உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / அமலாக்கத்துறை ரெய்டு தி.மு.க., துவண்டு விடாது

அமலாக்கத்துறை ரெய்டு தி.மு.க., துவண்டு விடாது

தமிழகத்துக்கு, மத்திய அரசு வழங்க வேண்டிய நிதியை சரியாகக் கொடுப்பதில்லை. ஆனால், அதைப் பற்றி கவலைப்படாமல், தமிழக அரசு சிரமப்பட்டு எல்லா விஷயங்களையும் செய்து வருகிறது. அமைச்சர் துரைமுருகன் மகன் வீட்டில் அமலாக்கத் துறையினர் சோதனை நடத்தி உள்ளனர். தமிழக அரசுக்கும், தி.மு.க.,வுக்கும் நெருக்கடி கொடுக்கவே, இப்படிப்பட்ட சோதனைகள் நடத்தப்படுகின்றன. இப்படி, மத்திய அரசிடம் இருந்து நெருக்கடிகள் தான் வருகிறதே தவிர, நிதி வருவதில்லை. அதனாலேயே கடந்த பார்லிமென்ட் தேர்தலில், 40 தொகுதிகளிலும் தி.மு.க., கூட்டணி வெற்றி பெற்றது. இந்த சோதனைகளால், தி.மு.க.,வோ; தொண்டர்களோ துவண்டு போய்விட மாட்டர். -- பன்னீர்செல்வம்வேளாண் துறை அமைச்சர்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

xyzabc
ஜன 05, 2025 06:36

கல்வி துறைக்கு ஒதுக்க பட்ட ரூ 44000 கோடி எங்கே? மாயம் ??


Mani . V
ஜன 05, 2025 06:21

எப்படி துவளும்? சர்க்காரியா கமிஷனுக்கே சர்க்கரை கொடுத்து மிரள வைத்த கூட்டம். நவீன ஊழல்வாதிகள் என்று அவர்களே சான்றிதழ் கொடுத்தார்கள். அப்படிப்பட்ட கூட்டம் ஊழலுக்கு ஆதாரமா வைத்து இருக்கும்?


xyzabc
ஜன 05, 2025 06:18

அப்பா திராவிட மாடல் ரௌடிகளே உங்களை கடவுள் கூட எதிர்க்க முடியாது.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை