உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / டாஸ்மாக் மேலாண் இயக்குநரிடம் அமலாக்கத்துறை விசாரணை நிறைவு

டாஸ்மாக் மேலாண் இயக்குநரிடம் அமலாக்கத்துறை விசாரணை நிறைவு

சென்னை: சென்னை தேனாம்பேட்டை, சூளைமேடு உள்ளிட்ட பல்வேறு இடங்களில், டாஸ்மாக் நிறுவன அதிகாரிகள் வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நிறைவடைந்தது.. பல கட்ட சோதனைக்கு பின்னர் இன்று மதியம் 3 மணியளவில் டாஸ்மாக் மேலாண் இயக்குநர் விசாகனை அமலாக்க துறை அதிகாரிகள் காரில் அழைத்து சென்றனர். தொடர்ந்து அவரிடம் 5 மணி நேரத்திற்கும் மேலாக விசாரணை நடத்தப்பட்டது. விசாரணைக்கு பின்னர் அவர் வீடு திரும்பினார். https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=dbd4d3jr&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0டாஸ்மாக் நிறுவனத்தில் நடந்த முறைகேடுகள் தொடர்பாக, தமிழக லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். டாஸ்மாக்கில், 1,000 கோடி ரூபாய் அளவுக்கு ஊழல் நடந்திருப்பது கண்டறியப்பட்டு உள்ளதாக அமலாக்கத்துறை அதிகாரிகள் அதிகாரப்பூர்வமாக அறிவித்தனர். கடந்த மாதம் சென்னை எழும்பூரில் உள்ள டாஸ்மாக் தலைமை அலுவலகம் உள்ளிட்ட இடங்களில் சோதனை நடத்தி முக்கிய ஆவணங்களை கைப்பற்றினர். இந்த வழக்கு தொடர்பாக, வழக்கு தொடர்பாக சென்னை தேனாம்பேட்டை, சூளைமேடு உள்ளிட்ட பல்வேறு இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.மணப்பாக்கம் சி.ஆர்.புரத்தில் உள்ள டாஸ்மாக் நிர்வாக இயக்குனர் விசாகன் வீட்டிலும் , சென்னை சூளைமேடு கல்யாணப்புரத்தில் உள்ள எஸ்.என்.ஜே.மதுபான நிறுவன அலுவலகத்திலும் சோதனை முடிந்தது.

ஆகாஷ் வீட்டில் சோதனை!

சினிமா தயாரிப்பாளர் ஆகாஷ் வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். சமீபத்தில் நடந்த, இவரது இல்ல நிகழ்ச்சியில் பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள், சினிமா பிரபலங்கள் கலந்து கொண்டனர். தனுஷ் நடிக்கும் இட்லி கடை, சிவகார்த்திகேயனின் பராசக்தி உள்ளிட்ட படங்களை ஆகாஷ் தயாரித்து வருகிறார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 48 )

kumar
மே 18, 2025 07:33

தமிழ்நாட்டு அறிவற்ற மக்களே திருந்துங்கள்.எவனுக்கும் ஓட்டுப் போடக்கூடாது என உறுதியாக முடிவெடுங்கள். நம் கையில் உள்ள மிகப்பெரிய ஆயுதமான ஓட்டின் மூலம் இந்த மாதிரி கழிசடை, சாக்கடை பயல்களுக்கு நாம் யார் என்று காட்டுவோம்.


A P
மே 16, 2025 22:37

இந்த சூழ்நிலையில் இந்த இரண்டு போரையும் குறிப்பிடுவதால், யாரெல்லாம் ஜாக்ரதையாக இருக்கணும் என்று சொல்ல வருகிறீர்கள் என தெரியவில்லை. துஷ்டரைக் கண்டால் தூர விலகு என்று சொல்லப் படுவதை, சிலர் கேட்காமல் சிக்கிக் கொள்கிறார்கள். எல்லாம் பணத்தாசைதான்.


துர்வேஷ் சகாதேவன்
மே 16, 2025 21:43

அய்யா CAG சொன்ன 76500000 கோடி , ஒரு KM ரோடு போட 290 கோடி இதற்கெல்லாம் ED போகாதா


துர்வேஷ் சகாதேவன்
மே 16, 2025 21:38

தேர்தல் நெருங்க நெருங்க, இன்னும் இதுபோன்ற ரெய்டுகள் பல தொடரும். ஆளும்கட்சி ஊழல் கட்சி என்பதாக ED கஷ்டப்பட்டு வலியுறுத்தும்.


Haja Kuthubdeen
மே 17, 2025 07:13

அப்ப இவனுங்கல்லாம் யோக்கியமானவனுங்க ஊழல்னா என்னன்னே தெரியாத அப்பாவிகளா??இந்த திருடனை பிடித்தால் அடுத்த தெரு திருடனை ஏன் பிடிக்கவில்லை என்று கேள்வி வேற....அவனுங்களும் நேரம் வரப்ப மாட்டுவாய்ங்க..இவனுங்க கேப் விடாம செஞ்சா மத்தவன கவணிக்க நேரம் வேணாமா????


Anantharaman Srinivasan
மே 16, 2025 21:27

டாஸ்மாக் நிறுவனத்தின் மீது தமிழக லஞ்ச ஒழிப்புதுறையே வழக்கு பதிவு என்றால் கண்துடைப்பா அல்லது கட்டிங் சரியா வசூலாக வில்லையா..?


துர்வேஷ் சகாதேவன்
மே 16, 2025 21:26

2017 குண்டான FIR க்கு இப்போ தேடல் வேட்டை , 2026 தேர்தல் வரை இது நீடிக்கும் ,ஆனால் கடைசியில் புஷ்வாணம் ஆகிடும்


Matt P
மே 16, 2025 21:22

மேலாண்மை இயக்குனர் வீட்டில் சோதனை. இவருக்கும் மேலே ஆண்மை இயக்குனர்கள் அமைச்சர்கள் என்ற பெயரில் இருக்கிறார்கள். அவர்களையும் ஆண்மையோடு கொஞ்சம் கவனிக்கலாமே.


Matt P
மே 16, 2025 21:19

ஏன் மாற்றம் வேண்டும்? நல்லாதானே ஊழல்கள் நடந்து கொண்டிருக்கிறது. ஏமாற்றம் தானே வேண்டும்


Murugesan
மே 16, 2025 21:08

தமிழகத்தை சூரையாடிய கேவலமான கேடுகெட்ட திராவிட அயோக்கியர்கள் அவர்களின் காலில விழுந்த அயோக்கிய அரசு ஊழியர்கள், எல்லா அயோக்கியர்களையும் நடு வீதியில் வைத்து சுட்டு தள்ள வேண்டும்


துர்வேஷ் சகாதேவன்
மே 16, 2025 21:24

CAG சொல்லியது 765000000000000000000000000 கோடி ஊழல் என்று ,ஒரு KM ரோடு போடா 290 கோடி செலவு என்று , அந்த அதிகாரிகளை ஏன் மாற்றினார் மோடி ,


GMM
மே 16, 2025 18:54

வெள்ளி ரெய்டு. கைது இருக்கும். சனி, ஞாயிறு விடு முறை. திங்கள் கிழமை நீதிமன்றத்தில் உண்மை வாக்கு மூலம். அமுலாக்க துறை நடவடிக்கைக்கு முட்டுகட்டை நீதிமன்ற குறுக்கீடு. இனி அதிகம் இருக்காது? இருந்தால், சிபிஐ, அமலாக்க துறை நீதிமன்றம் உள் செல்ல அனுமதி கிடைக்கும். ? திராவிட கேஜ்ரிவால் யார்?


புதிய வீடியோ