உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / 42 மாசம் ஆச்சு... நீட் தேர்வு ரகசியத்தை சொல்லுங்க! உதயநிதியை விளாசிய இ.பி.எஸ்.,

42 மாசம் ஆச்சு... நீட் தேர்வு ரகசியத்தை சொல்லுங்க! உதயநிதியை விளாசிய இ.பி.எஸ்.,

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சேலம்: ''தி.மு.க., ஆட்சி அமைத்து 42 மாதங்கள் ஆகிவிட்டது, நீட் தேர்வு ரத்து ரகசியத்தை சொல்லி விடுங்கள்,'' என்று எதிர்க்கட்சித் தலைவர் இ.பி.எஸ்., பேசினார்.சேலம் மாவட்டம் மேச்சேரியில் விவசாய சங்கத்தினர் ஏற்பாடு செய்திருந்த கூட்டத்தில் அ.தி.மு.க., பொதுச் செயலாளர் இ.பி.எஸ்., கலந்து கொண்டார். அப்போது அவர் பேசியதாவது; தமிழகத்தில் இன்று ஊழல் நடக்காத துறையே இல்லை. ஊழல் மலிந்த அரசாங்கமாக இன்றைக்கு தி.மு.க., அரசாங்கம் திகழ்ந்து கொண்டு இருக்கிறது. அ.தி.மு.க., ஆட்சி வரும்போது ஸ்டாலின் இதற்கு பதில் சொல்லியே ஆகவேண்டும்.பா.ஜ.,வுடன் அ.தி.மு.க., கூட்டணி வைப்பதாக உதயநிதி கூறி வருகிறார். நாங்கள் கூட்டணி வைக்கவில்லை, நீங்கள் தான் கூட்டணி வைக்க முயற்சித்து வருகிறீர்கள். எதிர்க்கட்சி தலைவராக ஸ்டாலின் இருந்த போது பிரதமர் மோடியின் தமிழக பயணத்தின் போது கருப்பு பலூன்களை பறக்கவிட்டார்.பிரதமராக மோடி வந்தபின்னர், ஸ்டாலின் முதல்வரான போது வெள்ளைக் கொடி பிடித்து, வெல்கம் மோடி என்றவர் இதே ஸ்டாலின் தான். இரட்டை வேடம் புரிகிறவர் ஸ்டாலின். ஒரு பக்கம் கூட்டணி வைத்துக் கொண்டு மறுபுறம் பேசுபவர்கள் அ.தி.மு.க., அல்ல.பா.ஜ., அரசுடன் ஒத்து போகவில்லை என்றால் இவர்கள் கொள்ளை அடித்த பணத்துக்கு வழக்கு போட்டுவிடுவார்கள். ரெய்டு எங்களுக்கு வராது, உங்களுக்கு தான் வரும். 2011ம் ஆண்டில் ஒரு பக்கம் ரெய்டு, மறுபக்கம் காங்கிரசுக்கு 63 சீட்டுகள் கொடுத்தவர் ஸ்டாலின். அ.தி.மு.க., வரலாறு அப்படி அல்ல. நாட்டு மக்களுக்கு எது தேவையோ என்பதை அறிந்து, அதற்காக பாடுபடும் கட்சி அ.தி.மு.க. ஆட்சிக்கு வந்தவுடன் நீட் தேர்வு ரத்து தான் முதல் கையெழுத்து என்று சொன்னீர்கள்? ஆனால் 42 மாதங்கள் கடந்துவிட்டது. நீட் தேர்வு ரத்து செய்யும் ரகசியம் எங்களிடம் உள்ளது என்று உதயநிதி தொடர்ந்து கூறி வருகிறார். சீக்கிரம் அந்த ரகசியத்தை சொல்லி விடுங்கள். மக்களிடம் பொய் பேசி ஆட்சிக்கு வந்துள்ளீர்கள். நீங்கள் தான் பொய்யர், நாங்கள் அல்ல.நேற்று பெய்த மழையில் இன்று முளைத்த விஷக்காளான் உதயநிதி. அப்பா, மகன் இருவரும் ஒருவரை ஒருவர் மாறி, மாறி புகழ்ந்து பேசுகின்றனர். இவ்வாறு இ.பி.எஸ்., பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 17 )

krishna
நவ 18, 2024 14:43

NEENGA KODANADU KOLAI RAGASIYATHA SOLLUNGA.


பேசும் தமிழன்
நவ 18, 2024 08:00

இது எல்லாம் பங்காளி கட்சிகள் இரண்டும் ஏற்கெனவே பேசி வைத்து கொண்டு நடத்தும் நாடகம் என்று மக்களுக்கு தெரியும்.. நீங்கள் திமுக B டீம் ஆக மாறி ரொம்ப நாட்கள் ஆகி விட்டது.... அதை மீறி கேள்வி கேட்டால் கொடநாடு பூதம் வந்து கதவை தட்டும் .


தர்மராஜ் தங்கரத்தினம்
நவ 18, 2024 06:20

பர்சன்டேஜ் மற்றும் பர்சன்டைல் ....... இந்த இரண்டுக்கும் வேறுபாடே தெரியாத தற்குறி கிட்டே இ பி எஸ் என்ன சொல்லுதாரு ????


Indhuindian
நவ 18, 2024 05:19

அது ரகசியமாச்சே அதை எப்படி மத்தவங்களுக்கு சொல்றது அது எனக்கும் எங்க அப்பாவுக்கும் மட்டும்தான் தெரியணும் அதையெல்லாம் வெளியிலே சொல்ல முடியாது


Matt P
நவ 18, 2024 00:54

எப்போ பார்த்தாலும் நீட், இந்தி எதிர்ப்பு. திராவிட என்ற்ற கட்சிக்காரனுக்கெல்லாம் இது தான் கொள்கை. மக்களுக்கு நல்லது செய்யப்பாருங்கப்பா.. கூட்டுத்திருடனுகள்.


prabakaran J
நவ 17, 2024 22:07

Eps - you are Don. Here onwards don't talk about chilli boys(d.cm)


hari
நவ 18, 2024 07:04

pl answer his question muttu


Raghavan
நவ 17, 2024 22:00

அ தி மு க தனித்து போட்டியிட்டு வென்ற காலம் எல்லாம் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா உடன் போய்விட்டது. இப்போது மற்ற கட்சிகளுடன் கூட்டணி வைத்து போட்டியிட்டால் தான் எதிர் கட்சி அந்தஸ்தாவது உங்களுக்கு கிடைக்கும். இல்லையென்றால் தலையில் துண்டை போட்டுக்கொண்டு போகவேண்டியதுதான். உதயநிதி வரும் சட்டசபை தேர்தலிலும் இதையேதான் சொல்லி வோட்டுக்கேட்பார் இந்த மக்களும் 500, 1000 த்துக்கும் ஆசைப்பட்டு ஒட்டு போட்டு அடுத்தமுறை அவரை முதல் மந்திரி ஆகினாலும் ஆகலாம். கூட்டணி இல்லமால் தமிழகத்தில் ஆட்சி செய்ய முடியாது.


pv, முத்தூர்
நவ 17, 2024 21:19

அதுமட்டும் முடியாது. ஏன அவருக்கே அது தெரியாது.


Suppan
நவ 17, 2024 21:04

"ஆட்சிக்கு வந்தவுடன் நீட் தேர்வு ரத்து தான் முதல் கையெழுத்து என்று சொன்னீர்கள்?" இன்னும் கையெழுத்து போடவே கற்றுக்கொள்ளவில்லை. என்ன செய்வது? அந்த ரகசியம் தெரிஞ்சாதானே சொல்லமுடியும். எதோ தேர்தலுக்காக அடிச்சு விட்டாச்சு .


Duruvesan
நவ 17, 2024 20:39

பாஸ் நாம தான் தீயமுகவை ஜெயிக்க வெக்கிறோம், ஏற்கனவே உங்க டீல் படி 200 னு விடியல் சார் சொல்லிட்டாரு


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை