மேலும் செய்திகள்
இ - பாஸ் திட்டம் தோல்வி; ஊட்டியில் தீரவில்லை நெரிசல்
16 minutes ago
பழனிசாமியை வரவேற்று த.வெ.க., சார்பில் பேனர்
27 minutes ago
வேலூர், தர்மபுரி உள்ளிட்ட 12 மாவட்டங்களில் இன்று கன மழை
43 minutes ago
விருதுநகர் : இன்ஜின் பழுதால் கொல்லம்-மதுரை பயணிகள் ரயில், விருதுநகரில் நிறுத்தப்பட்டது. பயணிகள் மூன்று மணி நேரம் தவித்தனர். கொல்லத்தில் இருந்து நேற்று முன் தினம் மாலை 4 மணிக்கு புறப்பட்ட ரயில், இரவு நெல்லை வந்த போது இன்ஜினில் பழுது ஏற்பட்டது. குறைந்த வேகத்தில் நேற்று காலை 5.30 மணிக்கு விருதுநகர் வந்து சேர்ந்தது. இங்கு அதிகாலை 3.30 மணிக்கு வர வேண்டிய ரயில் இரண்டு மணி நேரம் தாதமாக வந்தது. விருதுநகருக்கு வந்த போது ரயிலை இயக்க முடியாமல் போனதால், மதுரைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. மதுரையிலிருந்து வந்த மற்றொரு இன்ஜின் மூலம், காலை 8.30 க்கு புறப்பட்டு மதுரை சென்றது. இதனால் பயணிகள் மூன்று மணி நேரம் தவித்தனர்.
16 minutes ago
27 minutes ago
43 minutes ago