உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / பதிவுத்துறையில் பொது மாறுதல் பணி அலுவலர் சங்கம் வலியுறுத்தல்

பதிவுத்துறையில் பொது மாறுதல் பணி அலுவலர் சங்கம் வலியுறுத்தல்

சென்னை :'பதிவுத் துறையில், அனைத்து நிலைகளிலும் உள்ள தற்காலிக பணி நீக்கத்தை ரத்து செய்து, அலுவலர்களை மீண்டும் பணியில் அமர்த்த வேண்டும்' என, பதிவுத்துறை மாநில பணி அலுவலர் சங்கம் வலியுறுத்தி உள்ளது.சங்க பொதுக்குழுக் கூட்டம், நேற்று சென்னையில் நடந்தது. கூட்டத்தில் சங்கத் தலைவராக செந்துார்பாண்டியன், பொதுச்செயலராக உத்தமசிங், பொருளாளராக பாவேந்தன், துணை தலைவர்களாக சுபிதாலட்சுமி, பாலசுப்பிரமணியன், இணைச் செயலராக கனகராஜ் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.கூட்டத்தில், பதிவுத்துறையில் அனைத்து நிலைகளிலும் உள்ள, தற்காலிக பணி நீக்கத்தை ரத்து செய்து, அலுவலர்களை மீண்டும் பணியில் அமர்த்த வேண்டும். நீண்ட காலமாக பொது மாறுதல் செய்யப்படாது, பல ஆண்டுகள் ஒரே இடத்தில் பணியாற்றும் நிலை உள்ளது. கலந்தாய்வு வழியே மாறுதல் வழங்க, உடனடியாக அரசாணை வழங்க வேண்டும்.உதவி பதிவுத்துறை தலைவர் நிலையில் பணியை உயர்த்தி, அரசாணை வெளியிட்ட நிலையில், உடனடியாக பதவி உயர்வு வழங்க வேண்டும். பணியாளர் நலன் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டி, அமைச்சு பணியாளர்கள் நலச் சங்கம், சார் - பதிவாளர்கள் சங்கம், மாநிலப் பணி அலுவலர்கள் சங்கம் ஒருங்கிணைந்த கூட்டுக்குழு கூட்டம் விரைவில் கூட்டப்படும் என்பது உட்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி