உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / கஸ்துாரியின் பாதுகாப்பை உறுதி செய்யணும்: எச்.ராஜா வலியுறுத்தல்

கஸ்துாரியின் பாதுகாப்பை உறுதி செய்யணும்: எச்.ராஜா வலியுறுத்தல்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுக்கோட்டை: 'நடிகை கஸ்துாரியின் பாதுகாப்பை நீதித்துறை உறுதி செய்ய வேண்டும்' என்று பா.ஜ., மூத்த தலைவர் எச்.ராஜா கடுமையாக கூறினார்.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=j778697k&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0புதுக்கோட்டையில் நிருபர்கள் சந்திப்பில், எச்.ராஜா கூறியதாவது: மத்தியில் கூட்டணி அரசு தான் ஆட்சியில் உள்ளது. நாங்கள் கூட்டணி பலத்தோடு லோக்சபா தேர்தலை சந்தித்து இருக்கிறோம். 1967ல் இருந்து கூட்டணி கட்சிகளின் ஆதரவோடு ஆட்சி அமைத்து வரும் திமுக, இதுவரையில் கூட்டணி கட்சிகளுக்கு ஆட்சியில் பங்கேற்க வாய்ப்பு கொடுக்கவில்லை. திருமாவளவன் உடன் கூட்டணி அமைத்து, தேர்தலில் தி.மு.க., ஓட்டு கேட்கும். ஆனால் திருமாவளவன் மந்திரி சபையில் இடம் கேட்டால், வெளியே உட்கார வைத்து விடுவார்கள்.இது தான் தி.மு.க.,வின் குணம்.

கூட்டணி முடிவு

நாங்கள் 1998ம் ஆண்டிலேயே கூட்டணி ஆட்சி தான் வைத்து இருந்தோம். கூட்டணி குறித்து தேசிய தலைமை முடிவு செய்யும். நாங்கள் அதனை செயல்படுத்தும் இடத்தில் இருக்கிறோம். கூட்டணி குறித்து தமிழக பா.ஜ.,வில் யாராலும் முடிவு செய்ய முடியாது. தமிழகத்தில் பா.ஜ.,வுக்கு போட்டி யாருக்கும் கிடையாது. விஜய் புதிதாய் கட்சி ஆரம்பித்து இருக்கிறார். தி.மு.க.,வினர் இத்தனை ஆண்டு காலமாக, கிளிப்பிள்ளை போல் சொல்லி கொண்டு இருந்ததை, இவர் திருப்பி சொல்கிறார்.

திராவிடம்

திராவிடம் என்பது இடத்தை குறிக்கும். குணத்தை குறிக்காது. இவங்க எல்லாம் முட்டாள் கூட்டம். திராவிடம் என்பது குறித்து நான் பலமுறை சொல்லிவிட்டேன். திராவிடம் என்பது சமஸ்கிருத வார்த்தை. நடிகை கஸ்தூரியின் பாதுகாப்பை நீதித்துறை உறுதி செய்ய வேண்டும். செந்தில் பாலாஜியின் தம்பி அசோக்குமாரை கைது செய்ய முடியாத போலீசாரால், நடிகை கஸ்துாரியை கைது செய்ய முடிகிறது. இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 23 )

Matt P
நவ 18, 2024 00:15

செந்தில் பாலாஜியின் தம்பி அசோக்குமாரை கைது செய்ய முடியாத போலீசாரால்....ஆமா ,,,,செந்தில் பாலாஜியின் தம்பியை ஏன் கைது செய்யலை? .. தம்பி இதெல்லாம் தப்புப்பா. நம்பி தானே ஆட்சியை கொடுத்தாங்க ..பாரபட்சமில்லாமல் ஆட்சி செய்ய வேண்டாமா? மகனே என்றாலும் சட்டத்தின் முன் நிறுத்த வேண்டியவர்களை நிறுத்த வேண்டும். .


RAMAKRISHNAN NATESAN
நவ 17, 2024 23:16

ஊரெங்கும் கொலை கொள்ளை பாலியல் குற்றம் கள்ள சாராயம் வெடி குண்டு வீச்சு என்றுஇருக்கிறது ...... வைகுண்டு என்னும் அடிமையே தமிழகத்தின் உண்மையை ஒப்புக்கொண்ட பிறகு ????


saravanan
நவ 17, 2024 20:29

கூட்டணி விவகாரத்தை கடந்த நாடாளுமன்ற தேர்தலிலேயே கட்சியின் மேலிடம் மட்டும் பார்த்திருந்தால் பாஜகவின் வெற்றி வாய்ப்பு தேசிய அளவிலும், தமிழக அளவிலும் வேறு மாதிரி இருந்திருக்கும் சில தருணங்களில் நாம் நினைத்திராத, யூகித்திராத புதிய விஷயங்கள் நடந்தே தீரும். அவற்றிலிருந்து பாடம் கற்று அடுத்த கட்டத்திற்கு போய் கொண்டிருப்பதே யதார்த்த வாழ்வியல். கஸ்தூரி தன் மனதிற்கு சரியென பட்டதை பேசியிருக்கிறார். தவறென தெரிந்ததும் வருத்தமும் தெரிவித்தாகி விட்டது. இதற்கெல்லாமா சிறையிலே கொண்டு போய் அடைப்பார்கள்? நன்றாக இருக்கிறது நம் ஆட்சியாளர்களின் சட்டம் மற்றும் நீதி பரிபாலனம்.


Velan Iyengaar
நவ 17, 2024 22:36

எப்படிப்பட்ட மனஅழுக்கு கொண்டவர்கள்...நினைத்தால் இந்த சமூகம் இப்படி சீரழிந்து போனதே என்று கவலை கொள்ளவைக்குது .....


Barakat Ali
நவ 17, 2024 19:18

கஸ்தூரி உயிருக்கு,திராவிடம் பேசுபவர்களால் ஆபத்து ஏற்படலாம் என்கிறாரா ????


1968shylaja kumari
நவ 17, 2024 16:55

ஹிந்து முன்னணி மற்றும் தமிழ்நாடு பிராமணர் சங்கம் இவை இரண்டும் கஸ்தூரிக்கு உறுதுணையாக , கண்டனம் தெரிவித்து போராட்டம் நடத்தவேண்டும் . பிராமணர்களுக்குல் ஒற்றுமை வேண்டும் இல்லையென்றால் பலர் கேவலப்படுத்தும் நிலைக்கு ஆளாவார்கள்


Dharmavaan
நவ 17, 2024 16:37

பிஜேபி போராட்டம் நடத்த வேண்டும் கைதை எதிர்த்து


Selliah Ravichandran
நவ 17, 2024 15:28

Nonsense case and useless work for police


Dharmavaan
நவ 17, 2024 15:13

பிரதாமரையு ம் ஆளுநரையும் கேவல ப்படுத்தவனுக்கு தண்டனை இல்லை.


S. Venugopal
நவ 17, 2024 14:21

ஒரு சமூகம் எதோ தனது விடா முயற்சியால் நம் நாட்டிலும் மற்றும் வெளிநாட்டிலும் வேலை வாய்ப்பினை பெற்று இந்த நாள் வரை எந்த இடத்திலும் எந்த நாட்டிலும் அரசாங்கத்தை எதிர்த்து போராட்டம் செய்யாத சமூகத்தினை போராட்டமே வேண்டாம் என்ற எந்த காலகட்டத்தில் அந்த சமூகத்தினை சிலரின் சுய லாபத்திற்க்காக போராட்டம் நடத்த வைத்தது தேவையற்ற செயல்.


Barakat Ali
நவ 17, 2024 20:00

....... கஸ்தூரி கைதை முன்னிட்டு டாஸ்மாக்கில் திராவிடமாடல் ட்ரீட் கொடுத்ததோ ????


Anantharaman Srinivasan
நவ 17, 2024 22:05

உம்மை யாராவது ஓபீனியன் கேட்டாங்களா..??


Duruvesan
நவ 17, 2024 14:09

வேங்கை வயல் கேஸ் விடியல் உறக்கம், குருமா ஹாப்பி


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை