உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல்: அ.தி.மு.க., புறக்கணிப்பு

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல்: அ.தி.மு.க., புறக்கணிப்பு

சென்னை: ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிப்பதாக அ.தி.மு.க., அறிவித்து உள்ளது.ஈரோடு இடைத்தேர்தல் வரும் பிப்ரவரி 5ம் தேதி நடைபெற இருக்கிறது. இதற்கான வேட்பு மனு தாக்கல் நேற்று (ஜன.,10) தொடங்கியது. 13 மற்றும் 17ம் தேதிகள் மட்டுமே வேட்புமனுவை தாக்கல் செய்ய அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=1qlld1ym&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0இந்த சூழலில், ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் காங்கிரஸ் தொடர்ந்து போட்டியிட்டு வந்த நிலையில், இந்த முறை தி.மு.க., போட்டியிடுவதாக அறிவித்தது. அதன்படி, வேட்பாளராக சார்பில் மாநிலக் கொள்கை பரப்பு இணைச் செயலாளர் வி.சி.சந்திரகுமாரை தி.மு.க., தலைமை அறிவித்துள்ளது.

ஆலோசனை

இந்த தேர்தலில் அ.தி.மு.க., போட்டியிடுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்தது. இது குறித்து முடிவு செய்ய அ.தி.மு.க., மாவட்ட செயலாளர்களுடன் அக்கட்சி பொதுச்செயலாளர் பழனிசாமி ஆலோசனை நடத்தினார். இதனைத் தொடர்ந்து ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிப்பதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.

காரணம் என்ன

இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: தி.மு.க., ஆட்சிக் காலங்களில், அக்கட்சியினரால் நிகழ்த்தப்பட்ட அராஜக, வன்முறைச் சம்பவங்கள் எண்ணிலடங்காதவை. கடந்த முறை நடந்த ஈரோடு கிழக்கு சட்டசபை தொகுதிக்கான இடைத்தேர்தலில் அள்ளி இறைக்கப்பட்ட பணம், மது, கொலுசு, குக்கர், தங்கக் காசு உள்ளிட்ட பரிசுப் பொருட்கள் என, இவை எல்லாவற்றையும் தாண்டி தி.மு.க.,வின் மிரட்டல் அப்பாவி மக்களைப் பெருமளவில் அச்சுறுத்தியது. வாக்காளர்களை பட்டியில் அடைத்த அவலமும் நடந்தேறியது.தி.மு.க.,வினர் அழைக்கும் இடத்திற்கு வந்து காலை முதல் இரவு வரை உட்கார்ந்து இருக்கவில்லையென்றால், முதியோர் உதவித்தொகையோ, வேறு எந்த அரசு நலத்திட்டங்களோ வழங்கப்பட மாட்டாது என்கிற மிரட்டலுக்கு பயந்து மக்கள் சொந்த மண்ணில் அகதிகளைப் போல நடத்தப்பட்ட விதத்தை நினைத்தாலே நெஞ்சம் பதறுகிறது. இவ்வாறு ஆட்சி அதிகாரத்தைப் பயன்படுத்தி ஜனநாயகத்தை குழிதோண்டி புதைத்து மக்களாட்சியின் மகத்துவத்தை மறந்து, வன்முறையில் ஈடுபடுவது மட்டும் தி.மு.க.,வினரின் வாடிக்கை.நடைபெற உள்ள ஈரோடு கிழக்கு சட்டசபை தொகுதிக்கான இடைத்தேர்தலிலும், நிர்வாகத் திறனற்ற விடியா தி.மு.க.,வின் ஸ்டாலின் மாடல் அரசின் அமைச்சர்களும், தி.மு.க.,வினரும் ஆட்சி அதிகாரத்தை தவறாக பயன்படுத்துவார்கள் என்பாதும், பணபலம், படைபலத்துடன் பல்வேறு அராஜகங்கள் மற்றும் வன்முறைகளை கட்டவிழ்த்து மக்களை சுதந்தரமாக வாக்களிக்க விட மாட்டார்கள் என்பதாலும், தேர்தல் சுதந்திரமாகவும், நியாயமாகவும் நடைபெறாது என்பதாலும் பிப்.,5 ல் நடக்க உள்ள ஈரோடு கிழக்கு சட்டசபை தொகுதி இடைத்தேர்தலை அ.தி.மு.க., புறக்கணிக்கிறது. இவ்வாறு அந்த அறிக்கையில் பழனிசாமி கூறியுள்ளார்.

தே.மு.தி.க.,வும் புறக்கணிப்பு

இடைத்தேர்தலை அ.தி.மு.க., புறக்கணித்த நிலையில், அதன் கூட்டணிக் கட்சியான தே.மு.தி.க.,வும் அதை புறக்கணித்து உள்ளது. இது தொடர்பாக தே.மு.தி.க., பொதுச்செயலர் பிரேமலதா வெளியிட்ட அறிக்கையில், ஜனநாயகத்திற்கு விரோதமாக நடக்கும் தேர்தலில் நம்பிக்கையில்லை என்பதால், ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலை தே.மு.தி.க., புறக்கணிக்கிறது எனக்கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 15 )

அப்பாவி
ஜன 12, 2025 10:47

தோல்வி பயம்.


Suppan
ஜன 11, 2025 21:28

அதெப்படிங்க போட்டி போட மாட்டோம்னு சொல்றீங்க. எங்களுக்கு எவ்வளவு இழப்பு? பணம் மட்டுமல்ல. 15 நாட்களுக்கு எங்களைப்பட்டியில் அடைத்து சோறு போட்டு, குத்தாட்டம் காண்பித்து, சரக்கு கொடுத்து. ..ம் ம் ம் எவ்வளவு நஷ்டம் இப்படிக்கு ஈரோடு கிழக்கு தொகுதி மக்கள்


GMM
ஜன 11, 2025 19:55

திமுக ஈரோடு சென்று வாக்கிற்கு பணம், பரிசு கொடுத்து பிரச்சாரம் செய்யாது . முதல்வர் உட்பட, யாரும் பிரச்சாரம் செய்ய மாட்டார்கள். எடப்பாடி ஈரோடு தேர்தலில் தனித்து, கூட்டணி அமைத்து போட்டியிட முடியுமா ? முடியாது. போட்டியிட்டால் டெபாசிட் கிடைக்காது என்பது தெரியும். அண்ணா திமுக சொத்து, நிதியை தேர்தல் ஆணையம் கைப்பற்றி, ரிசர்வ் வங்கியிடம் ஒப்படைக்க வேண்டும். பிஜேபி நட்பை உதறியவுடன், கழகத்தின் கொள்கை ஒன்றானதால், திமுகவுடன் இணைந்து இருக்க வேண்டும்.


AMLA ASOKAN
ஜன 11, 2025 19:30

2026 தேர்தலையும் அதிமுக புறக்கனிக்குமா ? இரட்டை இலையில் ஒரு இலை உதிர்ந்து விட்டது . சென்ற தேர்தலில் EVKS இளங்கோவன் என்ற ஆளுமை தன் சொந்த செல்வாக்கில் வெற்றி பெற்றார் . அது போன்ற நபர் அதிமுக கைவசம் இல்லை . புறக்கணிப்பு என்பதை விட புறமுதுகு என்பது தான் சரியான சொல்


தர்மராஜ் தங்கரத்தினம்
ஜன 11, 2025 21:46

இதை புறமுதுகு காட்டுதல் ன்னு சொன்னா மக்களை ஏகத்துக்கும் கவனிச்சு, பட்டியில் அடைச்சு ஓட்டு வாங்கின கட்சியை என்னன்னு சொல்லலாம் ? துடை நடுங்கிகள் என்பதுதான் சரியான சொல் .... அவர்களின் அடிமையாக இருக்க நீங்க கூச்சப்பட வேணாமா ?


திகழ்ஓவியன்
ஜன 11, 2025 19:12

ADMK பயந்து கொண்டு நிற்கவில்லை பிரதான எதிர்க்கட்சி வேஷ்டி முழுக்க சேர் ஆகி இருக்கு அது உமக்கு தெரியவில்லை , சரி அண்ணாமலை இப்போதாவது நின்று வெற்றி பெற்று கட்சி வளர்ந்ததின் சுய ரூபம் காட்டலாமே


V வைகுண்டேஸ்வரன்
ஜன 11, 2025 19:05

விக்கிரவாண்டியிலும் போட்டியிடவில்லை. இப்போது ஈரோடு கி. தொகுதியிலும் போட்டியிடவில்லை. அதிமுக வில் என்ன நடக்கிறது?


திகழ்ஓவியன்
ஜன 11, 2025 19:03

நாம அப்படியே போட்டி போட்டு ஜெயிச்சிட்டாலும்...


திகழ்ஓவியன்
ஜன 11, 2025 19:00

சாத்தான் குளம் இடை தேர்தல் ஜெயா குங்கும சிமிழ் கொடுத்து தொடங்கி வைத்து அது பரவி நிமிர்ந்து இன்று அவர்கள் போட்டி இட பயப்படும் நிலை


T.sthivinayagam
ஜன 11, 2025 18:11

ஜனநாயக கடமையில் சுயநலனும் நட்புநலனும் மட்டுமே முக்கியம் என்பதை உணர்ந்த கட்சி உள்ளன என்பதை அறிந்து சமுகவிரோதிகள் ஆனந்தபடுவார்கள்


abdulrahim
ஜன 11, 2025 17:52

ஹா ஹாஆ படுத்தே விட்டாரய்யா


புதிய வீடியோ