உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / கபட நாடகத்தில் பி.எச்டி., பட்டம்; ஆளும் கட்சி மீது இ.பி.எஸ்., பாய்ச்சல்

கபட நாடகத்தில் பி.எச்டி., பட்டம்; ஆளும் கட்சி மீது இ.பி.எஸ்., பாய்ச்சல்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: 'கபட நாடகம் ஆடுவதில் பி.எச்டி., பட்டம் பெற்ற ஆட்சியாளர்கள், நான் கபட நாடகம் ஆடுவதாக ஓலமிடுகிறார்கள்' என்று அ.தி.மு.க., பொதுச்செயலாளர் இ.பி.எஸ்., விமர்சித்துள்ளார்.இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை; கடந்த 42 மாத கால நிர்வாகத் திறனற்ற தி.மு.க., ஆட்சியில், அனைத்துத் தரப்பு மக்களும் அவதியுறுவது உள்ளங்கை நெல்லிக்கனி. எல்லாவற்றிற்கும் மேலாக முத்தாய்ப்பு வைப்பதுபோல் தமிழக அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், சுகாதாரத் துறையினர் உள்ளிட்ட அனைவரும், அவர்களது கோரிக்கைகள் எதுவும் இந்த அரசால் நிறைவேற்றப்படாத காரணத்தால் வெகுண்டெழுந்து பல்வேறு கருத்துகளைத் தெரிவித்திருக்கின்றனர்.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=tpjyctbt&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0இதுகுறித்து, நவ.,10ல் திருச்சி விமான நிலையத்தில் செய்தியாளர்கள் என்னிடம் கேள்வி எழுப்பிய போது, 42 மாதகால தி.மு.க., ஆட்சியில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், மின்வாரியம், போக்குவரத்துத் துறை, கூட்டுறவுத் துறை போன்ற வாரியப் பணியாளர்கள் உள்ளிட்ட அனைவரின் கோரிக்கைகள் தீர்க்கப்படாத நிலையில், அவர்களின் உணர்வுகள்தான் வெளிப்பட்டுள்ளன என்று பதில் அளித்தேன்.என்னுடைய இந்த கருத்தில் உள்ள உண்மைகள் சுட்டதால், 7 பக்க மொட்டைக் காகித அறிக்கையை இந்த ஆட்சியாளர்கள் ஊடகங்களுக்கு அனுப்பி உள்ளதாகத் தெரிகிறது. யாருடைய பெயரும் இல்லாமல், கையெழுத்தும் இல்லாமல், ஊடகங்களுக்கு முக்கிய குடும்பத்தின் மருமகன் தலைமையில் இயங்கும் பி.இ.என். என்ற நிறுவனம் இந்த அறிக்கையை அனுப்பி உள்ளதாகத் தெரிகிறது.மனம் போன போக்கில் உண்மைகளை மறைத்து என்மீது காழ்ப்புணர்ச்சியோடு முதுகெலும்பில்லாமல் ஒரு அறிக்கை வெளியிட்டிருக்கிறார்கள். கபட நாடகம் ஆடுவதில் பிஎச்.டி, பட்டம் பெற்ற ஆட்சியாளர்கள், நான் கபட நாடகம் ஆடுவதாக ஓலமிடுகிறார்கள். எந்தச் சூழ்நிலையிலும் நாடகமோ, கபட நாடகமோ, சூழ்ச்சியோ செய்ய வேண்டிய அவசியம் எனக்கில்லை.கடந்த 2021 தேர்தல் நேரத்தில் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்காக அதைச் செய்வோம். இதைச் செய்வோம் என்று வாக்குறுதி அளித்து விட்டு, அவர்களின் வாக்குகளைப் பெற்று ஆட்சிக்கு வந்தபிறகு, இன்றைக்கு அவர்களை ஏமாற்றியதை பொறுத்துக் கொள்ள முடியாமல் தங்களின் ஆற்றாமையை அரசு ஊழியர்கள்தான் வெளிப்படுத்தி இருக்கிறார்கள்.கடந்த 2021ம் ஆண்டு பொதுத்தேர்தலின் போது, தி.மு.க., அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு அளித்த வாக்குறுதிகளை தவிர, சுமார் 520க்கும் மேற்பட்ட வாக்குறுதிகளை மக்களுக்கு அளித்தனர். அதில், 90 சதவீத வாக்குறுதிகளை நிறைவேற்றிவிட்டோம் என்று பொய் சொல்லி வரும் இந்த ஆட்சியாளர்கள் மக்களை ஏமாற்றுகின்றனர். ஜெயலலிதா ஆட்சியிலோ, எனது தலைமையிலான அரசிலோ நாங்கள் மக்களை ஏமாற்றவில்லை என்பது மக்களுக்கே தெரியும்.தெரிந்தோ, தெரியாமலோ கடந்த 42 மாதகால தி.மு.க., ஆட்சியில், அரசு ஊழியர்களுக்கும், ஆசிரியர்களுக்கும், பொதுமக்களுக்கும் எதுவுமே செய்யவில்லை என்பதை மொட்டை அறிக்கை வெளியிட்ட பேர்வழிகள் ஒப்புக்கொண்டிருக்கிறார்கள்.18 ஆண்டு ஆட்சியில் இருந்த கருணாநிதி அதைச் செய்தார்; இதைச் செய்தார் என்ற புலம்பல்கள்தான் அந்த அறிக்கையில் அதிகமாக இருக்கிறதே தவிர, ஸ்டாலின் அரசு என்ன செய்தது என்று எதுவும் இல்லை.பிரதான எதிர்க்கட்சி என்பது ஒரு நிழல் அரசைப் போன்றது. அது சுட்டிக்காட்டும் குறைகளை, நேர்மையான ஆட்சியாளர்களாக இருந்தால் ஏற்றுக்கொண்டு தங்களின் செயல்பாடுகளை திருத்திக் கொள்வார்கள். நேர்மையற்ற முறையில், நிறைவேற்ற முடியாத வாக்குறுதிகளைத் தந்து ஆட்சிக்கு வந்த இந்த தி.மு.க.,விடம் நேர்மையை எதிர்பார்க்க முடியாது. இனியும் உண்மை நிலைகளை உணராமல், இதய சுத்தியோடு செயல்படும் எங்கள் மீது வெந்ததைத் தின்று வாய்க்கு வந்தபடி உளறித் திரிபவர்களைப்போல் பாய்ந்து பிராண்டினால், மக்கள் தக்க பதிலடி தருவார்கள். இவ்வாறு அந்த அறிக்கையில் இ.பி.எஸ்., கூறி உள்ளார். எந்தெந்த வாக்குறுதிகள் வெளியிட்டு, நிறைவேற்றாமல் ஏமாற்றினர் என்பதையும் அந்த அறிக்கையில் இ.பி.எஸ்., குறிப்பிட்டுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 11 )

வைகுண்டேஸ்வரன்
நவ 12, 2024 20:14

கரப்பான் பூச்சி என்ன ஓவரா கூவ ஆரம்பித்து விட்டது? சசிகலா முன்னாடி நீங்க ஆடிய கபட நாடகம் தான் ஆஸ்கர் அவார்டு நாடகம். கூவத்தூர் புள்ளிங்கோ ஆதரவில் முதல்வர் ஆனவர் லாம் கபட நாடகம் பத்தி பேசலாமா?


MADHAVAN
நவ 12, 2024 17:11

கூவத்தூர் கோமளிகளுக்கு, தமிழகத்தை பற்றி பேச என்ன யோக்கிதை இருக்கு,


MADHAVAN
நவ 12, 2024 17:10

உங்களைப்போல காலில் விழுவது, பின்பு அவர்கள் காலை வாரிவிடுவது, கூழை கும்பிடு போடுவது, பின்பு வாலாட்டுவது, கூவத்தூரில் கும்மாளம் போடுவது, போதும் போதும் பழனிச்சாமி, நீங்க ரொம்ப கேவலமா ஆட்சி நடத்துனீங்கனு யாரவது சொன்ன, இதை எல்லாம் சொல்லுங்க


முருகன்
நவ 12, 2024 15:49

கபட நாடக ஆட்சி நடத்தியதை மக்கள் தெரிந்து கொண்டதால் தான் கடந்த 8 வருடங்ளாக தோல்வி மோல் தோல்வி கிடைக்கிறது உங்களுக்கு


Madras Madra
நவ 12, 2024 15:26

திடீரென்று திமுக வும் அதிமுகவும் சண்டையிடுவது எதற்க்கோ ?


வைகுண்டேஸ்வரன்
நவ 12, 2024 19:33

அதிமுக விற்கு டெல்லி பாஜக வின் கட்டளை தான் இ பி எஸ் சின் சமீபத்திய கூப்பாடுகள். அநேகமாக அதிமுக வும் பாஜக வும் கூட்டணி வரும். அல்லது அதிமுக சரத்குமார் கட்சி போல 2026 ல் ஐக்கியமாகவும் சான்ஸ் இருக்கு.


Ms Mahadevan Mahadevan
நவ 12, 2024 14:01

ஆட்சியாளர்கள் ஒன்றை மறந்து விடக்கூடாது. 36 சதவீத வாக்குகளை தான் அவர்கள் பெட்டு உள்ளார்கள் மீதி 65 சதவீத வாக்குகள் அவர்களுக்கு எதிரானவை. அதை நினைவில் கொண்டு செயல் பட வேண்டும்


Oviya Vijay
நவ 12, 2024 13:37

இவர் பேசுறதை எல்லாம் வெச்சு பாய்ச்சல், கூச்சல் அப்படியெல்லாம் எழுதாதீங்க... சிரிப்பா இருக்கு... அதிமுக கொஞ்சம் கொஞ்சமாக சிதிலமடைந்து வரும் கட்சி. அதுக்கு இவர் ஒரு பொம்மை தலைவர். அவ்வளவே...


வைகுண்டேஸ்வரன்
நவ 12, 2024 16:26

அதிமுக 2026 க்குள், ச ம க மாதிரி பிஜேபி யில், நள்ளிரவு 2 மணிக்கு ஐக்கியம் ஆகிவிடும். அதுவரை குழுக்கள் அமைக்கிற விளையாட்டு விளையாடிக்கிட்டிருக்கட்டும்.


Ramesh Sargam
நவ 12, 2024 13:34

எதிர்க்கட்சி தலைவராக இவரும் இவர் பணியை செய்வதில்லை. முதல்வராக ஸ்டாலினும் அவர் பணியை செய்வதில்லை. தினம் தினம் இருவரும் ஒருவர் மீது ஒருவர் குற்றம் சுமத்தி நாட்களை கழிக்கிறார்கள்.


Anantharaman Srinivasan
நவ 12, 2024 13:30

இரு திராவிட கட்சிகளும் ஒரு விதையிலிருந்து தோன்றவை தான். லஞ்ச ஊழலுக்கு அப்பட்டதல்ல. மாறிமாறி துப்பி புலம்பி மக்களை ஏமாற்றுவதில் வல்லவர்கள்.


புதிய வீடியோ