உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / இ.பி.எஸ்., ராமதாசுக்கு வேறு வேலை கிடையாது: அமைச்சர்

இ.பி.எஸ்., ராமதாசுக்கு வேறு வேலை கிடையாது: அமைச்சர்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுக்கோட்டை: '' ஊழல் குற்றச்சாட்டு கூறுவதை தவிர பா.ம.க., நிறுவனர் ராமதாசுக்கு வேறு வேலை கிடையாது,'' என அமைச்சர் ரகுபதி கூறியுள்ளார்.பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் எழுப்பிய கேள்வி குறித்து செய்தியாளர்கள் கேட்டபோது, 'அவருக்கு வேற வேலையில்லை. அதனால் தான் தினமும் அறிக்கை வெளியிட்டுக் கொண்டிருக்கிறார்,' என்று முதல்வர் ஸ்டாலின் கூறினார். இதற்கு பா.ம.க., தலைவர் அன்புமணி, தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை உள்ளிட்டோர் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=pcfylvsl&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0இது தொடர்பாக புதுக்கோட்டையில் அமைச்சர் ரகுபதி கூறியதாவது: முதல்வர் யாரையும் தரக்குறைவாக பேசும் நபர் அல்ல என்பது மக்களுக்கு தெரியும். தமிழக அரசு திறந்த புத்தகம். நாங்கள் தவறு செய்யவில்லை என்பதை அவர் சுட்டிக்காட்டி உள்ளார். ஊழல் குற்றச்சாட்டு சுமத்துவதைத் தவிர ராமதாசுக்கு வேறு வேலை எதுவும் கிடையாது.தி.மு.க., ஆட்சியில் போலீசாரால் துன்புறுத்தப்பட்டு யாரும் இறந்த நிகழ்வு நடக்கவில்லை. பழனிசாமிக்கு ஞாபக மறதி அதிகம். தனது ஆட்சிக்காலத்தை அவர் எண்ணிப் பார்க்க வேண்டும். அ.தி.மு.க., ஆட்சியில் தூத்துக்குடியில் நடந்தது அனைவருக்கும் தெரியும். அனைத்தையும் மறந்துவிட்டு பழனிசாமி பேசி வருகிறார். எங்கு இறப்பு நடந்தாலும் அரசை குறை சொல்வதைத் தவிர பழனிசாமிக்கு வேறு வேலை கிடையாது. இந்தியாவிலேயே பெண்களுக்கு அதிக பாதுகாப்பான மாநிலம் தமிழகம் தான். இவ்வாறு ரகுபதி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 9 )

பட்டினத்தார் , மலையும் மலை சார்ந்த பகுதி
நவ 26, 2024 16:06

தமிழகத்தில் திமுக ஒன்று தான் வேலை பார்த்து கொண்டு உள்ளது. மற்றவர்களுக்கு எல்லாம் வேறு வேலை இல்லை. எப்பொழுது பார்த்தாலும் குறை சொல்லிக் கொண்டே இருப்பது. எங்களுக்கு தான் ஒழுங்காக ஆட்சி செய்ய தெரியாது என்று அனைவருக்கும் தெரிந்தது. அது நன்கு தெரிந்தும் குறை சொல்லி கொண்டு இருந்தால் எப்படி. எல்லா குறைகளுக்கும் பதில் சொல்லிக் கொண்டு இருக்க முடியுமா. அதனால் தான் வேறு வேலை தேடிச் சொல்லி வேறு வேலை இல்லாதவர் என்று சொன்னோம். இது தவறா? நாங்கள் பேரரசு என்று கூறி நாங்களே கோவையில் சுவரொட்டி ஒட்டி உள்ளோம். அரசனை பற்றி குறை சொல்ல கூடாது என்று தெரியாதா? அரசனை பற்றி குறை கூறினால் அரசன் என்ன செய்வார் என்று தெரியாதா?


Ramesh Sargam
நவ 26, 2024 13:17

அவர் வாயை மூடவேண்டுமென்றால், நீங்கள் ஊழல் இல்லாத ஒரு அரசு நடத்தவும். அதைவிட்டுவிட்டு, ராமதாஸ் மீது அவதூறு கூறுவது சரியல்ல.


தர்மராஜ் தங்கரத்தினம்
நவ 26, 2024 09:42

அவங்க மட்டும் அரசியல் செய்யாம அவியலா செய்வாங்க ????


Parthasarathy Badrinarayanan
நவ 26, 2024 08:35

உள்ளதச் சொன்னா எரியுதா? பள்ளிக்குள் புகுந்து ஆசிரியையை கொன்ற மாநிலத்தில் பெண்கள் பாதுகாப்பாக இருக்கிறார்களாம். கோர்ட்டுக்குள் வக்கீலை வெட்டுகிறார்கள். அதை நியாயப் படுத்த ஒரு நீதிபதி. இந்தமாநிலத்துக்கு ஒரு சட்டத்துறை அமைச்சர் வேறு.


Kasimani Baskaran
நவ 26, 2024 06:12

நாங்கள் யோக்கியமானவர்கள் என்று ஒரு பொழுதும் சொல்லவே மாட்டார்கள் - அதுதான் திமுகவினரின் சிறப்பு. பங்காளிகளும் கூட அதே கோட்பாடுதான் - ஆனால் கமுக்கமாக ஊழல் செய்வார்கள். அரை நூற்றாண்டாக ஊழல் என்ற மதுவை வைத்து தமிழகத்தை ஊரல் போட்டு இருக்கிறார்கள். ஆயிரம் அண்ணாமலைகள் வந்தாலும் திருத்துவது சிரமம்.


Mani Vellachamy
நவ 26, 2024 05:43

அதுபோல் மந்திரிகளுக்கு கோபாலபுரத்து பணி செய்வதைவிட வேறு வேலை கிடையாது ஜெ. ஜெயலலிதா கல்லூரி நிறுவனரே.


Raj
நவ 26, 2024 05:28

எதிர் கட்சிகள் அப்படி தான் கேள்வி கேட்பார்கள், அது தான் எ. க. யின் வேலை. இல்லை என்று மறுப்பு தெரிவியுங்கள்... திராணி இருக்கா?


D.Ambujavalli
நவ 26, 2024 05:27

ஆமாம், பெண்மணியான கனிமொழியின் கூட்டத்துக்குப் பாதுகாப்பு கொடுக்க வந்த பெண் போலீசை சீண்டிய திராவிட மாடலை விட பெண்களின் பாதுகாப்புக்கு வேறு சாட்சி வேண்டுமா ? 1989 லிருந்தே சட்டசபையில் உங்கள் ‘பாதுகாப்பை’ நிரூபித்தவர்களாயிற்றே


rama adhavan
நவ 25, 2024 23:19

இவர் எந்த துறை அமைச்சர்? தினசரி திமுக சார்பில் அறிக்கை விடும் துறைக்கா?


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை