உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / தர்மபுரி காட்டில் யானை வேட்டை; வனத்துறையில் இருவர் சஸ்பெண்ட்!

தர்மபுரி காட்டில் யானை வேட்டை; வனத்துறையில் இருவர் சஸ்பெண்ட்!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

தர்மபுரி: தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் வனச்சரகம் ஏமனூர் வனப்பகுதியில், கடந்த வாரம் யானை வேட்டையாடப்பட்டு தும்பிக்கை தனியாகவும், உடல் எரிக்கப்பட்ட நிலையிலும் கண்டெடுக்கப்பட்டது. இது தொடர்பாக நடவடிக்கை எடுக்க தவறிய வனத்துறை அதிகாரிகள் இருவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் வனச்சரகத்திற்கு உட்பட்ட ஏமனூர் அருகே சிங்காபுரம் வனப்பகுதியில் கடந்த மார்ச் 1ல்,யானை மர்மமான முறையில் இறந்துள்ளதாக பென்னாகரம் வனத்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. இதுகுறித்து விசாரணை மேற்கொண்டு வந்த வனத்துறையினர் யானை முகம் சிதைக்கப்பட்டு, தும்பிக்கை தனியாக கிடந்ததை உறுதி செய்தனர்.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=qcxept48&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0அடையாளம் தெரியாதவாறு யானை தீயிட்டு எரிக்கப்பட்ட நிலையில் இருந்தது. இதனால் ஆண் யானை தந்தத்திற்காக கொன்று இருக்கலாம் என வனத்துறையினர் தெரிவித்தனர். சம்பவத்தை தடுக்க தவறிய நெருப்பூர் பிரிவு வனவர் சக்திவேல், ஏமனூர் பீட் வனக் காப்பாளர் தாமோதரன் இருவரையும், தற்காலிக பணியிடை நீக்கம் செய்து மாவட்ட வன அலுவலர் ராஜாங்கம் உத்தரவிட்டுள்ளார். யானை உயிரிழப்பிற்கான காரணம் குறித்து விசாரணை நடந்து வருகிறது. மூன்று தனிப்படைகள் அமைக்கப்பட்டு யானையை கொன்றவர்களை வனத்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

PR Makudeswaran
மார் 07, 2025 10:57

பணம் கொடுத்தால் யானையே பிடித்து கொடுப்பார்கள். அதுதான் தி மு க அரசின் நிலை.சட்டம் ஒழுங்கு நேர்மை நியாயம் கிலோ என்ன விலை.


अपावी
மார் 07, 2025 10:53

இந்த திருட்டு திராவிடனுங்கள சஸ்பெண்ட் பண்ணாம, யானையை உட்டு மிதிக்கச் செய்யணும்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை