உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / 100 மணி நேரம் கூட சபை நடப்பதில்லை!

100 மணி நேரம் கூட சபை நடப்பதில்லை!

''சட்டசபையை 100 நாட்கள் நடத்துவதாக கூறிவிட்டு, இப்போது 100 மணி நேரம் கூட பேச அனுமதிப்பதில்லை,'' என, எதிர்க்கட்சி தலைவர் பழனிசாமி புகார் கூறினார்.சட்டசபையில் நடந்த விவாதம்:பழனிசாமி: ஆட்சிக்கு வருவதற்கு முன்பு, 100 நாட்கள் சட்டசபையை நடத்துவதாக கூறினீர்கள். இப்போது, 100 மணி நேரம் கூட சபையை நடத்துவதில்லை. பட்ஜெட் குறித்து ஒரே நாள் விவாதம் வைத்தால் எப்படி பேச முடியும்?சபாநாயகர் அப்பாவு: மானிய கோரிக்கை ஒவ்வொரு நாளும் நடக்கும்.பழனிசாமி: மானிய கோரிக்கையில் 5 நிமிடம் வழங்கினால், ஒரு துறை குறித்து எப்படி பேச முடியும்?சபாநாயகர்: வாய்ப்பு தர மாட்டோம் என்று மறுக்கவில்லை. உங்கள் ஆட்சியில் சட்டசபை ஒரு நாள், இரண்டு நாள் கூட நடந்த வரலாறு உள்ளது. பழனிசாமி: கொரோனா காலத்தை தவிர்த்து, போதுமான இடைவெளி விட்டு சபையை நடத்தியுள்ளோம். எதிர்க்கட்சிகள் கூறிய பிரச்னைகளை கேட்டு தீர்த்து வைத்தோம்.அமைச்சர் துரைமுருகன்: அலுவல் ஆய்வு கூட்டத்தில், என்ன முடிவு செய்யப்படுகிதோ, அதன்படிதான் நாங்கள் நடந்து கொள்கிறோம். இவ்வாறு விவாதம் நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







முக்கிய வீடியோ