ஈ.டி., சிறப்பு பிளீடர்கள் பதவிக்காலம் நீட்டிப்பு
சென்னை : தமிழகம், கேரளா, தெலுங்கானா உட்பட நாடு முழுதும், அமலாக்கத்துறை சார்பில் ஆஜராகும் சிறப்பு பிளீடர்களின் பதவி காலம் நீட்டிக்கப்பட்டு உள்ளது.குஜராத், கர்நாடகா, ஜார்க்கண்ட், டில்லி, என, நாடு முழுதும் சட்டவிரோத பணப்பரிமாற்ற தடைச்சட்ட வழக்குகளில், அமலாக்கத்துறை சார்பில் 141 வழக்கறிஞர்கள் ஆஜராகி வருகின்றனர்.இவர்களின் பதவிக்காலத்தை, மத்திய நிதி அமைச்சகம் நீட்டித்துள்ளது. இதன் விபரம், மத்திய அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது.தமிழகத்தில் சென்னை உயர் நீதிமன்றத்தில், அமலாக்கத்துறை சார்பில் சிறப்பு பிளீடர்களாக என்.ரமேஷ், பி.சித்தார்த்தன், சசிகுமார், ரஜினிஷ் பதியில், சிபி விஷ்ணு, என்.விநாயகம், வி.பாரிவள்ளல் ஆகியோர் ஆஜராகி வருகின்றனர்.இவர்களில் பாரிவள்ளலுக்கு அடுத்த ஆண்டு ஜூலை வரையும், விநாயகத்திற்கு, 2027 ஜூன் வரையும், மற்றவர்களுக்கு 2027 மார்ச் வரையும், பதவி காலம் நீட்டிக்கப்பட்டுள்ளது.கடந்த 2015 முதல் சிறப்பு பிளீடராக உள்ள என்.ரமேஷ், அமைச்சர் செந்தில் பாலாஜி, ஜாபர் சாதிக் உள்ளிட்ட முக்கிய வழக்குகளில் ஆஜராகி வருவது குறிப்பிடத்தக்கது.