உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / ரூ.100 கோடி நிலக்கரி மாயமான விவகாரம் விசாரணையை மூடி மறைக்கும் மின் வாரியம்

ரூ.100 கோடி நிலக்கரி மாயமான விவகாரம் விசாரணையை மூடி மறைக்கும் மின் வாரியம்

சென்னை : வடசென்னை, துாத்துக்குடி அனல் மின் நிலையங்களில், 100 கோடி ரூபாய் மதிப்புள்ள நிலக்கரி மாயமான விவகாரத்தில் விசாரணை நடத்திய மின் வாரியம், நான்கு ஆண்டுகளாக எந்த நடவடிக்கையும் எடுக்காமல் தாமதம் செய்கிறது. இது, முறைகேட்டில் ஈடுபட்டவர்களை காப்பற்றும் முயற்சியா என்ற சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவள்ளூர் மாவட்டத்தில் வடசென்னை, சேலத்தில் மேட்டூர் மற்றும் துாத்துக்குடியில், மின் வாரியத்திற்கு, 4,320 மெகா வாட் திறனில், ஐந்து அனல் மின் நிலையங்கள் உள்ளன. இவற்றில் மின் உற்பத்திக்கு எரிபொருளாக பயன்படுத்தப்படும் நிலக்கரி, ஒடிசா மாநில சுரங்கங்களில் இருந்து எடுத்து வரப்படுகிறது. கடந்த, 2021 மார்ச் நிலவரப்படி, வடசென்னை மின் நிலையத்தில், கொள்முதல் செய்ததை விட, 2.38 லட்சம் டன் நிலக்கரி இருப்பு குறைவாக இருந்தது. இதேபோல், துாத்துக்குடி மின் நிலையத்தில், 72,000 டன் நிலக்கரி இருப்பு குறைவாக இருந்தது. இவற்றின் மதிப்பு, 100 கோடி ரூபாய். இதை, அந்தாண்டு ஆகஸ்டில், அப்போதைய மின்துறை அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜி தெரிவித்தார். அவரும், மின் வாரிய உயரதிகாரிகளும் இரு அனல் மின் நிலையங்களுக்கும் சென்று, நிலக்கரி மாயமானதை உறுதி செய்தனர். இதையடுத்து, இந்த விவகாரம் தொடர்பாக, மின் தொடரமைப்பு கழக மேலாண் இயக்குநர் தலைமையில் விசாரணை குழு அமைக்க, அப்போதைய அமைச்சர் செந்தில் பாலாஜி உத்தரவிட்டார். அதன்படி விசாரணை நடத்தப்பட்டது. அதில், நிலக்கரி மாயமானது உறுதி செய்யப்பட்டு, அறிக்கையும் சமர்ப்பிக்கப்பிட்டது. நான்கு ஆண்டுகளாகியும் விசாரணை அறிக்கையை, மின் வாரியம் வெளியிடாமல் உள்ளது. இது முறைகேட்டில் ஈடுபட்டவர்களை காப்பாற்றும் முயற்சியா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. இதுகுறித்து, மின் வாரிய பணியாளர்கள் கூறியதாவது: விசாரணை அறிக்கை வெளியானால் தான், தவறு செய்தவர்கள் யார் என்பது தெரியவரும். அவர்களிடம் இருந்து இழப்பீட்டு தொகை வசூலிப்பதுடன், சட்டப்படி மேல் நடவடிக்கை எடுக்க முடியும். இல்லையேல், நிலக்கரி மாயமானதாக கூறப்படும் புகாரில் உண்மை இல்லை என்று கூறவும் வாய்ப்புள்ளது. இனியும் காலதாமதம் செய்யாமல், நிலக்கரி மாயமான விவகாரம் தொடர்பான விசாரணை முடிவை வெளியிட வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 24 )

Varadarajan Nagarajan
அக் 06, 2025 01:31

யாருக்கும் யாரும் சளைத்தவர்கள் அல்ல. டீலிங் முடிந்திருக்கும். இல்லையென்றால் இவ்வளவுகாலம் மேல்நடவடிக்கைகள் தொடங்கியிருக்கும். அதுவும் இல்லையென்றால் ஆளுநர் அனுமதிகொடுக்கவில்லையென உருட்டலாவது நடந்திருக்கும்.


மணிமுருகன்
அக் 06, 2025 00:34

மின்சார நிலக்கரி ஊழலுக்கு பேர் பெற்ற அயர்லாந்து வாரிசு திராவிட மாடல் ஓட்டை விளம்பர மோக ஊழல்கட்சி திமுகா கூட்தணி இருக்கும் போது உண்மை வெளியே வருமா ஊழலில் பங்கு போய் இருக்கும் அதான் அமைதி மின்சார அமைச்சர் மீதும் ஊழல் புகார் உள்ளது அதற்கும் பதில் இல்லை


VSMani
அக் 05, 2025 15:49

திமுக அதிமுக இரண்டுமே ஊழல் பெருச்சாளிகள். இந்த இரண்டு கட்சிகளும் தமிழ்நாட்டிலிருந்து ஒழிந்தால்தான் தமிழ்நாடு உற்படும்.


panneer selvam
அக் 05, 2025 15:28

Today election in Tamilnadu is a costly business . So that money has to be generated at every opportunity .


Thravisham
அக் 05, 2025 14:35

30000 கோடியில் அடக்கம்


சுந்தரம் விஸ்வநாதன்
அக் 05, 2025 14:28

களஉண்மை தெரியாமல் பலரும் கருத்து எழுதிறார்கள். பீகார் மேற்கு வங்கம் மற்றும் இதர பகுதகளில் இருந்து பெறப்படும் நிலக்கரியில் பாறைக்கற்களும் அடங்கும். விஜயராகவன் வாரியத்தலைவராக இருந்த காலத்தில் இந்த பாறைகளுக்கு ஏன் நாம் நிலக்கரி விலை கொடுக்கவேண்டும் என்று நடவடிக்கை எடுத்தார். இப்போதும் கூட கரியுடன் சேர்த்து கற்களை அனுப்புகின்றனர். நாம் கற்களை தனியே பிரித்து எடுத்துவிட்டு கரியை மட்டுமே பயன்படுத்துகிறோம். கற்களின் எடை பல டன்கள். அடுத்து ரயில்வே வேகன்களில் ஏற்படும் எடைக்குறைபாடுகள். சுரங்கத்தில் ஐம்பது டன் ஏற்றினால் இறுதியில் கிடைப்பது நாற்பத்து எட்டு அல்லது நாற்பத்து ஒன்பது டன்கள் தான். Pilferage & Spillageஎல்லாவற்றிற்கும் மேல் அனல் மின் நிலையங்களில் கரியைக்கொட்டி வைத்திருக்கும் இடங்களில் இருந்து புல்டோசர் மூலமே கரியைத்தள்ளி கொதிகலன்களுக்கு அனுப்ப முடியும். இதில் தரையில் மண்ணோடு சேரும் கரியும் உண்டு. ஆனால் கணக்கீடு செய்யும் போது கரியைமட்டுமே கணக்கு எடுக்கிறோம். கணக்கு புத்தகத்திலும் ரயில்வே பில் களிலும் கற்களுக்கும் சேர்த்தே எடை இருக்கும். இந்த குறைபாடு நாளடைவில் வளர்ந்து பெரிதாக தோற்றமளிக்கும். அதைத்தான் பாட்டிலுக்கு பத்து ரூபாய்க்காரர் செய்தார். கரியில் ஊழல் நடக்க அனல் மின் நிலைய அளவில் வாய்ப்புகள் கிடையாது. ஊழல் செய்யவேண்டும் என்றால் பாட்டிலுக்கு பத்து ரூபாய் மாதிரி எளிய வழிமுறைகள் எவ்வளவோ இருக்கின்றன.


திகழ்ஓவியன்
அக் 05, 2025 12:33

அன்று மந்திரி கோல்டுமணி இருந்த பொது, அவர்தான் பியூஸ் கோயல் மாதா மாதம் சந்தித்தார் கப்பம் கட்டி இருப்பார் அப்புறம் எப்படி வழக்கு


சுந்தரம் விஸ்வநாதன்
அக் 05, 2025 16:10

அதற்கும் முன்னரே மின்வெட்டுத்துறை அமைச்சர் ஆர்க்காட்டார் இருந்திருக்கிறாரே


ramesh
அக் 05, 2025 10:47

இது தங்கமணி மின்துறை அமைச்சராக இருந்த போது நடந்தது


panneer selvam
அக் 05, 2025 15:30

If so , why Stalin ji did not do police investigation and take the culprits to court . Dravidian Parties are specialized in looting the public money .


rasaa
அக் 05, 2025 10:32

தமிழக நீதித்துறையில் ஒரு சிலரை தவிர மற்றவர்கள் விலைபோய் வெகுகாலமாகி விட்டது. இந்த அரசு போட்ட பிச்சையில் பதவி வகிக்கும் இவர்கள் அவர்களுக்கு ஆதரவாகத்தான் இருப்பார்கள்.


Sudha
அக் 05, 2025 10:24

இனி குற்றம் சொல்ல வேண்டியது நீதி மன்றங்கள் மற்றும் அரசியல் அமைப்பு தலைமை மட்டுமே. மீடியா வாழ் ஒரு பயனும் இல்லை என்பது ஊரறிந்த உண்மை.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை