உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / சென்னையில் என்கவுன்டர்: சந்தேகம் எழுப்பும் தலைவர்கள்

சென்னையில் என்கவுன்டர்: சந்தேகம் எழுப்பும் தலைவர்கள்

சென்னை: சென்னையில் இன்று போலீசார் நடத்திய என்கவுன்டர் தொடர்பாக தமிழக அரசியல் தலைவர்கள் சந்தேகம் கிளப்பி உள்ளனர். 'பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில், திமுக நிர்வாகிகள் அருள், கலை மா ஶ்ரீனிவாசன் மற்றும் சதீஷ் சிக்கியுள்ளனர். எப்போது வாய் திறப்பார் முதல்வர் ஸ்டாலின்' என தமிழக பா.ஜ., தலைவர் கேள்வி எழுப்பி உள்ளார்.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=pbbifacb&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0பகுஜன் சமாஜ் கட்சி மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் சரணடைந்த திருவேங்கடம் போலீசாரால் சுட்டு கொல்லப்பட்டார். இது தொடர்பாக தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது:ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் சரணடைந்த திருவேங்கடம் என்பவரை, இன்று தமிழக போலீசார் என்கவுன்டரில் சுட்டுக் கொன்றிருக்கிறார்கள். திருவேங்கடம், தப்பி ஓடும்போது சுட்டுக் கொன்றதாகத் தெரிவித்துள்ளனர். கொலை செய்ததாகச் சரணடைந்த ஒருவர் தப்பியோட முயற்சித்தார் என்பது பெருத்த சந்தேகத்தை எழுப்பியிருக்கிறது. ஆம்ஸ்ட்ராங் படுகொலையில், திமுகவினர் மூன்று பேர் சம்பந்தப்பட்டு இருப்பதால், ஏதோ ஒரு உண்மையை மறைக்க முயற்சிகள் நடப்பது போலத் தெரிகிறது. ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு, சரியான திசையில் செல்கிறதா என்ற கேள்வியும் எழுகிறது. திருவேங்கடம் சுட்டுக் கொல்லப்பட்டதை, போலீஸ் உயர் அதிகாரிகள் முறையாக விசாரிக்க வேண்டும் என்றும், ஆம்ஸ்ட்ராங் படுகொலை தொடர்பான விசாரணை, நியாயமாகவும், துரிதமாகவும் நடக்க வேண்டும் என்றும், திமுக அரசை வலியுறுத்துகிறேன். இவ்வாறு அண்ணாமலை கூறியுள்ளார்.

இபிஎஸ்

அதிமுக பொதுச்செயலாளர் இ.பி.எஸ்., கூறியதாவது: ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் சரணடைந்த கொலைக்குற்றவாளி என்கவுன்டரில் சுட்டுக்கொல்லப்பட்டு உள்ளார். எதற்காக அவர் அவசரமாக என்கவுன்டர் செய்யப்பட்டார் என்ற சந்தேகத்தை ஏற்படுத்தி உள்ளது. கொலை வழக்கில் சந்தேகம் இருப்பதாக ஆம்ஸ்ட்ராங் குடும்பத்தினர் கூறிவரும் நிலையில், இந்த என்கவுன்டர் நடந்துள்ளது மேலும் சந்தேகத்தை எழுப்பி உள்ளது. இவ்வாறு இபிஎஸ் கூறினார்.

சீமான்

நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்ட அறிக்கையில்: ரவுடி திருவேங்கடம் மீதான என்கவுன்டர் திமுக அரசின் நாடகம். திருவேங்கடம் சுட்டு கொலை செய்யப்பட்டு இருப்பது உண்மை குற்றவாளிகளை தப்ப வைப்பதற்கான நாடகம். போலீசார் பாதுகாப்பில் இருந்த விசாரணை கைதி சுட்டுக் கொல்லப்பட்டது எப்படி? உண்மையை மறைக்க போலீசார் போலி துப்பாக்கிச்சூடு நடத்தியது பல முறை மெய்ப்பிக்கப்பட்டு உள்ளது. ஆம்ஸ்டிராங் கொலை வழக்கில் சரணடைந்தவர்கள் குற்றவாளிகள் அல்ல என சந்தேகம் எழுகிறது. இந்நிகழ்வு தமிழக போலீஸ் எந்தளவுக்கு திறனற்றதாகி உள்ளது என்பதையும் தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு எவ்வளவு மோசமாக சீரழிந்துள்ளது என்பதையும் காட்டுகிறது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

என்கவுன்டர் செய்ததில் சதி

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு குற்றவாளி திருவேங்கடம் சுட்டுக் கொல்லப்பட்டதில் சதி உள்ளது. என்கவுன்டர் தொடர்பாக போலீசார் சொல்லும் காரணங்கள் நம்பும்படியாக இல்லை. விசாரணை நடத்த ஆணையிட வேண்டும் என பா.ம.க., தலைவர் அன்புமணி தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 8 )

Kanns
ஜூலை 15, 2024 11:41

Ruling Parties & Police Murdered Surrendered Gangster to Illegally Destroy Evidence. Constitutional & Sessions Courts Must Order Public Encounter of All Concerned Police WITHOUT MERCY


அப்புசாமி
ஜூலை 14, 2024 22:36

இது போறாது. இன்னும் ஒரு பத்து என்கவுண்டர்களில் ரவுடிகளை போட்டுத்தள்ளணும்.எதிர்க்கட்சிக்காரர்களின் பேச்சுக்களை காதில் போட்டுக்காதீங்க.


என்றும் இந்தியன்
ஜூலை 14, 2024 17:49

உண்மையில் நடந்தது சொல்லிவிடுவேன் திமுக தான் முக்கிய காரணம் என்று என்று சொன்னதால் தான் என்கவுன்ட்டர் என்று தெள்ளத்தெளிவாகத்தெரிகின்றது


மோகனசுந்தரம்
ஜூலை 14, 2024 17:11

இந்த மூன்று அறிக்கைகளில் எது நன்றாக இருக்கிறது என்று சொல்லுங்கள்.


Senthoora
ஜூலை 14, 2024 16:41

குற்றவாளிகளை பிடித்தாலும் தொல்லை, பிடிக்காவிட்டாலும் தொல்லை, தண்டனை கொடுத்தாலும், கொடுக்காவிட்டாலும் தொல்லை. எதோ ஒரு குற்றவாளி தண்டிக்கப்பட்டனர். இனி அவனின் தொல்லை இருக்காது என்று சந்தோச படுங்க, திராவிட மடல் ன்று உங்கள் இனத்துக்கு கறை பூசாமல் இருப்பது நல்லது.


sundarsvpr
ஜூலை 14, 2024 16:19

தன்னை கொன்றிட வந்த மாட்டை கொலல்லாம் என்ற அகிம்சைவாதி மோஹனதாஸ் கரம் சந்த காந்தி கூறினார். அதாவது பயந்து ஓடும் மாட்டை துன்பறுத்தக்கூடாது. .காவல்துறை குற்றவாளியை நேரில் பிடிக்கும் திறமை இல்லாமையால் என்சௌண்டேர் செய்வது சரியில்லை யுத்த விதிகளில் நிராயுதபாணியை கைது செய்வார்கள் தவிர வேறு எதுவம் செய்யமாட்டார்கள். ஆண்டுக்கணக்காய் வழக்கு நடக்கிறது. தீர்ப்பு வழங்க இயலவில்லை எனின் வழக்கு முடித்து வைக்கப்படுகிறது. இதுபோல் கைதியை பிடிக்க இயலவில்லை எனின் காவல் துறை நீதிமன்றத்தை அணுகவேண்டும்


அப்புசாமி
ஜூலை 14, 2024 22:40

அது பயந்த மாடு.இல்லைண்ணே. நடுரோட்டில் ஆம்ஸ்ட்ராங் கை முட்டித் தள்ளிட்டு பாதுகாப்புக்காக சரணடைஞ்ச் திருட்டு மாடுண்ணே. போட்டுத்தக்ளினது இனிமே முட்டாதுண்ணே. இன்னும் ஏழு மாடுகளை பொளி போட்டி நாட்டுக்கே நல்லதுண்ணே


sridhar
ஜூலை 14, 2024 15:41

Plain and simple - to protect the real culprits a scapegoat has been shot dead. It is anybody's guess who the real culprits are and which party they belong to. ,


மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை