உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / மின்கம்பத்தை மாற்ற ரூ.20 ஆயிரம் லஞ்சம்: மின்வாரிய செயற்பொறியாளர் கைது

மின்கம்பத்தை மாற்ற ரூ.20 ஆயிரம் லஞ்சம்: மின்வாரிய செயற்பொறியாளர் கைது

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

கோவை: நிலத்தின் நடுவில் இருந்த மின்கம்பத்தை, ஓரமாக மாற்றித் தருவதற்கு ரூ.20 ஆயிரம் லஞ்சம் வாங்கிய மின்வாரிய செயற்பொறியாளரை கோவை லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்தனர்.திருப்பூர் மாவட்டத்தைசேர்ந்தவர் செந்தில்பிரபு(36).மென்பொருள் பொறியாளர். தந்தை கருப்பசாமி. இவருக்கு சொந்தமாக கோவை மாவட்டம் நீலம்பூர் கிராமம் முதலிபாளையம் பகுதியில் 99 சென்ட் நிலம் உள்ளது. இந்த நிலத்தின் நடுவே மின்கம்பம் இருந்தது. இதனையறிந்த செந்தில்குமார், கடந்த மே மாதம் குரும்பபாளையம் மின்வாரிய அலுவலகத்திற்கு சென்று அதிகாரிகளை அணுகி, நிலத்தின் நடுவில் இருக்கும் மின்கம்பத்தை இடமாற்றம் செய்ய கோரிக்கை விடுத்தார். நிலத்தை மாற்றுவதற்கு ரூ.50 ஆயிரத்திற்கு மேல் செலவாகும் என்பதால், இறுதி முடிவை செயற் பொறியாளர் தான் எடுக்க வேண்டும் என அவர்கள் தெரிவித்தனர். இதனையடுத்து சோமனூர் மின்வாரிய செயற்பொறியாளர் சபரிராஜனை(57) கடந்த 09ம் தேதி அணுகிய செந்தில்குமார் நிலத்தை மாற்ற அனுமதி கோரினார். தொடர்ந்து கருப்பசாமியை தொடர்பு கொண்ட மின்வாரிய அதிகாரிகள் மின்கம்பத்தை மாற்றுவதற்கு ரூ.20 ஆயிரம் லஞ்சம் கேட்டனர். நேற்று அதிகாரிகளை செந்தில்குமாரும், கருப்பசாமியும் சந்தித்தனர். அப்போது இன்று வந்து லஞ்சப்பணத்தை தரும்படி கேட்டனர்.இது குறித்து இருவரும் லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் அளித்தனர். அவர்கள் அறிவுரைப்படி, இன்று அவர்கள் சோமனூர் சென்று, செயற்பொறியாளர் சபரிராஜனை சந்தித்தனர். அப்போது இடமாற்றம் குறித்து கேட்டனர். அதற்கு ஒரு வாரத்தில் மின்கம்பத்தை மாற்றுவதாக சபரிராஜன் உறுதிஅளித்தார். இதனையடுத்து இருவரும் ரூ.20 ஆயிரம் லஞ்சப்பணத்தை கொடுத்தனர் அதனை வாங்கி மேஜையில் வைத்தார்.பிறகு, தந்தையும், மகனும் லஞ்ச ஒழிப்பு போலீசுக்கு தகவல் கொடுத்தனர். அவர்கள் வந்து ஆய்வு செய்த போது சபரிராஜன் லஞ்சம் வாங்கியது உறுதியானது. அவரிடம் இருந்து லஞ்சப்பணம் பறிமுதல் செய்யப்பட்டது. சபரி ராஜன் கைது செய்யப்பட்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 10 )

c.mohanraj raj
ஜூன் 18, 2025 10:36

மிகவும் குறைவாக கேட்டுள்ளார் ஒரு ரெண்டு கோடியாவது கேட்டிருக்கலாம் மின்சாரத்துறை ஆரம்பிக்கப்பட்டதிலிருந்து அதிகாரிகளாக இருந்தவர்களின் சொத்துக்களை பிடுங்கினாலே அதன் கடனை அடைத்து மீதியும் கிடைக்கும் அவ்வளவு திருடர்கள் அதில் உள்ளார்கள்


RAMESH
ஜூன் 18, 2025 09:05

லஞ்சம் வாங்காத துறை எதுவுமில்லை....


Bhaskaran
ஜூன் 18, 2025 08:21

தினமும் இடப்பக்கத்தில் நேற்றைய லஞ்சாபகேசன்கள் என்று கட்டம் கட்டிப்போட்ட ஆலும் ஈனர்கள் லஞ்சம் வாங்குவதை நிறுத்த மாட்டார்கள் லஞ்சம் வாங்கவில்லை என்றால் அன்றைய பிறவிப் பயனை அடையாத நாள் என்று நினைக்கின்றனர்


சுந்தரம் விஸ்வநாதன்
ஜூன் 17, 2025 20:48

வாங்கிய 20000 ல் மேலிடத்துக்கு கொஞ்சம் கட்டிங் கொடுத்தால் பிரச்சினை தீர்ந்துவிடும்


Marimuthu Kaliyamoorthy
ஜூன் 18, 2025 16:07

HANG.


Ramesh Sargam
ஜூன் 17, 2025 19:41

திமுக ஆட்சியில் லஞ்சம் வாங்கவில்லை என்றால் மட்டும் செய்தியாக வெளியிடவும். லஞ்சம் வாங்குவதை செய்தியாக தினம் தினம் அதுபோன்ற செய்திகளைப்போட்டு மக்களை துன்புறுத்தாதீர்கள்.


ramesh
ஜூன் 17, 2025 21:23

எந்த ஆட்சியாளர்கள் இருந்தாலும் அதிகாரிகள் வாங்கும் லஞ்சத்தை தடுக்க முடியாது . எந்த ஆட்சியாளரும் யோக்கியன் இல்லை


Saai Sundharamurthy AVK
ஜூன் 17, 2025 19:37

இதே பிரச்சினை எல்லா இடங்களிலும் ஓடிக் கொண்டு தான் இருக்கிறது. தமிழக மின் வாரியம் திருந்துவதாக தெரியவில்லை.


chennai sivakumar
ஜூன் 17, 2025 20:58

நான் காசு கொடுத்துதான் இந்த போஸ்டிங் வந்தேன். அதை நான் எப்படி எடுப்பது? என்று என் நண்பரிடம் ஒருவர் கூறினார்.


முதல் தமிழன்
ஜூன் 17, 2025 19:02

அதான் கையும் களவுமாக மாட்டிகிட்டாரே, உடனே தீர்ப்பு கொடுக்கவும்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை