உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / தலைவர்களின் பிரசார செலவு: தேர்தல் ஆணையம் சலுகை

தலைவர்களின் பிரசார செலவு: தேர்தல் ஆணையம் சலுகை

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: 'அரசியல் கட்சிகளின் தலைவர்கள் தேர்தல் பிரசாரம் செய்யும் போது, விமானம் உள்ளிட்ட போக்குவரத்து செலவுகள், கட்சியின் வேட்பாளர்கள் மற்றும் முகவர்கள் கணக்கில் சேராது' என, தமிழக தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் கூறியுள்ளார்.அவரது அறிவிப்பு:அரசியல் கட்சிகளின் தலைவர்கள் தேர்தல் பிரசாரம் செய்யும் போது, விமானம் உள்ளிட்ட போக்குவரத்து செலவுகள், கட்சியின் வேட்பாளர்கள் மற்றும் முகவர்கள் கணக்கில் சேராது.இந்த சலுகையை பெற அங்கீகரிக்கப்பட்ட கட்சிகள், 40 பேரின் பெயர் பட்டியலையும், பதிவு செய்யப்பட்ட அங்கீகரிக்கப்படாத கட்சிகள், 20 பேரின் பெயர் பட்டியலையும் அனுப்ப வேண்டும்.தேர்தல் செலவில் இருந்து விலக்கு பெற வேண்டிய தலைவர்கள் பட்டியலை, தேர்தல் அறிவிப்பு வெளியிடப்பட்டதில் இருந்து, ஏழு நாட்களுக்கள் சமர்ப்பிக்க வேண்டும். ஈரோடு கிழக்கு சட்டசபை தொகுதிக்கான தேர்தல் அறிக்கை, 10ம் தேதி வெளியிடப்பட்டு உள்ளது.செலவு தொகையில் இருந்து விலக்கு பெற விரும்பும் கட்சிகள், தங்கள் கட்சியின் சார்பில் பிரசாரம் செய்யும் தலைவர்களின் பெயர் பட்டியலை, வரும் 17ம் தேதிக்குள் அனுப்ப வேண்டும். இந்த பட்டியலில் உள்ளவர்களின் பயண செலவுக்கு மட்டும் விலக்கு அளிக்கப்படும்.இதுதவிர, மற்ற செலவு கள் அனைத்தும் வேட்பாளரின் செலவு கணக்கில் சேர்க்கப்படும். அதேநேரம், வேட்பாளருக்கு வேறு கட்சியின் நட்சத்திர தலைவர் பிரசாரம் செய்தால், அதில் விலக்கு கேட்க இயலாது.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

Dharmavaan
ஜன 12, 2025 09:14

ஓட்டுக்கு பணம் இலவசங்கள் கொடுப்பதையோ கூண்டில் அடைத்து வைத்து ஒட்டு போட வைப்பதையே ஏன் பேசவில்லை


Dharmavaan
ஜன 12, 2025 09:12

இவளை தேர்வு/சிபாரிசு செய்தது யார். எல்லாமே திமுக கொத்தடிமைகளாக இருக்கிறது


Kasimani Baskaran
ஜன 12, 2025 07:15

இதையெல்லாம் முன்னரே செய்திருக்க வேண்டும். அதே சமயம் ஓட்டுக்கு பணம் கொடுப்போரையும் சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும்.


சமீபத்திய செய்தி