உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / காலி மது பாட்டில் பெறும் திட்டம்: அனைத்து மாவட்டத்திலும் அமல்

காலி மது பாட்டில் பெறும் திட்டம்: அனைத்து மாவட்டத்திலும் அமல்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: 'டாஸ்மாக்' கடைகளில், மது பாட்டில்களை திரும்ப பெறும் திட்டம், 10 மாவட்டங்களில் செயல்பாட்டில் உள்ள நிலையில், மற்ற மாவட்டங்களிலும் விரைவில் அமல்படுத்தப்பட உள்ளது.தமிழக அரசின் டாஸ்மாக் நிறுவனம், சில்லரை கடைகள் வாயிலாக, பீர் மற்றும் மது வகைகளை விற்கிறது. 'குடி'மகன்கள் மது அருந்தி விட்டு, காலி பாட்டில்களை சாலைகளில் வீசி செல்கின்றனர். இதனால், கால்நடைகள் மட்டுமின்றி, மனிதர்களும் பாதிக்கப்படுகின்றனர். இந்தப் பிரச்னை, சுற்றுலா தலங்களில் அதிகம் உள்ளது. நீதிமன்ற உத்தரவின்படி, காலி மது பாட்டில்களை, மது கடைகளிலேயே திரும்ப பெற டாஸ்மாக் முடிவு செய்தது. தற்போது, நீலகிரி, பெரம்பலுார், கோவை, நாகை, திருவாரூர், தர்மபுரி, தேனி, கன்னியாகுமரி மாவட்டங்களில் உள்ள, டாஸ்மாக் கடைகளில் காலி மது பாட்டில்கள் திரும்ப பெறப்படுகின்றன. அதன்படி, மது பாட்டில் விற்கப்படும் போது, கூடுதலாக, 10 ரூபாய் வசூலிக்கப்படுகிறது. காலி பாட்டில்களை கடைகளில் வழங்கியதும், 10 ரூபாய் திரும்ப வழங்கப்படும். இத்திட்டத்தை அனைத்து மாவட்டங்களிலும் விரைந்து செயல்படுத்தும் பணியில், டாஸ்மாக் நிர்வாகம் ஈடுபட்டுள்ளது.இதுகுறித்து, டாஸ்மாக் அதிகாரி ஒருவர் கூறுகையில், 'இம்மாதம் முதல், அனைத்து மாவட்ட மதுக்கடைகளிலும் காலி பாட்டில்கள் திரும்ப பெறப்பட இருந்தது. மழை உள்ளிட்ட காரணங்களால், வரும் ஜனவரியில் இத்திட்டம் முழுமையாக செயல்படுத்தப்படும்' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 12 )

Ram pollachi
நவ 27, 2024 17:18

ஊட்டி போகிறவன் கோவையிலும், வால்பாறை செல்பவர்கள் பொள்ளாச்சியிலும், கொடைக்கானல் சுற்றுபவர்கள் பழனியில் வாங்கி ஊத்திக் கிட்ட பாட்டில் எப்படி பக்குவமாக கிடைக்குமா? பத்து ரூபாய் நமக்கே என்ற உயர்ந்த கொள்கை .


Ram pollachi
நவ 27, 2024 17:13

எந்த டாஸ்மாக் கடையில் வாங்க பட்டதோ அதே கடையில் கொடுத்தால் மட்டுமே பத்து ரூபாய் திரும்ப கிடைக்கும்... இல்லை என்றால் குளம், குட்டை விவசாய நிலங்கள், சாலை சாக்கடை., கழிவறை மற்றும் கல்வி கூடங்களில் கிடக்கும். குடிப்பவர்களுக்கு தயாரிப்பு தேதி, காலாவதி தேதி முக்கியம் கிடையாது கடை எண் தான் தேவை. பாட்டில் பணம் திரும்ப கிடைத்த மாதிரி தான்.


Yes God
நவ 27, 2024 15:56

மதுவை பாட்டிலில் தான் விக்கணுமா. இது கேரி பேக் காலம்.பிளாஸ்டிக் பைகளில் பால் தயிர் போல் கொடுக்கலாமே.


Yes God
நவ 27, 2024 15:52

குடிகாரன் களால் எவ்வளவு வருமானம் என்பதை கணக்கிட்டு பார்க்க காலி மது பாட்டில்கள் சாட்சி.


நிக்கோல்தாம்சன்
நவ 27, 2024 08:27

இதற்காக தான் முன்னாள் அயலக தலீவரு பவுடர் வகையில் போட்டு துட்டு பார்த்து நண்பரோடு சினிமா எடுத்தாரா?


VENKATASUBRAMANIAN
நவ 27, 2024 07:42

எல்லா வழிகளிலும் கொள்ளை நடக்கிறது. இதைத்தான் விசிக கம்யூனிஸ்டுகள் கொள்கை கூட்டணி என்கிறார்கள் போலும் என


ராஜவேல்,வத்தலக்குண்டு
நவ 27, 2024 07:24

அப்படின்னா இனிமே முழு குவாட்டர் வாங்க கையில் காசு இல்லாம காய்ச்ச பாட்டுல இருக்கும் போது கட்டிங்குக்கு மட்டும் காசை வச்சிருக்க நாம நம்மள மாதிரியே எவன்டா கட்டிங்குக்கு மட்டும் காசை வச்சிக்கிட்டு சுத்திக்கிட்டு இருக்கான்னு அவனை தேடிப் புடிச்சு ரெண்டு பேரும் சேர்ந்து காசை போட்டு ஒரு குவாட்டர் வாங்கி அதை பாதி பாதியா பிரிச்சுக்கணும்னு அவசியம் இல்லை கையில் வச்சிருக்க காசோடு பார்ல கெடக்கிற ஒரு ஏழெட்டு காலி பாட்டிலை பொறுக்கி எடுத்து கொடுத்து முழு குவாட்டராவே வாங்கி அத நாம மட்டும் முழுசாவே குடிச்சிரலாம் இந்த காலி பாட்டில் காசு திட்டத்தால நம்ம மாதிரி குடிமகன்கள் வயித்துல பாலை வார்த்த இந்த திராவிடமாடல் திமுக கட்சிக்குத்தான் அடுத்த தேர்தலிலும் நாம ஓட்டு போட வேண்டும்.


Kasimani Baskaran
நவ 27, 2024 06:08

விற்ற பாட்டில்களை விட பல மடங்கு திரும்ப வரப்போகிறது...


Mani . V
நவ 27, 2024 05:39

ஆக, மொத்தம் மதுவிலக்கை அமுல்படுத்தும் எண்ணமே இல்லை? ஏதே, நாட்டை கூட்டிச்சுவராக்கிய பிறகுதான் செய்ய முடியுமா?


xyzabc
நவ 27, 2024 05:02

மீண்டும் நிரப்ப வசதியாக இருக்கும்.


புதிய வீடியோ