உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / நீண்ட கால நிலுவை கடன் வசூல் கூட்டுறவு துறை அவகாசம் நீடிப்பு? 

நீண்ட கால நிலுவை கடன் வசூல் கூட்டுறவு துறை அவகாசம் நீடிப்பு? 

சென்னை:தமிழகத்தில், கூட்டுறவு வங்கிகள் மற்றும் தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கங்களில், பல்வேறு பிரிவுகளின் கீழ் கடன்கள் வழங்கப்படுகின்றன. கடன் வாங்கிய பலர், அசல், வட்டி செலுத்தாமல் நீண்ட காலமாக நிலுவை வைத்துள்ளனர். அவர்கள் கடன்களுக்காக வழங்கிய சொத்து ஆவணங்கள் வங்கிகளில் உள்ளன.ஒவ்வொருவரும் செலுத்த வேண்டிய வட்டி, அபராத வட்டி உள்ளிட்டவை சேர்த்து அசலுடன், 15 - 16 சதவீதம் வட்டி செலுத்த வேண்டி இருந்தது. எனவே, நீண்ட காலமாக நிலுவையில் உள்ள தவணை தவறிய பண்ணை சாரா கடன்களை வசூலிக்க, சிறப்பு கடன் தீர்வு திட்டம், 2023ல் துவக்கப்பட்டது. அத்திட்டத்தின் கீழ், அபராத வட்டி, இதர செலவுகள் தள்ளுபடி செய்யப்பட்டு, கடன் தொகைக்கு, 9 சதவீத வட்டி நிர்ணயிக்கப்பட்டது. அதன்படி, சிறப்பு கடன் தீர்வு திட்டத்தில், 2.69 லட்சம் பயனாளிகள் தகுதி பெற்றனர். அவர்கள் செலுத்த வேண்டிய தொகை, 919 கோடி ரூபாய். சிறப்பு திட்ட அவகாசம், கடந்த மார்ச் மாதத்துடன் முடிவடைந்தது. அதில், 45,174 பேர் வாயிலாக, 166 கோடி ரூபாய் மட்டும் வசூலானது.இதுகுறித்து, கூட்டுறவு துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், 'எதிர்பார்த்த அளவுக்கு தகுதி பெற்ற கடன்தாரர்கள், நீண்ட கால கடன்களை செலுத்த முன்வரவில்லை. இன்னும் அவகாசம் கோரினர். 'எனவே, சிறப்பு கடன் தீர்வு திட்டத்தின் அவகாசத்தை, மேலும் ஆறு மாதங்கள் நீட்டிக்குமாறு, தமிழக அரசிடம் அனுமதி கேட்கப்பட்டு உள்ளது' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

R.RAMACHANDRAN
ஏப் 20, 2025 07:17

ஒவ்வொரு சட்ட சபை தேர்தலின் போதும் கூட்டுறவு வங்கிகளில் வாங்கிய கடனை தள்ளுபடி செய்வதாக சொல்லி செயல்படுத்துவதால் இந்நிலை.


சமீபத்திய செய்தி