துணை மின்நிலையம் அமைக்க கடன் கேட்கிறது மின் வாரியம்
சென்னை:தமிழகத்தில், 110/ 33 கிலோ வோல்ட் திறனில், 54 துணைமின் நிலையங்கள் அமைக்க, மத்திய அரசின், ஆர்.இ.சி., நிறுவனத்திடம், 840 கோடி ரூபாயை கடனாக வழங்குமாறு, மின் வாரியம் கேட்டுள்ளது. சீராக மின் வினியோகம் செய்ய, 110 கி.வோ., திறனில், புதிதாக, 54 துணைமின் நிலையங்கள் அமைக்க, மின் வாரியம் முடிவு செய்துள்ளது. இதற்காக, மத்திய அரசின் ஆர்.இ.சி., நிறுவனத்திடம், 840 கோடி ரூபாயை, மின் வாரியம் கடனாக கேட்டுள்ளது. இந்த நிதி கிடைத்ததும், துணைமின் நிலையங்கள் அமைக்கும் பணி துவங்கும்.