கார்த்திகை தீபம் எதிரொலியால், முட்டை கொள்முதல் விலை சரிந்து வருகிறது. இரண்டு நாட்களில், பண்ணையாளர்களுக்கு, 15 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. நாமக்கல்லில், தேசிய முட்டை ஒருங்கிணைப்புக்குழு கூட்டம், அதன் தலைவர் சிங்கராஜ் தலைமையில் இன்று (நவ.,23) நடந்தது. அதில், முட்டை உற்பத்தி, மார்க்கெட்டிங் நிலவரம் குறித்து பண்ணையாளர்கள் விவாதித்தனர். இதையடுத்து, 560 காசுக்கு விற்ற முட்டை விலை, 20 காசு குறைத்து, 540 காசாக நிர்ணயம் செய்யப்பட்டது. கடந்த, 7ல், முட்டை கொள்முதல் விலை, 670 காசாக நிர்ணயம் செய்யப்பட்டது. தொடர்ந்து, அடுத்தடுத்த நாட்களில் முட்டை விலை சரிந்து, 540 காசாக நிர்ணயம் செய்யப்பட்டது. கடந்த, 13 நாட்களில், முட்டை கொள்முதல் விலை, 130 காசு சரிந்துள்ளது. தமிழ்நாடு கோழிப்பண்ணையாளர் சங்க செயலாளர் சுந்தரராஜன் கூறுகையில், ‘‘சபரிமலை சீசன், கார்த்திகை தீபம் எதிரொலியால், முட்டை நுகர்வு சரிந்துள்ளது. தற்போதைய சூழ்லில், ஒரு முட்டை உற்பத்தி செலவு, 620 காசுகள். ஆனால், 540 காசாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. ஒரு முட்டைக்கு, 130 காசு உற்பத்தி செலவில் இருந்து இழப்பு ஏற்படுகிறது. அதன் காரணமாக, இரண்டு நாட்களில் மட்டும், 15 கோடி ரூபாய், பண்ணையாளர்களுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளது,’’ என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை