உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / யாசகம் எடுத்த பணத்தை முதல்வர் நிவாரண நிதிக்கு கொடுத்த முதியவர்

யாசகம் எடுத்த பணத்தை முதல்வர் நிவாரண நிதிக்கு கொடுத்த முதியவர்

கடலுார்: துாத்துக்குடி முதியவர் யாசகம் பெற்ற பணம் 10 ஆயிரம் ரூபாயை, முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு வழங்கினார்.துாத்துக்குடி மாவட்டம், சாத்தாங்குளம் தாலுகா ஆலங்கிணறு கிராமத்தை சேர்ந்தவர் பூல்பாண்டியன், 70; இவர் தற்போது, கடலுார் மாவட்டம், வடலுாரில் தங்கி யாசகம் எடுத்து வருகிறார்.யாசகம் பெற்ற தொகையில் 10 ஆயிரம் ரூபாயை தமிழக முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு அளிப்பதற்காக நேற்று கடலுார் கலெக்டர் அலுவலகத்திற்கு வந்தார்.கலெக்டர் சிபி ஆதித்யா செந்தில்குமாரை சந்தித்து, 10 ஆயிரம் ரூபாயை வழங்கினார். இவர் ஏற்கனவே பல்வேறு மாவட்டங்களில் யாசகம் பெற்ற தொகையை, முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு வழங்கி உள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 7 )

S. Neelakanta Pillai
நவ 25, 2024 10:29

மக்களுக்கு பிச்சை போடும் அரசு, அரசுக்கு பிச்சை போடும் மக்கள். இதில் யார் உத்தமர், யார் ஏமாற்றுப் பேர்வழி. அந்த முதியவர், மக்களின் கொடைப்பண்பை கேவலப்படுத்திவிட்டார்.


Bhaskaran
நவ 20, 2024 13:54

பிச்சை எடுத்து அரசிடம் நன்கொடை தந்துள்ளார் அவருக்கு ரசீது கொடுத்ததாங்களாணத்தை ஆட்டை போட்டால் நேரடி எரிநரகம் நிச்சயம்


என்றும் இந்தியன்
நவ 19, 2024 16:32

பிச்சை போட்டார் என்று அறிவோமாக


Ramesh Sargam
நவ 19, 2024 12:15

போயும் போயும் முதல்வர் நிவாரணநிதிக்கு கொடுக்கணுமா? அவரே ஒரு முதியவர் இல்லத்துக்கோ அல்லது அநாதைகள் இல்லத்துக்கோ கொடுத்திருக்கலாம். முதல்வர் நிவாரண நிதிக்கு கொடுத்த பணம் கட்டாயம் அங்குள்ள சிப்பந்திகளால் ஆட்டைபோடப்படும்.


வைகுண்டேஸ்வரன்
நவ 19, 2024 11:02

ஏன்? உங்க ஊர் பஸ் ஸ்டாண்ட் அல்லது ஏதாவது கோவில் வாசலில் உக்காந்து கை நீட்டுங்க. பத்து பேரில் ரெண்டு பேராவது போட மாட்டாங்களா? உங்க ஊர் மக்கள் அவ்ளோ மோசமானவங்களா??


சம்பர
நவ 19, 2024 12:10

அதுக்கும் ராசி வேணும்


சம்பர
நவ 19, 2024 09:30

நம்மளுக்கு 10 பைசா கூட கிடைப்பதில்ல


முக்கிய வீடியோ