உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / இடைத்தேர்தலில் முன்னிலை: காங்., அலுவலகம் காலை ‛நிசப்தம்: மதியம் ‛‛சப்தம்

இடைத்தேர்தலில் முன்னிலை: காங்., அலுவலகம் காலை ‛நிசப்தம்: மதியம் ‛‛சப்தம்

சென்னை: ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர் இளங்கோவன், அதிக ஓட்டுகள் வித்தியாசத்தில் முன்னிலை பெற்ற போதும், சென்னையில் உள்ள அக்கட்சியின் தலைமை அலுவலகமான சத்தியமூர்த்தி பவன் காலை முதல் வெறிச்சோடி காணப்பட்டது. மதியம் 11:30 மணிக்கு மேல் வந்த தொண்டர்கள் பட்டாசு வெடித்து கொண்டாடினர். கட்சியின் வெற்றியை கொண்டாட ஒருவர் கூட வரவில்லை. இதற்கு மாறாக, திமுக தலைமை அலுவலகத்தில் அக்கட்சி தொண்டர்கள் பட்டாசு வெடித்து கொண்டாடினர். ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் பதிவான ஓட்டுகள் இன்று( மார்ச் 2) எண்ணப்பட்டு வருகிறது. அதில் துவக்கம் முதலே காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட முன்னாள் மத்திய அமைச்சர் இளங்கோவன், அதிக ஓட்டுகள் வித்தியாசத்தில் முன்னிலை வகித்து வருகிறார்.பொதுவாக பொதுத்தேர்தல் மற்றும் இடைத்தேர்தல் எதுவாக இருந்தாலும், தி.மு.க., அல்லது அ.தி.மு.க., சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் முன்னிலை பெற்ற தகவல் வந்ததுமே அக்கட்சிகளின் தலைமை அலுவலகம் முன்பு தொண்டர்கள் ஒன்று கூடி ஆட்டம், பாட்டத்தில் ஈடுபட்டு மகிழ்ச்சியை வெளிப்படுத்துவதுடன், இனிப்புகள் வழங்கி கொண்டாடுவார்கள். பல மாவட்டங்களிலும் எதிரொலிக்கும். மக்களுக்கு இனிப்புகள் வழங்கி மகிழ்ச்சியை வெளிப்படுத்துவார்கள்.ஆனால், காங்கிரஸ் கட்சியில் இதற்கு மாறான நிலைமை நிலவி வருகிறது. அக்கட்சியின் தலைமை அலுவலகமான சென்னையில் உள்ள சத்தியமூர்த்தி பவனில், ஓட்டு எண்ணிக்கை துவங்கிய பிறகு காலை நேரத்தில் ஒருவர் கூட காணப்படவில்லை. அக்கட்சி அலுவலகம் ஆட்கள் இன்றி வெறிச்சோடி காணப்பட்டது. மதியம் 11:30 மணிக்கு மேல் வந்த தொண்டர்கள் பட்டாசு வெடித்து கொண்டாடினர்.இளங்கோவன் வீட்டிற்கு சென்ற, அவரது ஆதரவாளர்கள் சிலர் இனிப்பு வழங்கி கொண்டாடினர்.காங்கிரஸ் அலுவலகமோ வெறிச்சோடி காணப்பட்ட நிலையில், அதற்கு நேர்மாறாக, சென்னையில் உள்ள திமுக தலைமை அலுவலகத்தில் அக்கட்சியினர் பட்டாசு வெடித்து கொண்டாடியதுடன், ஸ்டாலினை வாழ்த்தி கோஷம் போட்டனர்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









புதிய வீடியோ