உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் /  எதிர்பாராததை எதிர்பாருங்கள்: நிருபர்களை குழப்பிய கமல்

 எதிர்பாராததை எதிர்பாருங்கள்: நிருபர்களை குழப்பிய கமல்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை விமான நிலையத்தில், மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல் அளித்த பேட்டி: பீஹார் சட்டசபை தேர்தலில், வெற்றியை பார்க்க வேண்டியவர்கள், வெற்றி பெற்றவர்கள். நாம் அந்த வெற்றி நேர்மையாக வந்ததா என்று பார்க்க வேண்டும். அது மாபெரும் வெற்றி தான். வெற்றியாளர்களின் சந்தோஷம் அது. அதில் நமக்கு சந்தோஷம் இருக்கிறதா என்று தான், நாம் ஆராய வேண்டும். மேகதாது அணை விவகாரம், என் சிறு வயதில் இருந்து நடக்கிறது; என் தாடியும் நிறம் மாறி விட்டது. புதிதாக கட்சி துவங்குபவர்கள் இலக்கை உயர்வாக வைத்துக் கொள்ள வேண்டும். உதாரணத்திற்கு நடிக்க வேண்டும் என்று சொன்னால், இருப்பவர்களிலேயே சிறந்த நடிகராக தன் பிள்ளை வர வேண்டும் என பெற்றோர் நினைப்பர். ஏழையாக இருப்பவர்கள் கூட தன் பிள்ளைகளை கொஞ்சும் போது மகாராசன் என்று தான் கொஞ்சுவர். ஆசை அனைவருக்கும் இருக்கும். நானும், ரஜினியும் இணைந்து நடிக்க கதை தேடிக் கொண்டிருக்கிறோம். தற்போது என் தயாரிப்பில், அவர் நடிக்கிறார். எதிர்பாராததை எதிர்பாருங்கள். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









புதிய வீடியோ