உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / ஈரோடு இடைத்தேர்தல்; தி.மு.க., - நாம் தமிழர் கட்சி வேட்பாளர்கள் மனு தாக்கல்

ஈரோடு இடைத்தேர்தல்; தி.மு.க., - நாம் தமிழர் கட்சி வேட்பாளர்கள் மனு தாக்கல்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

ஈரோடு: ஈரோடு கிழக்குத்தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் தி.மு.க., வேட்பாளர் சந்திரகுமார், நாம் தமிழர் கட்சி வேட்பாளர் சீதாலட்சுமி இன்று (ஜன.,17) வேட்புமனு தாக்கல் செய்தனர். ஈரோடு கிழக்கு தொகுதி, காங்கிரஸ் கட்சி வசம் இருந்தது. முதலில் திருமகன் ஈ.வெ.ரா., வென்ற இந்த தொகுதியில், அவரது மறைவுக்கு பிறகு ஈ.வேகே.எஸ்., இளங்கோவன் வென்றார். அவர் காலமான நிலையில், இந்த முறை தி.மு.க., போட்டியிடுகிறது. தேர்தல் வரும் பிப்ரவரி 5ம் தேதி நடக்கிறது. https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=zmxs51j5&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0வேட்பு மனு தாக்கல் செய்ய கடைசி நாளான இன்று (ஜன.,17) தி.மு.க., வேட்பாளர் சந்திரகுமார், நாம் தமிழர் கட்சி வேட்பாளர் சீதாலட்சுமி வேட்புமனு தாக்கல் செய்தனர். தமிழகத்தின் பிரதான எதிர்க்கட்சிகளான அ.தி.மு.க.,- பா.ஜ., போட்டியில் இருந்து ஒதுங்கி, தேர்தலை புறக்கணித்து உள்ளன. தி.மு.க., கூட்டணியில் போட்டியிடும் சந்திரகுமார், நாம் தமிழர் கட்சியின் சீதாலட்சுமிக்கு இடையே நேரடி போட்டி ஏற்பட்டு உள்ளது. சந்திரகுமார் ஆளுங்கட்சி வேட்பாளர் என்பதால் அவருக்கு தான் வெற்றி என்ற சூழலே கள நிலவரமாக உள்ளது. அதுமட்டுமின்றி தி.மு.க., கூட்டணி கட்சி தலைவர்களும் சந்திரகுமாருக்கு ஆதரவாக ஓட்டு சேகரிக்க உள்ளனர். இதற்கிடையே நாம் தமிழர் கட்சி வேட்பாளர் சீதா லட்சுமிக்கு ஆதரவாக, அக்கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் களத்தில் இறங்கி தீவிர பிரசாரம் செய்ய இருப்பதாக அக்கட்சி மூத்த தலைவர்கள் தெரிவித்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 7 )

sankar
ஜன 17, 2025 21:46

நாம்தமிழர் வெற்றி உறுதி. இந்த கட்சிதாவல் கோஷ்டி வேலைக்காகாது.


Laddoo
ஜன 17, 2025 21:06

சந்திரகுமாரை பார்த்தாலே பயமாக இருக்குது. முகத்திலேயே கோரத் தாண்டவம். நேரம் சரியில்லே


Dharmavaan
ஜன 17, 2025 18:28

திமுக வேட்பாளருடன் சென்றவர்கள் எத்தனை பேர் நா த க வுடன் சென்றவர்கள் எத்தனை பேர் செய்தியில் காணோமே


Dharmavaan
ஜன 17, 2025 18:25

நாம் தமிழரை வெற்றி பெற செய்ய வேண்டும்


S.V.Srinivasan
ஜன 17, 2025 14:56

நாம் மிழர் கட்சி வேட்பாளர் வெற்றி பெற வாழ்த்துக்கள். தனியாக களம் இறங்கிய சீமானை பாராட்டுவோம்.


ஆரூர் ரங்
ஜன 17, 2025 14:45

முகூர்த்தம் பார்த்து தாக்கல் செய்வதால் இது பெரியார் மண்ணு


ஆரூர் ரங்
ஜன 17, 2025 14:18

இளங்கோவன் மற்றும் திருமகன் இளங்கோவன் வழியில் செல்வோம் என யாரும் உறுதிமொழி கொடுக்கமாட்டார்கள். சுயநல அரசியல்வாதிகளை இனியும் அனுமதிக்கக் கூடாது


சமீபத்திய செய்தி