உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / தமிழக பா.ஜ., தலைவராக போட்டியின்றி தேர்வாகிறார் நயினார் நாகேந்திரன்

தமிழக பா.ஜ., தலைவராக போட்டியின்றி தேர்வாகிறார் நயினார் நாகேந்திரன்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: தமிழக பா.ஜ., தலைவர் பதவிக்கான தேர்தலுக்கு, பா.ஜ., எம்.எல்.ஏ., நயினார் நாகேந்திரன் விருப்ப மனு தாக்கல் செய்தார். வேறு யாரும் மனு தாக்கல் செய்யவில்லை. இதனையடுத்து புதிய தலைவராக அவர் போட்டியின்றி தேர்வு செய்யப்படுவது உறுதி ஆகி உள்ளது. இது குறித்து நாளை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும்.அமைப்பு ரீதியாக தமிழக பா.ஜ.,வில், 67 மாவட்டங்கள் உள்ளன. அக்கட்சியில் புதிய உறுப்பினர் சேர்க்கை, கடந்த ஆண்டு செப்டம்பரில் துவங்கியது. அதைத் தொடர்ந்து, நவம்பரில் கிளை அளவில் தேர்தல் நடத்தி, பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டனர். தொடர்ந்து, மண்டல தலைவர்கள், மாவட்ட தலைவர்கள் பதவிகளுக்கும் தேர்தல் நடத்தப்பட்டது.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=tvk3dowc&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0இந்தாண்டு ஜனவரியில், புதிய மாவட்ட தலைவர்கள் நியமிக்கப்பட்டனர். மாநில தலைவர் பதவிக்கு, ஜனவரியில் தேர்தல் நடத்தப்பட இருந்தது. டில்லி சட்டசபை தேர்தல் உள்ளிட்ட காரணங்களால் தேர்தல் தாமதமானது. மாநில தலைவர் பதவிக்கான தேர்தல் நாளை(ஏப்.12) நடக்கிறது. போட்டியிட விருப்பம் உள்ளவர்கள், இன்று (ஏப்.11) மதியம் 2:00 முதல் மாலை 4:00 மணி வரை விருப்ப மனுவை, மாநில தலைமை அலுவலகத்தில் சமர்ப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டு இருந்தது. இந்நிலையில் இன்று (ஏப்ரல் 11) தமிழக பா.ஜ., தலைவர் பதவிக்கான தேர்தலுக்கு, பா.ஜ., எம்.எல்.ஏ., நயினார் நாகேந்திரன் மட்டும் விருப்ப மனு தாக்கல் செய்தார். நயினார் நாகேந்திரன் விருப்ப மனுவில் அண்ணாமலை, பொன். ராதாகிருஷ்ணன், எச்.ராஜா, வானதி சீனிவாசன், கனகசபாபதி, வி.பி.துரைசாமி, பொன் பாலகணபதி உள்ளிட்டோர் பரிந்துரை செய்து கையெழுத்திட்டனர்.விருப்ப மனு தாக்கல் செய்த நயினார் நாகேந்திரனுக்கு பா.ஜ., மூத்த தலைவர்கள் கை குலுக்கி வாழ்த்து தெரிவித்தனர். விருப்ப மனு தாக்கல் மாலை 4 மணி வரை நடந்தது. வேறு யாரும் விருப்ப மனு தாக்கல் செய்யவில்லை. இதனையடுத்து தமிழக பா.ஜ., தலைவராக நயினார் நாகேந்திரன் போட்டியின்றி தேர்வு செய்யப்பட உள்ளார். இது குறித்து நாளை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட உள்ளது.

நயினார் நாகேந்திரன் பேட்டி

''நான் விருப்ப மனு மட்டும் தாக்கல் செய்துள்ளேன். கட்சி தலைமை முடிவு எடுக்கும். பரிந்துரை செய்தவர்களுக்கு நன்றி. கட்சி தலைமையின் அறிவுரைப்படி தலைவர் பதவிக்கு மனு கொடுத்துள்ளேன்'' என பா.ஜ., எம்.எல்.ஏ., நயினார் நாகேந்திரன் நிருபர்கள் சந்திப்பில் தெரிவித்தார்.சென்னையில் கமலாலயத்தில் பா.ஜ., மாநில தலைவர் பெயர் பலகையில் இருந்து அண்ணாமலை பெயர் ஸ்கெட்ச் மார்க்கர் கொண்டு அடிக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 90 )

மா.மலையரசன்., தூத்துக்குடி....
ஏப் 12, 2025 12:08

அண்ணாமலை ji மாதிரி இனி யாரு அநியாயத்துக்கு எதிரா துணிச்சலா போராடுவா...?


Ambedkumar
ஏப் 12, 2025 11:48

ஆட்சி மாறி காட்சிகள் மாறவேண்டும்


venugopal s
ஏப் 12, 2025 10:43

வரும் தமிழக சட்டமன்ற தேர்தலில் பாஜக கூட்டணி தோல்வி அடையும், ஆனால் பாஜக ஆதரவாளர்களுக்கு தோல்விக்கு ஒரு நல்ல காரணம் இப்போதே தயாராகி விட்டது.அண்ணாமலை மட்டும் தமிழக தலைவராக இருந்திருந்தால் நிச்சயம் வெற்றி பெற்று இருப்போம் என்று சொல்லி சமாளிக்கலாம்!


angbu ganesh
ஏப் 12, 2025 09:54

அண்ணாமலைக்கு என்ன கொறச்சல் அவர் நீடிச்சிருந்த தமிழ் நாடு நல்ல முன்னேற்றம் வந்திருக்கும்


மூர்க்கன்
ஏப் 12, 2025 11:18

முத்துன கத்திரிக்காய் குழம்புக்கு உதவாது. ..


Ganesan
ஏப் 12, 2025 12:49

முத்துன கத்தரிக்காயில் பல விதைகள் உள்ளன. அவை பல கத்தரி செடிகளை உண்டு பண்ணலாம்...


venugopal s
ஏப் 12, 2025 09:35

டெல்லி தலைமை ஒருவரை மாநில தலைவராக முடிவு செய்து விட்டு அவரை மட்டும் தேர்தலில் போட்டியிட சொல்லி மற்றவர்களை ஒதுங்கி இருக்க சொல்லி விட்டு ஜனநாயக முறையில் தலைவரை ஏகமனதாக தேர்வு செய்து விட்டோம் என்று சொல்லி பெருமைப் பட்டுக் கொள்வது அபத்தமாக உள்ளது. இதற்கும் திமுகவின் மன்னராட்சி முறையில் தலைவரை தேர்வு செய்வதற்கும் என்ன வித்தியாசம் உள்ளது? கேட்டால் பாஜகவில் யார் வேண்டுமானாலும் தலைவர் ஆகமுடியும், உள்கட்சி ஜனநாயகம் என்று உருட்ட வேண்டியது. நல்லா இருக்கு உங்க நாடகம்!


Kumar
ஏப் 12, 2025 07:09

திமுக தோல்வி அடைந்தால் சரி.... எங்கள் வாக்கு பாஜக அதிமுக கூட்டணிக்கு தான்


Kasimani Baskaran
ஏப் 12, 2025 06:57

தீம்க்காவுடன் கூட்டணி அமையவில்லை என்ற சோகத்தில் சுகுவனம் இருப்பதாக கேள்விப்படுகிறேன்.. தோற்பது உறுதி என்பது மட்டும் வெகுவாக தெரிகிறது - பணத்தை விதைத்தால் கூட்டணியாவது கூந்தலானது என்று ஆத்தா தீம்க்கா ஒதுங்கிக்கொள்ள அதிக வாய்ப்பு இருக்கிறது.


MARUTHU PANDIAR
ஏப் 12, 2025 05:36

இந்த முடிவில் மோடிக்கு உடன்பாடா தெரியாது .மோடியின் கமிழக வருகையின் போது அருகில் அமர்ந்திருந்த அண்ணாமலையை அர்த்தத்துடன் முதுகில் பலமாக தட்டிக் கொடுத்தது அவர் தமிழகத்தின் எதிர்காலத்துக்கு பா.ஜவின் நம்பிக்கை நட்சத்திரம் என்பதை சொல்லாமல் சொன்னதை அனைவரும் பார்க்க வில்லையா?


மூர்க்கன்
ஏப் 12, 2025 11:20

ஆமா ஆமா அவருதான் அடுத்த பிரதமர்...உருட்டுங்க..


Iyer
ஏப் 12, 2025 04:58

இதில் பெரும்பாலான COMMENTS - ADMK + BJP கூட்டணிக்கு எதிராக கருத்து இட்டுள்ளன. அந்த COMMENTS - SPONSORED COMMENTS போல தெரிகின்றன. தினமலர் இதில் தீவிர புலன் விசாரணை செய்யவேண்டும்.


Iyer
ஏப் 12, 2025 04:52

ADMK உடன் கூட்டு என்பது சிறுது முகம் சுளிக்கவைக்கிறது. ஆனால் சிலசமயங்களில் அரசியல் சாணக்யா நீதியில் செய்யவேண்டும். காஷ்மீரில் மெகபூபா முஃதியுடன் கூட்டு வைக்கவில்லையா? தமிழனுக்கு புத்தி வந்து - DMK ஊழல் கட்சியை விரட்டணும்.


சமீபத்திய செய்தி