உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / புதிதாக கட்சி தொடங்குபவருக்கும் நம் தலைவர்கள் தேவைப்படுகிறார்கள்: விஜய் கட்சி பற்றி பேசிய இபிஎஸ்

புதிதாக கட்சி தொடங்குபவருக்கும் நம் தலைவர்கள் தேவைப்படுகிறார்கள்: விஜய் கட்சி பற்றி பேசிய இபிஎஸ்

அரக்கோணம்: இன்றைக்கு புதிதாக கட்சி தொடங்குபவரும் நம் தலைவரைப் போற்றித்தான் கட்சி தொடங்க வேண்டிய நிலை இருக்கிறது என அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ் தெரிவித்தார்.ராணிப்பேட்டை, சோளிங்கர் தொகுதிகளையடுத்து அரக்கோணம் காந்தி சாலையில் குழுமியிருந்த மக்கள் மத்தியில் இபிஎஸ் பேசியதாவது: முதல்வர் ஸ்டாலின் திமுக கூட்டணி ஆட்சி அமைக்கும் என்று கனவு காண்கிறார். அரக்கோணத்தை கொஞ்சம் திரும்பிப் பாருங்கள், இந்த கூட்டமே வரும் தேர்தலில் அதிமுக ஆட்சி அமைப்பதற்கு அடித்தளம். திமுக ஆட்சிக்கு வந்து 51 மாதம் முடிந்துவிட்டது. அரக்கோணத்துக்கு ஏதாவது பெரிய திட்டம் கொண்டுவந்தார்களா? தேர்தல் அறிக்கையில் 525 அறிவிப்புகளை ஸ்டாலின் வெளியிட்டார். அவற்றில் 10% கூட நிறைவேற்றவில்லை, ஆனால் 98% நிறைவேற்றப்பட்டுவிட்டதாக ஸ்டாலினும், அமைச்சர்களும் பச்சை பொய் சொல்கிறார்கள். நிறைவேற்றப்படாத வாக்குறுதிகளில் சிலவற்றைச் சொல்கிறேன்.

போட்டோ ஷூட்

நீட் தேர்வு ரத்து செய்வதுதான் எங்கள் ஆட்சியின் முதல் கையெழுத்து என்றார் ஸ்டாலின். நீட் தேர்வை ரத்து செய்யும் ரகசியம் எங்களுக்குத் தெரியும் என்றார் உதயநிதி. அரக்கோணத்திலாவது உங்கள் ரகசியத்தைச் சொல்லுங்கள். ஸ்டாலின் அறிவிப்பு வெளியிடுவார், போட்டோ ஷூட் எடுப்பார், குழு போடுவார். அவ்வளவுதான்.சட்டம் ஒழுங்கு அடியோடு சீர்கெட்டுப் போனது. ஸ்காட்லாந்து காவல்துறைக்கு இணையாகப் போற்றப்பட்ட தமிழக போலீசார் இப்போது ஏவல்துறையாக மாறிவிட்டனர். இன்று இவ்வளவு பெரிய கூட்டம் நடக்கிறது.

புதிதாக கட்சி

எங்காவது போலீசார் இருக்கிறார்களா? இதுவே ஸ்டாலின் நடத்தும் கூட்டத்துக்கு 2 ஆயிரம் போலீசாரை நிறுத்துகிறார்கள். ஏனென்றால், ஸ்டலினுக்கு மக்கள் கூட்டம் வராது. இன்றைக்கு புதிதாக கட்சி தொடங்குபவரும் நம் தலைவரைப் போற்றித்தான் கட்சி தொடங்க வேண்டிய நிலை இருக்கிறது. அப்படி நம் தலைவர்கள் மக்களுக்காக வாழ்ந்து மறைந்தனர். ஆக வரும் தேர்தல் அதிமுக கூட்டணி மாபெரும் வெற்றி பெற நல்லாதரவை தரவேண்டும். உங்களுடன் ஸ்டாலின் என்று நான்காண்டு கழித்து மக்களிடம் ஸ்டாலின் வந்திருக்கிறார். வீடுவீடாக அதிகாரிகள் வருகிறார்கள்.

இரட்டை இலை

மக்களிடம் இருக்கும் 46 பிரச்னை பற்றி மனு கொடுத்தால் அதனை நிறைவேற்றிக் கொடுப்பார்களாம். நடக்குமா… இவை எல்லாம் நாடகம்தானே? 46 பிரச்னை மக்களுக்கு இருக்கிறது என்று முதல்வரே ஒப்புக்கொள்கிறார். இதேபோல்தான் எதிர்க்கட்சி தலைவராக இருக்கும்போது புகார் பெட்டி திட்டம் கொண்டுவந்து மனு வாங்கினார். தீர்வு காணப்படும் என்றார், தீர்வு காணப்படாவிட்டால் கோட்டையில் கதவு திறந்திருக்கும், என்னை வந்து சந்திக்கலாம் என்றார், சந்தித்தாரா? அதிமுக வேட்பாளருக்கு இரட்டை இலை சின்னத்தில் வாக்களித்து வெற்றி பெற வையுங்கள். மக்களைக் காப்போம் தமிழகத்தை மீட்போம். இவ்வாறு இபிஎஸ் பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 15 )

அப்பாவி
ஆக 21, 2025 22:14

இவங்க கூட பரவாயில்லே... எப்பவோ செத்துப் போனவங்களை தோண்டி திட்டி சிலர் அரசியல் நடத்தறாங்க.


M Ramachandran
ஆக 21, 2025 12:20

திருட்டு கட்சிகளுக்கு திட்டம் தீட்டுவது அதில் எப்படி குடும்பத்திற்கு திருப்புவது என்று தான் திட்டம் போடுவார்கள். எப்படி என்றால் கான்டராக்டர்களிடம் அளவுக்கு மேல் கமிஷன் கறந்து அதன் விளைவு கான்டராக்டர்கள் ரோடு போடுவது போல் பாவ்லா காட்டி ஜல்லி கொட்டி 2 மாதம் கழித்து வேறு இடத்தில் கொட்டி கணக்கு காட்ட வேண்டிய நிர்பந்தத்தில். அதைஊக்குவித்து குடும்ப சொத்து சேர்க்கும் திட்டமெ நமக்கு நாமே திட்டம். இதை கண்டு பிடித்து செயல் படுத்திய செயல்வீரர் நம் துண்டு சீட்டு. உச்சி முகர்ந்து ஆசிர்வதித்த அப்பாவின் பிள்ளை யிருக்கிறார்யென்ற நிம்மதி.


pakalavan
ஆக 21, 2025 12:14

ஆம்புலன்சுக்கு வழி விட வக்கில்லாத நாலா ந்தர அரசியல்வாதி,


pakalavan
ஆக 21, 2025 12:12

உன்னமாதிரி பதவிக்கு வந்தவன் யாருமே இல்லை,


Santhakumar Srinivasalu
ஆக 21, 2025 12:54

ஊர்ந்து போய் காலில் விழுந்து பதவி வாங்கியதையும் சேர்த்து கொள்ளுங்கள்!


Karthik Madeshwaran
ஆக 21, 2025 12:10

காசு கொடுத்து கூட்டத்தை கூட்டுகிறார் பழனிசாமி, இது படித்த மக்கள் அனைவருக்கும் தெரியும். தலைவர் பதவிக்கு சுத்தமாக தகுதியே இல்லாதவர் பழனிசாமி. போதிய அறிவும் இல்லை, தலைவருக்கான தகுதியும் இல்லை. அதிமுக கட்சிக்கு இவர் தலைவர் என்பது... குரங்கு கையில் பூமாலை கொடுத்த கதை தான். எம்ஜிஆரும், ஜெயலலிதாவும் பெரும் போராட்டத்திற்கு நடுவே வளர்த்த இயக்கம் இன்று இவர்போன்ற துரோகிகள் கையில் சிக்கி சின்னாபின்னமாகி கிடக்கிறது. காலக்கொடுமை. இரட்டைஇலை சின்னம் மட்டும் இல்லையென்றால் இவர்கள் எந்த தொகுதியிலும் டெபாசிட் கூட வாங்க மாட்டார்கள். இன்று பாஜக கட்சியில் இருப்பவர்கள் பாதிக்குமேல் அதிமுக கட்சியில் இருந்து வந்தவர்கள் தான். 2026 தேர்தலுக்கு பிறகு அதிமுக கட்சி இருக்குமா என்று தெரியவில்லை. எதிர்காலத்தில் DMK vs TVK vs BJP இடையே தான் போட்டி இருக்கும். அதிமுக கட்சி ஆட்சிக்கு வர வாய்ப்பே இல்லை. திமுகாவிற்கு எதிரான வாக்குகள் அனைத்தையும் விஜய் வாரி செல்கிறார் என்ற எளிய விசயத்தை கூட பழனிசாமிக்கு புரியவில்லை.


Kadaparai Mani
ஆக 21, 2025 16:42

Why dmk is not able to big crowd like EPS. Up to a particular level only money will work out. AIADMK will sweep polls.


M Ramachandran
ஆக 21, 2025 12:02

நீ தான் இப்பொது ஜோசபின் புலமாக செயல் பட தேவை. எட்டாத காலி செய்து சென்று விடு கனமான பதவியை கொடுப்பார்.


pakalavan
ஆக 21, 2025 11:38

உனக்கு என்ன தகுதி இருக்கு?


mohana sundaram
ஆக 21, 2025 10:36

இவனை நம்பும் கட்சிகளுக்கு எல்லை எல்லாம் பிரச்சனைகள் உண்டாகும். இவனும் ஒரு தேசத் துரோகி. பிஜேபி மத்திய அரசாங்கம் எந்த விதமான சட்டம் கொண்டு வந்தாலும் அதை இவன் எதிர்க்கிறான். இவனுக்கும் திமுக விற்கும் எந்தவித வித்தியாசமும் இல்லை. பிஜேபி சுதாரித்துக் கொள்வது நல்லது.


Kadaparai Mani
ஆக 21, 2025 11:46

BJP central leadership has high regards for Edappadi palanisamy. Now crowds are welcoming EPS like puratchi talaivar MGR days. Only AIADMK can defeat dmk in tamil nadu. Day dreamers and dmk family tacit supporters only spoiled AIADMK alliance in 2024 parliamentary elections


Kjp
ஆக 21, 2025 09:47

முதல்வரின் நிர்வாக சீர்கேட்டால் எடப்பாடி பழனிச்சாமியின் செல்வாக்கு அதிகமாக உயர்ந்து கொண்டே இருக்கிறது. எல்லா தரப்பினரும் திமுக ஆட்சியின் மேல் அதிருப்தியில் இருக்கிறார்கள். ஆயிரம் ரூபாய் இலவச பயணம் இவைகளை கொடுத்தால் மக்கள் ஆதரவு நமக்கு பெருகும் என்று கஜானாவை காலி பண்ணி விட்டார்.


Ram
ஆக 21, 2025 09:42

இவர் சொல்வது முற்றிலும் உணமைதான்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை