உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / பி.எல்.ஓ., க்களுக்கு தேர்தல் ஆணைய அடையாள அட்டை

பி.எல்.ஓ., க்களுக்கு தேர்தல் ஆணைய அடையாள அட்டை

தேனி; அடுத்தாண்டு நடக்கவுள்ள சட்டசபை தேர்தல் பணிகளில் ஈடுபட உள்ள ஓட்டுச்சாவடி நிலை அலுவலர்களுக்கு (பி.எல்.ஓ.,) தேர்தல் ஆணையம் புதிய அடையாள அட்டைகள் வழங்கியுள்ளது. தமிழகத்தில் அடுத்தாண்டு சட்டசபை தேர்தல் நடத்துவதற்கான ஆயத்த பணிகளை தேர்தல் ஆணையம் துவங்கியுள்ளது. இதற்காக மாவட்டங்கள் தோறும் மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் பெங்களூருவில் இருந்து கொண்டு வரப்பட்டுள்ளன. விரைவில் முதற்கட்ட சரிபார்ப்பு பணிகள் நடக்க உள்ளது. அதே நேரத்தில் வாக்காளர் பட்டியல் சுருக்க திருத்த முகாம்கள் நடத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது. வீடுகள் தோறும் ஓட்டுச்சாவடி நிலை அலுவலர்கள் (பி.எல்.ஓ.,க்கள்) கணக்கெடுப்பு உள்ளிட்ட பணிகளை மேற்கொள்ள உள்ளனர். இவர்கள் பணிபுரியும் போது தேர்தல்ஆணையம் வழங்கும் அடையாள அட்டைகளை அணிந்திருக்க வேண்டும் என பயிற்சிகளில் அறிவுறுத்தப்படுகிறது. இந்நிலையில் பி.எல்.ஓ.,க்களுக்கான புதிய அடையாள அட்டைகள் மாவட்ட தேர்தல் பிரிவு அலுவலகங்களுக்கு அனுப்பபட்டுள்ளன. அங்கிருந்து தாலுகா தேர்தல் பிரிவு அதிகாரிகள் மூலம் அவை பி.எல்.ஓ.,க்களுக்கு வழங்கப்பட உள்ளது. வழங்கப்பட உள்ள அடையாள அட்டையில் பி.எல்.ஓ.,கள் பெயர், புகைப்படம், பணிபுரியும் துறை, தொகுதி, அலைபேசி எண், வாக்காளர் அடையாள அட்டை எண் உள்ளிட்டவை இடம் பெற்றுள்ளன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை