அமலாக்கத் துறை சோதனை தி.மு.க., துவண்டு விடாது
பெஞ்சல் புயலால் பயிர்கள் பாதிக்கப்பட்டதற்கு நிவாரணம் வழங்க தமிழக அரசு முறையான நடவடிக்கை எடுத்து வருகிறது. தமிழகத்துக்கு, மத்திய அரசு வழங்க வேண்டிய நிதியை சரியாக கொடுப்பதில்லை. ஆனால், அதைப் பற்றி கவலைப்படாமல், தமிழக அரசு சிரமப்பட்டு, எல்லா விஷயங்களையும் செய்து வருகிறது. அமைச்சர் துரைமுருகன் மகன் வீட்டில் அமலாக்கத் துறையினர் சோதனை நடத்தி உள்ளனர். தமிழக அரசுக்கும், தி.மு.க.,வுக்கும் நெருக்கடி கொடுக்கவே, இப்படிப்பட்ட சோதனைகள் நடத்தப்படுகின்றன. இப்படி மத்திய அரசிடம் இருந்து நெருக்கடிகள் தான் வருகிறதே தவிர, நிதி வருவதில்லை. இதை மக்கள் பார்த்துக் கொண்டு தான் உள்ளனர். அதனாலேயே கடந்த பார்லிமென்ட் தேர்தலில், 40 தொகுதிகளிலும் தி.மு.க., கூட்டணி வெற்றி பெற்றது. இருந்தும், தவறு செய்கின்றனர். இந்த சோதனைகளால், தி.மு.க.,வோ; தொண்டர்களோ துவண்டு போய் விட மாட்டர். பன்னீர்செல்வம், தமிழக வேளாண் அமைச்சர்