உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / விவசாய மின் இணைப்புக்கு லஞ்சம் கேட்ட மின்வாரிய உதவிப் பொறியாளர் கைது

விவசாய மின் இணைப்புக்கு லஞ்சம் கேட்ட மின்வாரிய உதவிப் பொறியாளர் கைது

கோவை: விவசாய மின் இணைப்புக்கு லஞ்சம் வாங்கிய போது, மின்வாரிய உதவிப் பொறியாளர் சத்தியவாணியை லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் கைது செய்தனர்.கோவை மாவட்டம் பொள்ளாச்சி ஊஞ்சலம்பட்டியை சேர்ந்தவர் ஜெயராமன். இவருக்கு சொந்தமான நிலம் உடுமலை அருகே பொட்டையம்பாளையத்தில் உள்ளது. விளை நிலத்திற்கு மின் இணைப்பு கேட்டு கொங்கல் நகரம் உதவி பொறியாளர் அலுவலகத்தில் விண்ணப்பித்திருந்தார். விண்ணப்பத்தை பரிசீலக்கவும் மின் இணைப்பு வழங்கவும் உதவி பொறியாளர் சத்தியவாணி, ஜெயராமனிடம் லஞ்சம் கேட்டுள்ளார். இதையடுத்து ஜெயராமன் திருப்பூர் லஞ்ச ஒழிப்பு துறையிடம் புகார் அளித்தார். ஜெயராமனிடம் லஞ்சமாக 2 ஆயிரம் ரூபாயை சத்தியவாணி வாங்கிய போது திருப்பூர் லஞ்ச ஒழிப்புத்துறை இன்ஸ்பெக்டர் சசிரேகா தலைமையிலான போலீசார் கைது செய்தனர். இது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 5 )

Praba
அக் 10, 2024 16:17

லஞ்சம் வாங்கிய அவரை உடனடியாக நாடு கடத்த வேண்டு்ம்


Subash BV
அக் 10, 2024 12:27

Whats strange. Standard suitcases politics. Thats why beggars become billionaires if they join in govt offices or become politicians. No choice. All due to our nonsense Constitution. Think seriously.


M S RAGHUNATHAN
அக் 09, 2024 21:20

The government should give the details of the arrested person such as his e, whether he or she entered the service through public recruitment policy, the marks scored both in writing and in personal interview if anyand whether appointment was made under Reservation Policy or under Compassionate ground and the qualification


நிக்கோல்தாம்சன்
அக் 09, 2024 20:16

ஏங்க மேடம் இப்படி விவசாயிகளிடமும் ? தமிழக திராவிட அரசியல்வியாதி மாதிரி ஆயிட்டிங்களே


Anna Durai
அக் 09, 2024 18:24

டிஸ்மிஸ்ஸ்ட் இம்மீடிட்டேலி அன்ட் டுக் ப்ரிசன்


முக்கிய வீடியோ