ஏதோ ஒன்றில் தான் எல்லாமும் இருக்கிறது
ஆசிரியர் : புவனா தேனா வெளியீடு : வேரல் புக்ஸ், இரண்டாவது தளம் காவேரி தெரு, சாலிகிராமம் சென்னை- - 600 093 அலைபேசி : 95787 64322 பக்கம் : 72 விலை : ரூ.110 'அ டைகாத்து ஆர்ப்பரித்து இதழெல்லாம் பூரித்து, உயிர்வரை ஊடுருவி வேர்பரப்பி வசியம் செய்கிறது உன் ஆரண்யப் ப்ரியம்' என்ற முதல் கவிதையே இந்நுாலின் தரத்திற்குச் சான்று. ஒவ்வொரு கவிதையும் ஆழமாகவும், அழகாகவும் படைக்கப்பட்டுள்ளது. மதுரையைச் சேர்ந்த ஆசிரியர் புவனா தேனா தன் முதல் புத்தகத்திலேயே 'சிக்ஸர்' அடித்து இருக்கிறார். 'இங்கிதமற்ற என் காதல் இறுமாப்புக் கொள்வதும், இறங்கி வருவதும் உனக்காக மட்டும் தான்' என்ற கவிதை தீராக்காதலை வெளிப்படுத்துகிறது. சிந்திக்க வைக்கும் சிறந்த கவிதைத் தொகுப்பு.